Home
News

SIM கார்டுக்கு புதிய விதி.. இனி ஈஸியா இதை செய்யவே முடியாது? ஸ்ட்ரிக்ட்டா முடிவு எடுக்கும் இந்தியா..

இந்தியாவில் இதுவரை சுமார் 1.158 பில்லியன் சிம் கார்டுகள் (SIM card) ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு எல்லாம் ஜூலை 1ம் தேதி முதல் விதி அமலுக்கு வரவிருக்கிறது. புதிய சிம் கார்டு விதிகளின் படி, இந்திய குடிமக்கள் இனி என்னென்ன மாற்றங்களை சந்திக்கபோகிறார்கள் என்பது இங்கே.

New SIM Card Rules 2024: இந்தியாவில் இப்போது ஸ்மார்ட்போன் பயணப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மாதம்-மாதம் பல புதிய சாதனங்களை தொடர்ந்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல விலை புள்ளிகளில் அறிமுகம் செய்து வருகிறது. எத்தனை விதமான ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தாலும், இவற்றை பயன்படுத்த நமக்கு ஒரு சிறிய சிம் கார்ட் தான் தேவையாகிறது.

SIM கார்டுக்கு புதிய விதி.. இனி ஈஸியா இதை செய்யவே முடியாது?

எத்தனை கோடி சிம் கார்டுகள் இந்தியாவில் புழங்குகிறது? பட்ஜெட் போனாக இருந்தாலும் சரி, பிளாக்ஷிப் போனாக இருந்தாலும் சரி, அல்லது பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, எல்லா போன்களுக்கும் சிம் கார்டு அவசியமானது. கடந்த டிசம்பர் 31, 2023 இல் வெளியான கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் சுமார் 1.158 பில்லியன் சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இப்போது இன்னும் அதிகரித்திருக்க கூடும்.

ஒரு நபர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்? இந்தியாவில் ஒரு நபர் அதிகபட்சமாக 9 சிம் கார்டு இணைப்புகளை பெறலாம் என்கிறது இந்திய தொலைத்தொடர்பின் விதி. இது பழைய கதை தான். ஆனால், இப்போது கதையே மாறிவிட்டது. சிம் கார்டுகளுக்கான தேவை மக்களிடையே அதிகரித்துவிட்டது. அதிகரித்த மக்கள் தேவையின் காரணமாக மோசடிகளும், பாதுகாப்பின்மையும் அதிகரித்துவிட்டது.

ஜூலை 1 முதல் புதிய SIM விதி: இதை உணர்ந்த இந்திய அரசாங்கம், இப்போது சிம் கார்டுகளுக்கான புதிய விதிமுறையை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆம், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய சிம் கார்டு விதிகளை இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் நிறுவவுள்ளது. ஆன்லைன் மோசடி மற்றும் ஹேக்கிங் போன்ற ஆபத்துகளில் இருந்து மக்களை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

SIM கார்டுக்கு புதிய விதி.. இனி ஈஸியா இதை செய்யவே முடியாது?

TRAI அறிவிப்பு: மார்ச் 15, 2024 அன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRAI) புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் மோசடிகளை தடுக்க முடியும் என்று TRAI கூறியுள்ளது. TRAI வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒருமுறை சிம் கார்டுகளை போர்ட் செய்த பயனர்கள், இனி அவர்களின் மொபைல் எண்ணை மீண்டும் ஒருமுறையோ அல்லது பலமுறையோ போர்ட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஒரு முறை மட்டுமே மாற்றலாம்: சிம் எக்ஸ்சேஞ் மற்றும் சிம் ஸ்வாப்பிங் என்றழைக்கப்படும் சிம் தொடர்பான மாற்றங்களை, இனி ஒரு நபர் ஒரு முறை மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது உடைந்தாலோ அருகில் இருக்கும் டெலிகாம் சேவை மையத்தை அணுகி பயனர்கள் புதிய சிம் கார்டை வாங்குவது வழக்கமான ஒன்று தான் என்றாலும் இனி இது நடக்காது.

இனி சிம் கார்டுக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்: சிம் தொடர்பான மோசடி இந்தியாவில் அதிகரிக்க சிம் ஸ்வாப்சிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால், மக்கள் சிம்களை மாற்றுவதையோ அல்லது மொபைல் இணைப்பை மாற்றிய உடனேயே போர்ட் செய்வதையோ தடுக்கும் வகையில் புதிய விதி அமலுக்கு வர உள்ளது. மோசடிக்காரர்கள், மக்களின் போலி ஆதார் மற்றும் பான் அடையாளங்களை வைத்து போலி சிம் கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

அடுத்து என்ன விதி அமல்? ஆகையால், இனி ஒரு முறைக்கு மேல் சிம் கார்டுகளை மக்கள் மாற்ற முடியாது. அதேபோல், விரைவில் ட்ரூகாலர் இல்லாமலே, வாய்ஸ் கால்களில் அழைப்பு விடுக்கும் நபரின் பெயர் விபரங்களை பிரதிபலிக்கும் திட்டத்தையும் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளன கூறப்பட்டுள்ளது. ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TRAI announced about new SIM card rules implementation from July 1st in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X