Home
News

சுத்தமான உருட்டு.. BSNL பற்றிய உண்மையை உடைத்த TRAI.. கஸ்டமர்ஸ் இப்போ என்ன பண்ண போறாங்களோ?

இந்தியாவில் 4ஜி பழையதாகி விட்டது; 5ஜி அறிமுகமாகி விட்டது. இருப்பினும். இன்னமும் 2ஜி / 3ஜி சேவைகளை மட்டுமே (பிரதானமாக) வழங்கி கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் எப்படி இவ்வளவு கஸ்டமர்கள் உள்ளனர்? என்று ஏதேனும் ஒரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளரிடம் கேட்டு பாருங்களேன்.

"பிஎஸ்என்எல்-ன் தரம் வேறு எந்த தனியார் நெட்வொர்க்கிடமும் இல்லை..", "டூயல் சிம் கார்டுகளை பயன்படுத்துவார்களே தவிர, எந்தவொரு பிஎஸ்என்எல் கஸ்டமரும் முழுமையாக வேறொரு தனியார் நெட்வொர்க்கிற்கு மாற மாட்டார்கள்", அதாவது பிஎஸ்என்எல் சேவையை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள் என்றெல்லாம் கூறுவார்கள்!

உண்மையை உடைத்த TRAI.. BSNL கஸ்டமர்ஸ் இப்போ என்ன பண்ண போறாங்களோ?

அதெல்லாம் "செக்குல ஆட்டுனா சுத்தமான உருட்டு" என்று கூறும்படியாக.. அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனத்தின் உண்மையான நிலை இது தான் என்கிற அப்பட்டமான உண்மையை உடைக்கும்படியான ஒரு தகவல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) வழியாக கிடைத்துள்ளது.

டிராய் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 13 மாதங்களில் நடக்காத ஒரு சம்பவம் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் நடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் மொத்தம் 1.5 மில்லியன் வயர்லெஸ் பயனர்களை இழந்துள்ளது. அதாவது 15 லட்சம் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்-ஐ கைவிட்டுள்ளனர்.

கடந்த 13 மாதங்களில், ஒரே மாதத்தில் இவ்வளவு பயனர்கள் வெளியேறியதே இல்லையாம். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்த பிறகு, பிஎஸ்என்எல்-ன் ஒட்டுமொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 105.23 மில்லியனாக குறைந்ததுள்ளது. இது 100 மில்லியனுக்கும் கீழே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

தனியார் நிறுவனமான வோடபோன் ஐடியாவை (Vodafone Idea - Vi) போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட, பல மாதங்களாகவே பயனர்களை சேர்க்க முடியாமல் / தக்கவைக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் - இந்த இரண்டு நிறுவனங்களிடமுமே அதிவேக 4ஜி நெட்வொர்க்குகள் இல்லை.

ஜியோ மற்றும் ஏர்டெல்லின் வழியாக ஒட்டுமொத்த இந்தியாவும் 5ஜி-ஐ நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், 5ஜி சேவைகளை அணுக முடியாத நுகர்வோர்கள் குறைந்தபட்சம் 4ஜி நெட்வொர்க் உடனகவாவது இணைந்திருக்க விரும்புவார்கள். ஆனால் தற்போது வரையிலாக பிஎஸ்என்எல் 2ஜி / 3ஜி நெட்வொர்க்கை மட்டுமே வழங்குகிறது!

பாவம் பிஎஸ்என்எல் கஸ்டமர்களும் எவ்வளவு காலம் தான் காத்திருப்பார்கள். "இப்போ வரும் அப்போ வரும்" என்று கூறி, கடந்த பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம் செய்யபபடவில்லை. இந்த காரணத்திற்காகவே 15 லட்சம் பிஎஸ்என்எல் கஸ்டமர்களில் 'ஜம்ப்' அடித்து விட்டனர் என்று கூறினால், அதை மறுப்பதற்கு ஆள் இல்லை!

இருப்பினும் பிஎஸ்என்எல்-ன் இந்த நிலை கூடிய விரைவில் மாறலாம். ஏனென்றால் இந்நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) மற்றும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 4ஜி-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனமானது 5ஜி-க்கு மேம்படுத்தக்கூடிய 4ஜி ஸ்டேக்கைப் பயன்படுத்தப்போகிறது. அதாவது பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகமானதும், கூடிய விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி-யும் அறிமுகமாகும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகமாகும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI Data Reveals BSNL Lost 15 Lakhs Wireless Users Reasons
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X