போட்டுக்கொடுத்த ஜியோ : ஏர்டெல் நிறுவனத்திற்க்கு 7நாள் கெடு.!

கண்டிப்பாக ஏர்டெல் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தங்களது குறிபிட்ட கட்டணத்தை தாக்கல் செய்ய வேண்டும் அதுவும் இந்த ஏழு வேலை நாட்களுக்குள்.!

By Prakash
|

ஒழுங்குமுறை டிராய் நிறுவனம், சந்தாதாரர்களுக்கு பாரபட்ச வரிகளை வழங்குவதை தடுத்து நிறுத்துமாறு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது, இந்த ஏழு நாட்களுக்குள் அந்த துறையின் கண்காணிப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என ஜியோ கூறியுள்ளது.

சில டெலிகாம் ஆபரேட்டர்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பாரபட்சமான கட்டணத்தை வழங்குகிறது. என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜியோ புகார் தெரிவித்துள்ளது.

டிராய் :

டிராய் :

ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மீது பல புகார்களை அளித்தது. தொலைதொடர்பு நிறுவனங்களை தவறாக வழிநடத்தும் சலுகைகள் வழங்கியதன் மூலம் டிராய் அமைப்பிற்க்கு பல்வேறு சிக்கல் வந்துள்ளது. இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஏர்டெல் நிறுவனம்:

ஏர்டெல் நிறுவனம்:

ஏர்டெல் நிறுவனம் ரூ. 293 மற்றும் ரூ .449 விலையில் இரண்டு திட்டங்களை தவறாக வழிநடத்தி வருகின்றன, என்று முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் டிராய் அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் சலுகை:

ஏர்டெல் சலுகை:

இந்த சலுகையை பொருத்தமாட்டில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது என்னவென்றால் 70 நாட்களுக்கு குறிப்பிட்ட டேட்டா சலுகையை மட்டும் வழங்குகிறது, இவை ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவுகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இவை வருங்கால வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியாகும். என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூழ்ச்சி :

சூழ்ச்சி :

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அனைத்து ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களையும் முழுமையாக கடைப்பிடித்து வருவதாகக் கூறியுள்ளார், மேலும் இந்த குற்றச்சாட்டுகள், நெட்வொர்க் குறைபாடுகள் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் நிலையான சூழ்ச்சி தான் காரணம். என ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சலுகைகள்:

சலுகைகள்:

நுகர்வோருக்கு வழங்கப்படும் அனைத்து கட்டணங்களும் 1999 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு ஆணையம் கட்டண விதிமுறைகளின் கீழ் பின்பற்றப்படுகின்றன, அனைத்து நிறுவனங்களின் எல்லா கட்டணத் திட்டங்களும், மேலும் இலவசங்கள், சலுகைகள் போன்றவை தெரிவிக்கப்பட வேண்டும் என்று டிராய் அமைப்பு தற்ப்போது தெரிவித்துள்ளது.

 ஏழு வேலை நாட்களுக்குள்:

ஏழு வேலை நாட்களுக்குள்:

கண்டிப்பாக ஏர்டெல் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தங்களது குறிபிட்ட கட்டணத்தை தாக்கல் செய்ய வேண்டும் அதுவும் இந்த ஏழு வேலை நாட்களுக்குள், என டிராய் அமைப்பு கூறியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
TRAI bars discriminatory tariffs against subscribers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X