டிராய் முடிவால் ஜியோ அதிர்ச்சி: ஏர்டெல், வோடோபோன் மகிழ்ச்சி!

|

ஜனவரி 2020 முதல் தொடங்கவிருந்த ஜீரோ இண்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணங்கள் (ஐ.யூ.சி) என்ற முறையை அமல்படுத்துவதன் மூலம் தொலைத் தொடர்பு துறை சீராக வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இந்த விஷயத்தை ஒருவர் கூறியுள்ளார். இந்த புதிய முறை இன்றில் இருந்தே தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

 பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல்

வோடபோன், ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்த ஜீரோ இண்டர்கனெக்ட் முறையை அமல்படுத்துவதை ஒத்திவைத்தனர், ஏனெனில் அவர்கள் வருவாய் ஈட்டுபவர்களாக உள்ளனர். ஆனால் தொகை செலுத்தும் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ, இந்த ஒத்திவைப்பை எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ இண்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணங்கள்

ஜீரோ இண்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணங்கள்

கடந்த செப்டம்பர் மாதம் தொலைதொடர்பு கட்டுப்பாட்டாளர் ஜீரோ இண்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணங்கள் (ஐ.யூ.சி) முறையை அமல்படுத்துவதை தள்ளிவைப்பது குறித்த ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். அதில் பயன்பாட்டாளர்கள் இந்த விஷயம் முழு அளவில் சென்று சேரவில்லை என்றும், தொலைத்தொடர்பு துறை ஆபரேட்டர்களுக்கிடையில் அழைப்புகளை பரிமாறி கொள்வதில் ஏற்றத்தாழ்வு இன்னும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இதுகுறித்த ஆய்வறிக்கையில் கூறியபோது, 'இந்த முறை அமல்படுத்துவதன் காலத்தை ஜனவரி 2020 என்பதை திருத்துவதன் அவசியம் குறித்து பங்குதாரர்களின் கருத்துக்களைக் கோரியதாகவும், ஜீரோ இண்டர்கனெக்ட் முறையில் கட்டணம் விதிமுறைக்கு மாற்று தேதியை அறிவிக்கவிருப்பதாகவும் கூறியது.

 ஜனவரி முதல்

ஜனவரி முதல்

எனவே தற்போதைய நிலையில் அழைப்பு எந்த நிறுவனத்தில் இருந்து தொடங்குகிறதோ அந்நிறுவனம் கால் பெறும் ஆபரேட்டருக்கு ஜீரோ இண்டர்கனெக்ட் இணைப்பு கட்டணம் செலுத்தப்படுகிறது. . ஆனால் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய முறையின் கீழ், அழைப்பு தொடங்கும் நிறுவனம் பணம் அளிக்கவும், அழைப்பு முடியும் நிறுவனம் பணம் பெறும் நிலையிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

Read more about:
English summary
Trai may soon have 'good news' for Airtel, Vodafone and 'bad' for Reliance Jio : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X