அதிக விளம்பரம் டிவி பார்க்கும் அனுபவத்தை மோசமாக்குகிறது.. உயர் நீதிமன்றத்தில் TRAI புகார்..

|

அதிகப்படியான விளம்பரங்களால், தொலைக்காட்சி பார்க்கும் அனுபவம் மோசமடைவதாகக் கூறிய நுகர்வோரின் புகார்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டெல்லி உயர் நீதிமன்றத்தை (HC) அணுகியுள்ளது. சமீபத்திய அறிக்கையின் படி, டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்திடம் (NBA) பதில் கோரியுள்ளது.

TRAIக்கு அதிகாரம் இல்லை என்று NBA கூறுவது உண்மையா?

TRAIக்கு அதிகாரம் இல்லை என்று NBA கூறுவது உண்மையா?

விளம்பரங்களின் நீளத்தைக் கட்டுப்படுத்த TRAIக்கு அதிகாரம் இல்லை என்று NBA கூறுகிறது ஆனால், டிவி சேனல்களில் வெளிவரும் விளம்பரத்தின் நீளத்தைக் கட்டுப்படுத்தும் விதி உள்ளது என்பதே உண்மை. கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகள், 1994 (CTN/கேபிள் டிவி விதிகள்) விதி 7(11) இன் படி, எந்த ஒரு சேனலும் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்களுக்கு மேல் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று இந்த விதி தெரிவிக்கிறது.

எந்த விளம்பரங்களை எவ்வளவு நேரம் ஒளிபரப்பாலம்?

எந்த விளம்பரங்களை எவ்வளவு நேரம் ஒளிபரப்பாலம்?

இந்த 12 நிமிடங்களில் ஒரு சேனலின் சுய-விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 2 நிமிடங்கள் மற்றும் வணிக விளம்பரங்களுக்கான மற்ற 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த விதி TRAI இன் அதிகாரத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும், பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவைப் பாதிக்கிறது என்றும் NBA வாதிட்டது.

JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?

TRAIக்கு அதிகாரம் இல்லை என்று சவால்

TRAIக்கு அதிகாரம் இல்லை என்று சவால்

NBA மட்டுமல்ல, பல சேனல்கள் விளம்பரங்களின் நீளத்தைக் கட்டுப்படுத்த TRAIக்கு அதிகாரம் இல்லை என்று சவால் விட்டன. இது ஒரு மணி நேரத்தில் காட்டப்படும் விளம்பரங்களின் நீளத்தைக் கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வ ஆணை உள்ளது என்று TRAI வெறுமனே வாதிட்டுள்ளது. நாளின் முடிவில் நுகர்வோருக்குச் சிறந்ததை மட்டுமே வழங்குவதற்கு விரும்புவதாக TRAI கூறியுள்ளது. கட்டுப்பாட்டாளரின் இந்த தலையீடு நுகர்வோரின் டிவி பார்க்கும் அனுபவம் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.

டெல்லி உயர்நீதிமன்றம் இந்த புகாருக்கு என்ன பதில் அளித்துள்ளது?

டெல்லி உயர்நீதிமன்றம் இந்த புகாருக்கு என்ன பதில் அளித்துள்ளது?

டெல்லி உயர்நீதிமன்றம் NBA இன் மனுவை ஏற்கனவே நிலுவையில் உள்ளவற்றுடன் தொகுத்துள்ளது மற்றும் கட்டுப்பாட்டாளரின் தலையீட்டு விண்ணப்பத்திற்குப் பதிலளிக்குமாறு அதையும் மையத்தையும் கேட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது டிசம்பர் 23 ஆம் தேதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. TRAI இன் நகர்வு உண்மையிலேயே நுகர்வோரின் நலனுக்காக இருப்பது போல் தெரிகிறது.

வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?

தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?

மேலும், ஒரு ஆணையும் TRAI உடன் இருப்பதனால் TRAIக்கு இங்கே ஒரு உறுதியான நிலை உள்ளது என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், அடுத்தகட்ட விசாரணைக்குப் பின் தான் முடிவு எந்தப்பக்கம் தீர்ப்பாகும் என்பதை நாம் உறுதிப்படுத்த முடியும். ஆகையால், அடுத்து டிசம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் விசாரணையின் முடிவுகளை வைத்து வழக்கு யாருக்குச் சாதகமாக மாறுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
TRAI Approaches Delhi High Court For The Issue Of Excessive Ads On TV : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X