Home
News

TRAI விளக்கம்.. ரூ.20 க்கு 90 நாள் சேவை கிடைக்கும் என்பது தவறான தகவல்.. Jio, Airtel யூசர்கள் நம்ப வேண்டாம்!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது வெறும் ரூ.20 க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 90 நாட்களுக்கு சேவைகளை பெற வழிவகுக்கும் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது என்று வெளியான தகவல் உண்மை அல்ல என்று தெரியவந்துள்ளது.

இதன் கீழ் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) என நாட்டில் உள்ள அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களுக்கும் ஆட்டோமெட்டிக் நம்பர் ரிடென்க்ஷன் (Automatic Number Retention Scheme) என்கிற திட்டத்தை டிராய் அறிவித்து உள்ளது என்று தகவல் வெளியாகி இருந்தது; அது உண்மை அல்ல என்று டிராய் விளக்கம் அளித்துள்ளது.

TRAI விளக்கம்.. ரூ.20 க்கு 90 நாள் சேவை கிடைக்கும் என்பது தவறான தகவல்!

முன்னதாக டிராய்-யின் இந்த விதிகளின்படி, 90 நாட்களுக்கு உங்கள் சிம் கார்டில் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் பிற சேவைகளை பயன்படுத்தாமல் இருந்தால், சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க எந்த ரீசார்ஜையும் செய்யவில்லை என்றால் உங்கள் சிம் கார்டுக்கான சேவைகள் துண்டிக்கப்படும் என்றும், இந்த கட்டத்தில், குறிப்பிட்ட டெலிகாம் ஆபரேட்டர் ஆனது உங்கள் பெயரிலிருக்கும் நம்பர் நம்பரை மற்ற வாடிக்கையாளருக்கு வழங்கலாம் என்றும், இனிமேல் இப்படி நடக்காது என்றும் தகவல் வெளியானது.

இதற்காக உங்கள் ப்ரீபெய்ட் எண்ணில் குறைந்தபட்சம் ரூ.20 பேலன்ஸ் வைத்து இருப்பதன் மூலம் இதை உங்களால் தடுக்கலாம் என்றும். எடுத்துக்காட்டாக, நீங்கள் 90 நாட்களுக்கு உங்கள் சிம் கார்ட்டின் கீழ் எந்த சேவைகளையும் பயன்படுத்தாவிட்டால், உங்கள் பேலன்ஸ்-ல் இருந்து ரூ.20 கழிக்கப்படும். இது உங்கள் சிம் கார்டின் செல்லுபடியை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கும் என்றும் தகவல் வெளியானது.

மேலும் 30 நாள் நீட்டிப்புக்கு பிறகு, ஒவ்வொரு மாதமும் உங்கள் அக்கவுண்டில் இருந்து ரூ.20 தானாகவே கழிக்கப்படும் என்றும். உங்களிடம் போதுமான ப்ரீபெய்ட் பேலன்ஸ் இருக்கும் வரை இந்த சுழற்சி மீண்டும்-மீண்டும் நடக்கும் என்றும். ஒருவேளை உங்களிடம் போதுமான பேலன்ஸ் இல்லை என்றால், உங்கள் பேலன்ஸை நிரப்ப, உங்களுக்கு 15 நாள் அவகாசம் வழங்கப்படும் என்றும். அதற்க்குள் நீங்கள் ரீசார்ஜ் செய்ய தவறினால், உங்களுடை டெலிகாம் ஆபரேட்டர் உங்கள் சிம் கார்டை செயலிழக்க செய்யும் என்றும் தகவல் வெளியானது. இவைகள் எதுவுமே உண்மை இல்லை என்று டிராய் விளக்கம் அளித்துள்ளது.

டிராய் தொடர்பான மற்ற முக்கிய செய்திகளை பொறுத்தவரை, சமீபத்தில், எஸ்டிவி (STV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வாய்ஸ் மற்றும் மெசேஜ்களுக்கென ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special Tariff Vouchers) அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற டிராய்-ன் உத்தரவுக்கு இணங்கி ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

01. ஏர்டெல் ரூ.499 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 499 Voice and SMS Only Plan): ஏர்டெல்லின் இந்த புதிய ரூ.499 திட்டத்தின்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

02. ஏர்டெல் ரூ.1,959 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 499 Voice and SMS Only Plan): ஏர்டெல்லின் இந்த புதிய ரூ.1,959 ப்ரீபெய்ட் திட்டத்தின்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3,600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

01. ஜியோ ரூ.458 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 458 Voice SMS Only Plan Details): இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள், ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

02. ஜியோ ரூ.1,958 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1958 Voice SMS Only Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆண்டு அல்லது 365 நாட்கள் நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI Automatic Number Retention Scheme for Jio Airtel Vi BSNL How to get 90 Days Service For Rs 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X