இனி போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதச் சீட்டு வீட்டுக்கு வந்துவிடும்! எப்படி தெரியுமா?
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டிரைவிங்கின் போது செல்போன் பேசினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு . புளூடூத், லவ்டு ஸ்பீக்கர் வழியாகப் பேசினால் தற்காலிகமாக அபராதம் விதிக்காமல் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது சேஃப் கேரளா என்ற திட்டத்தின்படி கேரள மாநிலம் முழுவதும் சுமார் 726 செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சமீபத்தில் 692 கேமராக்கள் சமீபத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்து காவலர்கள் நேரடியாக அபராதம் விதிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

விதிகளை மீறும் வாகனங்களின் எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் முகவரியை செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் கண்டறிந்துவிடும். பின்பு சம்பந்தப்பட்ட வாகனத்தின் விதிமீறல் போட்டோவுடன் அவரது முகவரிக்கு அபராத நோட்டீஸ் சென்றுவிடும். அதேபோல் நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எவையெல்லாம் விதி மீறல்கள் எனவும், அதற்கான அபராதங்கள் எவ்வளவு என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது காரில் செல்லும்போது டிரைவரும், முன் சீட்டில் இருக்கும் பயணியும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக முன் சீட்டில் கர்ப்பிணியாகவோ, குழந்தையாகவோ இருந்தாலும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பீன் சீட்டில் இருப்பவர்கள் கூட சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அதற்கு மட்டும் தளர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்பு முன் சீட்டில் இருக்கும் நபர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக டிரைவிங்கின்போது செல்போனில் பேசினால் 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். பின்பு புளூடூத், லவ்டு ஸ்பீக்கர் வழியாகப் பேசினால் தற்காலிகமாக அபராதம் விதிக்காமல் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பைக்கில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் பெற்றோருடன் குழந்தைகள் பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதி உள்ளது.
இதுதவிர நோ பார்க்கிங்கில் பார்க்கிங் செய்தால் 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். பின்பு அதிகவேகமாக செல்லும் வாகனங்களுக்கு 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தற்போது வந்துள்ள இந்த புதிய திட்டம் மூலம், ஒரு நாளுக்கு 25,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கப்பட உள்ளன.

இந்த புதிய திட்டம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆன்றணி ராஜூ தெரிவித்தது என்னவென்றால், சாலை விபத்தில் கேரளா முன்னிலை வகிக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 161 விபத்துகள் நடக்கின்றன. பின்பு சராசரியாக ஒரு நாளைக்கு 12 மரணங்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக வாகனப் பெருக்கத்தால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன.
எனவேதான் சாலை விதிகளை கடுமையாக்கவும், மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் இந்த ஏ.ஐ கேமராக்கள் உதவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஐபி வானங்கள், அவசர ஊர்திகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டைவைகளுக்கு விலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








