TRAI அதிரடி உத்தரவு.. BSNL, Jio, Airtel, Vi-க்கு ஏப்ரல் 1 முதல் கவேர்ஜ் மேப்ஸ் கட்டாயம்.. மக்களே கவனியுங்க..
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) டெலிகாம் பயனர்களுக்கு உதவும் விதமாக, ஒரு புதிய விதியை அதிரடியாக கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் இந்த புதிய விதியை கட்டாயம் ஏப்ரல் 1, 2025 ஆம் தேதிக்குள் பின்பற்றி இருக்க வேண்டுமென்று TRAI உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதி எதற்காக? இது எப்படி மக்களுக்காக உதவப்போகிறது என்பதை பார்க்கலாம்.
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் (Indian telecom companies) சில காலமாக மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு சேவை வழங்க வேண்டிய நிறுவனங்கள் மக்கள் தேவைகளை அறிந்து செயல்படாமல், பல்வேறு அடிப்படை விதிகளை கூட பின்பற்றாமல் ஏனோதானோ என்று செயல்பட்டு வருவதாக புகார்கள் (compalints) தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்தும் விதமாக TRAI பல்வேறு புதிய விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

TRAI போட்ட அதிரடி உத்தரவு.. BSNL, Jio, Airtel, Vi-க்கு ஏப்ரல் 1 முதல் கவேர்ஜ் மேப்ஸ் கட்டாயம்
இந்தியாவை பொறுத்தவரையில் சுமார் 1.2 பில்லியன் மொபைல் பயனர்கள் (mobile users) தொலைத்தொடர்பு சேவையுடன் இணைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதில் இருக்கும் மக்கள், அவர்களுக்கு விருப்பமான டெலிகாம் நெட்வொர்க்கை (telecom networks) தேர்வு செய்து மொபைல் சேவையை (mobile service) பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக ஜியோ (Jio) செயல்பட்டு வருகிறது. அடுத்தபடியாக ஏர்டெல் (Airtel) அதிக எண்ணிக்கையிலான பயனர்களை கொண்டுள்ளது.
இறுதியில் பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நெட்வொர்க்கை மக்கள் தேர்வு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதில் எந்த நெட்வொர்க் சிறப்பாக (which network is working best in your area) செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போனது. இதனால், மக்கள் ஒவ்வொரு முறையும் 2 அல்லது 3 புதிய சிம் கார்டுகளை (new SIM card) வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.
நெட்வொர்க் கவரேஜ் மேப்ஸ் எதற்க்கு முக்கியம்? இது மக்களுக்கு எப்படி உதவும்?
இப்படி வாங்கிய சிம் கார்டுகள், அந்தந்த பகுதிகளில் பயன்படுத்திய பிறகு எந்த சிம் கார்டின் நெட்வொர்க சிறப்பாக (SIM card network) செயல்படுகிறது என்று மக்களே தங்களின் நேரத்தை செலவழித்து கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது. இந்த செயலால் மக்களுக்கு நேரம் அதிகமாக விரையமாகிறது (waste of time) மற்றும் புது சிம் கார்டுகளை வாங்கும் பொழுது பணமும் வீணாகிறது (waste of money).
இந்த சிக்கலை தவிர்ப்பதற்காக, டெலிகாம் நிறுவனங்கள் உடனே நெட்வொர்க் கவரேஜ் மேப்ஸ்களை மக்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும் என்று TRAI உத்தரவிட்டுள்ளது. BSNL, Jio, Airtel, Vi போன்ற நிறுவனங்கள் உடனே அவர்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நெட்வொர்க் கவரேஜ் மேப்ஸ் (network coverage maps) தகவலை பதிவிட வேண்டுமென்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உத்தரவிட்டுள்ளது.
2G, 3G, 4G மற்றும் 5G எல்லாமே நெட்வொர்க் கவரேஜ் மேப்ஸ் இல் தெரியுமா?
இந்த டிராய் உத்தரவின் விளைவாக, இந்த டெலிகாம் நிறுவனங்கள் இப்போது அவர்களுடைய 2ஜி (2G), 3ஜி (3G), 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) கவரேஜை விவரிக்கும் புவியியல் வரைபடங்களைக் காண்பிக்க வேண்டியிருக்கும், இதன் விளைவாக இனி பொதுமக்கள் மற்றும் டெலிகாம் பயனர்கள் (telecom users), தங்கள் பகுதியில் கிடைக்கும் கவரேஜை அடிப்படையாகக் கொண்டு சிம் கார்டுகளை வாங்கி தங்களுக்கான நெட்வொர்க் ஆபரேட்டர் யார் என்பதை நொடியில் தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த புதிய விதியின் படி, பிஎஸ்என்எல் (BSNL), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 1, 2025 ஆம் தேதிக்குள், அவர்களுடைய அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் (official websites) மற்றும் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்ஸ்களில் (mobile apps) இனி கட்டாயம் நெட்வொர்க் கவரேஜ் மேப்ஸ்களை காண்பிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








