Jio, Airtel, BSNL, Vi சிம் இருக்கா? TRAI வழங்கும் இலவச ரீசார்ஜ்.. கவனமா இருங்க.. TRAI அட்வைஸ் உடன் எச்சரிக்கை
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உங்கள் போனில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL), விஐ (Vi) என்று பெயர்மாற்றப்பட்ட வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு நெட்வொர்க் சிம் கார்டை நீங்கள் பயன்படுத்தினாலும், இந்த தகவல் மிகவும் முக்கியமானது. இன்னும் குறிப்பாக இலவச ரீசார்ஜ் சலுகையை (Free recharge offers) பெற விரும்பும் மக்களுக்கு இது மிகமுக்கியமான தகவல் என்று TRAI கூறியுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அணைத்து மொபைல் போன் பயனர்கள் (mobile phone users) மற்றும் அணைத்து நெட்வொர்க் சிம் கார்டு (all network SIM card users) பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது, 'TRAI வழங்கும் இலவச ரீசார்ஜ் சலுகை' என்ற பெயரில் புதிய மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த மோசடி குறித்த எச்சரிக்கை செய்தியை தற்போது TRAI வெளியிட்டுள்ளது.

Jio, Airtel, BSNL, Vi சிம் இருக்கா? TRAI வழங்கும் இலவச ரீசார்ஜ்.. கவனமா இருங்க:
TRAI வழங்கும் இலவச ரீசார்ஜ் சலுகை (TRAI free recharge scam) என்ற பெயரில் சமீபகாலமாக மோசடி செய்பவர்கள் சில எஸ்எம்எஸ் அல்லது குறுஞ்செய்திகளை (SMS or message) தனிநபர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். இலவச ரீசார்ஜ் என்றதும் மக்கள் அந்த மெசேஜ்ஜை உடனே ஓபன் செய்துவிடுகிறார்கள். TRAI என்ற போலியான அடையாள பெயருடன் பொதுமக்களின் மொபைல்களுக்கு இந்த மோசடி மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
பொதுமக்களை இலவசம் (Free) என்ற பெயரில் ஏமாற்றும் முயற்சியில் இந்த மோசடி (scam) நடைபெற்று வருகிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இதுபோன்ற சலுகைகள் எதுவும் TRAI இலிருந்து அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்றும், இந்த செய்திகளை எதிர்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அணைத்து மொபைல் மற்றும் அணைத்து நெட்வொர்க் சிம் கார்டு பயனர்களை எச்சரித்துள்ளது.
TRAI இலவச ரீசார்ஜ் சலுகை மெசேஜ்ஜை ஏன் கிளிக் செய்ய கூடாது?
இந்த போலியான இலவச ரீசார்ஜ் சலுகை மெசேஜ்ஜை (fake free recharge message) தெரியாமல் திறக்கும் பொதுமக்களுக்கு என்ன ஆபத்து நேரிடும் என்பதையும் தெரிந்துகொள்ளும்படி TRAI சில தகவலை வெளியிட்டுள்ளது. TRAI வழங்கும் இலவச ரீசார்ஜ்ஜை பெற இந்த லிங்கை (link) கிளிக் செய்யவும் என்று அந்த மெசேஜ்ஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மெசேஜ் உடன் வரும் லிங்கை பயனர்கள் ஒருமுறை கிளிக் செய்தவுடன் அவர்களின் சாதனம் ஹேக் (hack) செய்யப்படுகிறது.
மறைமுறைகமாக பின்னணியில் இயங்கக்கூடிய மால்வேர் (malware) மற்றும் போல்ட்வேர் (bloatware) அமைப்புகள் பயனரின் போனில் நிறுவப்படுகிறது. இதன் மூலம், பயனர்களின் போனில் உள்ள அணைத்து விதமாக தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்கள் திருடிக்கொள்கிறார்கள். குறிப்பாக, போனில் உள்ள காண்டாக்ட் தகவல் (contacts), புகைப்படம் (photos), வங்கி விபரம் (banking details) போன்றவரை திருடப்படுகிறது.
மோசடி குறித்து புகார் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
இதை வைத்து உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் திருடப்படும் வாய்ப்பு அதிகமாவுள்ளது என்று TRAI எச்சரித்துள்ளது. அதேபோல், உங்கள் போனில் இருந்து திருடப்பட்ட தகவல்களை வைத்து மோசடி செய்பவர்கள், உங்களை மிரட்டி, பிளாக்மெயில் செய்தும் பணம் பறிக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக TRAI அட்வைஸ் செய்துள்ளது. ஆகையால், இலவச ரீசார்ஜ் செய்ய பெயரில் மெசேஜ் வந்தால், https://Cybercrime.gov.in அல்லது https://sancharsaathi.gov.in என்ற தளங்களில் புகார் அளிக்கும்படி TRAI தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








