Home
News

TRAI கோவம்.. Jio, Airtel, Vi உங்களுக்கு இது விளையாட்டா? 7 நாள் தான் டைம்.. விலை மாறும் வாய்ஸ், SMS திட்டம்..

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) சமீபத்தில் இந்தியாவில் உள்ள அணைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை (Voice and SMS only) மட்டும் அறிமுகம் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்று ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தன, ஆனால், மிகவும் அதிகமான விலை மதிப்புடன் இந்த திட்டத்தை அறிமுகம் செய்தன. இதனால், (TRAI) டிராய் கடுப்பானது.

மக்கள் மீது டெலிகாம் நிறுவனங்கள் சகட்டுமேனியாக விலை ஏற்றத்தை கட்டாயப்படுத்துவதும், டேட்டா நன்மை தேவையில்லாத (no need of data benefit) பியூச்சர் போன் (feature phone) பயனர்களுக்கும் கூட வலுக்கட்டாயமாக டேட்டா நன்மையை திணிப்பது போன்ற செயல்களை மனசாட்சி இல்லாமல் செய்து வந்ததை TRAI கண்டித்து. பொதுமக்கள் அளித்த பல புகார்களை (public complaints to TRAI) தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சில ஒழுங்குமுறை நடவடிக்கையை கையில் எடுத்து.

TRAI கோவம்.. Jio, Airtel, Vi உங்களுக்கு இது விளையாட்டா? 7 நாள் டைம்..

TRAI கோவம்.. Jio, Airtel, Vi உங்களுக்கு இது விளையாட்டா? 7 நாள் தான் டைம்:

இதன் படி, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை பின்பற்றி (New rules from TRAI) உத்தரவிட்டது. இதன் படி, அணைத்து இந்திய டெலிகாம் நிறுவனங்களும் அதன் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா நன்மை இல்லாத வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மையை மட்டும் வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (voice and SMS only prepaid recharge plans) திட்டங்களை வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

குறிப்பாக, 2ஜி போன் (2G phone) அல்லது டேட்டா நன்மை தேவையேப்படாத வாடிக்கையாளர்களின் மீது வலுக்கட்டாயமாக டேட்டா நன்மை மற்றும் அதற்கான கூடுதல் கட்டணங்கள் வாடிக்கையாளர்கள் மீது திணிக்கப்படுவதை முற்றிலுமாக டெலிகாம் நிறுவனங்கள் உடனே நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்ய முடியாத வடிக்கையாளர்களுக்காக மலிவு விலையில் டேட்டா நன்மை இல்லாத வாய்ஸ் மற்றும் SMS நன்மை அடங்கிய திட்டங்களை (low price voice and SMS only plans) வழங்கவும் டிராய் உத்தரவிட்டது.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi), வோடபோன் ஐடியா (Vodafone Idea) புதிய Voice & SMS ஒன்லி திட்டங்கள்:

டிராய் வழங்கிய உத்தரவை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் பின்பற்றுவதாக உறுதிமொழி அளித்து, அந்தந்த நெட்வொர்க்கின் கீழ் டெலிகாம் நிறுவனங்கள் (telecom companies) சில தினங்களுக்கு முன்னால் புதிய வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்தன. ஜியோ நிறுவனம் 2 வாய்ஸ் & SMS ஒன்லி திட்டங்களையும், ஏர்டெல் நிறுவனம் 2 திட்டங்களையும் அறிமுகம் செய்தன.

வோடபோன் ஐடியா நிறுவனம் மட்டுமே ஒரே ஒரு திட்டத்தை மட்டும் அறிமுகம் செய்திருந்தது. இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகம் செய்த, புதிய வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்கள் ரூ. 400 விலை முதல் துவங்கி ரூ. 1000 விலைக்கு மேல் சென்றது (New Jio, Airtel, Vi voice and SMS only plan from Rs 400 to Rs 1000) என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு உதவும் வகையில், குறிப்பிக மலிவு விலையில் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை வழங்க வேண்டுமென்று தான் TRAI புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

7 நாள் தான் டைம்.. விலை திருத்தத்துடன் புதிய மலிவு விலை திட்டங்கள் வரவேண்டும்:

ஆனால், பிரைவேட் டெலிகாம் நிறுவனங்கள் (TRAI private telecom rules) அதை கருத்தில்கொள்ளாமல், மீண்டும் மக்கள் மீது விலை உயர்ந்த திட்டங்களை திணிக்க பார்ப்பதை TRAI மிகவும் கோபமாக கண்டித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் (7 days time to change price of voice and SMS plans) வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களில் சரியான விலை மதிப்புடன், மலிவான விலை திட்டங்களை டெலிகாம் நிறுவனம் அறிமுகம் செய்ய வேண்டுமென்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இதனால், மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் வரும் வாரத்தில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்காக உதவும் நோக்கத்தில் டிராய் வெளியிட்ட புதிய விதிமுறையை தனியார் பிரைவேட் நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் மீண்டும் அலட்சியமாக பயன்படுத்த முயன்றதை தொடர்ந்து TRAI கோபமாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI Gives 7 Days Time To Rechange Price Of Voice and SMS Only Packs To Be Cheaper Jio Airtel Vi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X