அடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! டிராய்.!
டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மொபைல் பயனர்களுக்கு நிவாரணம் மிக்க ஒரு அருமையான செய்தியை அளித்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப்ப பார்போம்.

அதாவது ஒரு சிம் மூலம் தினசரி 100எஸ்எம்எஸ் அனுப்பும் FUP வரம்பை டிராய் (TRAI) ரத்து செய்துள்ளது, பின்பு100எஸ்எம்எஸ் பின்னர் அனுப்பப்பட்ட எஸ்எம்எஸ் மீதான 50 பைசா கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தினசரி 100-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ்-கான கட்டண விதிமுறை தொடர்பாக தொலைத்தொடர்பு கட்டண (65-வது திருத்தம்) ஆணை 2020 என்ற வரைவை டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி 100எஸ்எம்எஸ் தினசரி வரம்பிற்குப் பிறகு 50பைசா கட்டணத்தை வைததிருக்க வேண்டிய அவசியமில்லை என்று டிராய் நம்புகிறது, ஏனெனில் ஸ்பேம் எஸ்எம்எஸ் கண்டறிய போதுமான தொழில்நுட்பம் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

2012-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த விதி?
தற்போது வரை, தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் தினசரி 100எஸ்எம்எஸ் வரம்பிற்குப் பிறகு ஒரு எஸ்எம்எஸ் ஒன்றுக்கு குறைந்தது 50பைசா வசூலிக்கிறார்கள். இந்த விதி 2012ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. பின்பு UCC (கோரப்படாத வணிக தொடர்புகள்) இலிருந்து தொலைதொடர்பு சந்தாதாரர்களைப் பாதுகாக்க TRAI தினசரி 100 SMS வரம்பை நிர்ணயித்திருந்தது.

இதுதவிர சில ஆண்டுகளுக்கு முன்பு டிராய் பயனர்களுக்கான DNDசேவையையும் தொடங்கியது. இதன் மூலம் பயனர்கள்தங்கள் எண்களில் விளம்பரம் தொடர்பான செய்திகளை நிறுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பத்தால் வந்த மாற்றம்
அதாவது ஸ்பேம் எஸ்எம்எஸ் தடைசெய்ய புதிய வழிகளை அறிமுகப்படுத்த நிறுவனங்களை டிராய் வலியுறுத்துகிறது, கடந்த 2019-ஆம் ஆண்டு UCC-யை தடை செய்ய TCCCPR-யை TRAI அறிமுகப்படுத்தியது இந்த அமைப்பு. மேலும் இதுபற்றிடிராய் அமைப்பு கூறுகையில், TCCCPR 2018--ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புதொழில்நுட்பம் சார்ந்ததாகும். இந்த ஸ்பேம் எஸ்எம்எஸ் கட்டுப்படுத்த முடியும். உண்மையில் ஸ்பேம் எஸ்எம்எஸ் தடைசெய்ய டிராய் அமைப்பு 50பைசா கட்டணம் விதித்தது. ஆனால் இந்த கட்டணம் TCCCPR (டெலிகாம் கமர்ஷியல் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள்) இன் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டது, எனினும் அது தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்த அட்டகாச முடிவை செயல்படுத்த டிராய் தொலைத்தொடர்பு கட்டண(65-வது திருத்தம்) உத்தரவு, 2020-ஐ உருவாக்கியது,இந்த ஆண்டில் எஸ்எம்எஸ் தொடர்பான பொருந்தக்கூடிய விதிகளை திரும்பப் பெற முன்மொழியப்பட்டது.

அதன்படி தினசரி 100எஸ்எம்எஸ் அதன் பின்னர் அனுப்பப்படும் எஸ்எம்எஸ்-க்கு 50 பைசா கட்டணத்தை நீக்க டிராய் முன்மொழிந்ததுஎன்பதே பொருள். இதற்குவேண்டி மார்ச் 3-ம் தேதி தேதிக்குள் பங்குதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துக்களையும், மார்ச் 17-க்குள் எதிர் கருத்துகளையும் டிராய் கேட்டு கொண்டது. இதற்குபின்பு தான் டிராய் இந்த முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications