TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்! ஏன் என்று தெரியுமா?

|

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்-TRAI), இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்கு எண்ணை 11 இலக்கு எண்ணாக மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளது. இந்த திடீர் ஆலோசனைக்கான காரணம் என்ன என்பதையும் டிராய் விளக்கியுள்ளது.

தேவை எண்ணிக்கை அதிகரிப்பு

தேவை எண்ணிக்கை அதிகரிப்பு

தொலைப்பேசி இணைப்புகளின் தேவை எண்ணிக்கை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கான ஒரு முக்கிய காரணம் என்று டிராய் தெரிவித்துள்ளது.

எண்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை

எண்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை

டிராய், டெலிகாம் சேவைக்கான கூடுதல் விருப்பங்களை ஆராய விரும்புகின்றது. அதற்காக மொபைல் எண் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும், இதற்காக எண்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.

திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!

2.1 பில்லியன் இணைப்பு

2.1 பில்லியன் இணைப்பு

9, 8 மற்றும் 7 என்ற எண்ணில் துவங்கும் 10 இலக்கு கொண்ட எண்கள், சுமார் 2.1 பில்லியன் இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டவை என்று டிராய் தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டின் தேவை எவ்வளவு தெரியுமா?

2050 ஆம் ஆண்டின் தேவை எவ்வளவு தெரியுமா?

டிராயின் கணிப்புப்படி, 2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 2.6 பில்லியன் புது எண்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!

இதற்கு முன்பு நடத்தப்பட்ட மறு ஆய்வு

இதற்கு முன்பு நடத்தப்பட்ட மறு ஆய்வு

இதற்கு முன்பு 1993 ஆம் ஆண்டு மற்றும் 2003 ஆம் ஆண்டு, என மொத்தம் இரண்டு முறை டிராய் அதன் எண் திட்டங்களை மறு ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லுலார் மற்றும் லேண்ட்லைன்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

செல்லுலார் மற்றும் லேண்ட்லைன்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

டிராயின் 2003 ஆம் ஆண்டு எண் திட்டம் படி, சுமார் 750 மில்லியன் தொலைப்பேசி இணைப்புகளுக்கான எண்களை டிராய் உருவாக்கியது, அவற்றில் 450 மில்லியன் செல்லுலார் மற்றும் 300 அடிப்படை லேண்ட்லைன் தொலைபேசி எண்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1.5 மில்லியன் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை! உடனே டெலீட் செய்யுங்கள்!1.5 மில்லியன் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை! உடனே டெலீட் செய்யுங்கள்!

பெருகிவரும் எண்களின் பற்றாக்குறை

பெருகிவரும் எண்களின் பற்றாக்குறை

தற்போது உள்ள எண்களின் எண்ணிக்கை வளங்களில் பற்றாக்குறை இருப்பதனால், எதிர்கால இணைப்புகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனையை டிராய் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 இலக்கு எண் முறை

11 இலக்கு எண் முறை

மொபைல் போன் பயனர்களின் இணைப்பு எண்ணிக்கை அதிகரிப்பதும், 11 இலக்கு எண் முறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிடுவது ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்?மறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்?

டாங்கிள் எண்களிலும் மாற்றம் வரலாம்

டாங்கிள் எண்களிலும் மாற்றம் வரலாம்

டேட்டா பயணப்பாட்டிற்கு (டாங்கிள் இணைப்புகளுக்கு) மட்டும் பயன்படுத்தும் மொபைல் எண்களை 10 இலக்கங்களிலிருந்து 13 இலக்க எண்களுக்கு மாற்றுவது 3, 5 மற்றும் 6 முதல் தொடங்கும் குறிப்பிட்ட எண் தொடர்களை காலி செய்ய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
TRAI 11 Digit Mobile Numbers Likely To Be Introduced soon Do you know why : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X