ஆபாச படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை 95% உயர்வு! சிறுவர்களுக்கும் இந்த பழக்கம் எப்படி?

|

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, இதனால் மூன்றாம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு இந்தியா மூன்றாம் கட்டத்திற்கு தயாராகி வருவதால், பலரும் வீட்டிலே அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆய்வின்படி இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஆபாச உள்ளடக்க பார்வையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு விகிதத்தில் அதிகரித்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆபாச உள்ளடக்கப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இரட்டிப்பு

ஆபாச உள்ளடக்கப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இரட்டிப்பு

நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் பல அலுவலகங்கள் இன்னும் மூடப்பட்டிருக்கிறது. இதனால், பலரும் புதிய இணையம் சேவையை வாங்கிவிட்டு வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். அதிக இணையச் சேவை பயன்பாடுகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என்பது நமக்குத் தெரியும். இந்த நேரத்தில், நாடு ஆபாச உள்ளடக்கப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்துள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

95 சதவீதம் உயர்வு

95 சதவீதம் உயர்வு

சமீபத்திய ஆய்வின்படி, ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் ஆன்லைன் மூலம் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 95 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 89 சதவீத பேர் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஆபாச வலைத்தளங்களை அணுகியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

பகல் நேரங்களில் அதிகம் பதிவிறக்கம்

பகல் நேரங்களில் அதிகம் பதிவிறக்கம்

இதில் பெரும்பாலானோர் தங்களின் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி ஆபாச வலைத்தளங்களைப் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கிட்டத்தட்ட 30-40 சதவீதம் மக்கள் இந்தியாவில் ஆபாச உள்ளடக்க வீடியோக்களை பகல் நேரங்களில் அதிகம் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

தடைக்கு பின்னரும் 95 சதவீதம் உயர்வு எப்படி?

தடைக்கு பின்னரும் 95 சதவீதம் உயர்வு எப்படி?

கடந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 3,500 க்கும் அதிகமான ஆபாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தடை செய்யப்பட்ட பின்னரும், தடை விதிக்கப்பட்ட போதிலும் மக்கள் VPN பயன்படுத்தி இந்த காரியத்தைச் செய்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

சிறுவர்கள் ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பது அதிகரிப்பு

சிறுவர்கள் ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பது அதிகரிப்பு

இந்த கணக்கெடுப்பின் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களைக் காட்டிலும் சிறுவர்கள் ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பது அதிகரித்து வருவது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மை தான என்று நீங்கள் சந்தேகப்படலாம். ஆனால், முற்றிலுமாக இது மறுக்கப்படமுடியாத உண்மை தான் என்கிறது ஆய்வின் முடிவு.

போட்டு உடைகைப்பட்ட நம்பமுடியாத உண்மை

போட்டு உடைகைப்பட்ட நம்பமுடியாத உண்மை

சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் இடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் நம்ப முடியாத உண்மைகளை போட்டு உடைந்துவிட்டது. பெங்களூரில் உள்ள 10 பள்ளிகளில் 400 மாணவர்களிடையே நடத்தப்பட்டது ஆவியின் முடிவில், சுமார் 70 சதவீத மாணவர்கள் 10 வயதை எட்டியவுடன் இணையத்தில் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?ஒரு மாதத்திற்கு 10,000 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி அறிவிப்பு., விலை என்ன தெரியுமா?

வழி மாறுகிறது குழந்தைகளின் கவனம்

வழி மாறுகிறது குழந்தைகளின் கவனம்

இந்தியாவில் பெரிய நகரங்களில் வசிக்கும் பெற்றோர்களில் 90 சதவீதம் பேர், இணையச் சேவையை தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக உதவுகிறது என்று கருதுகிறார்கள், ஆனால், உண்மை அதுவாக இருப்பதில்லை. படிப்பிற்காக பயன்படும் என்று நினைத்த இணைய சேவை குழந்தைகளை வழிமாற செய்துள்ளது.

ஆபாச உள்ளடக்கத்தையும் காணவில்லை என்றும் நம்பும் பெற்றோர்

ஆபாச உள்ளடக்கத்தையும் காணவில்லை என்றும் நம்பும் பெற்றோர்

இருப்பினும் 10 பெற்றோரில் 9 பேராவது தங்கள் குழந்தைகள் இணையத்தைப் படிப்பிற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும், இணையத்தில் எந்த ஆபாச உள்ளடக்கத்தையும் காணவில்லை என்றும் நம்புகிறார்கள் என்று ஆய்வின் முடிவு கூறுகிறது. சிறுவர்களும் இந்த பழக்கத்திற்கு ஆளாகிவருகின்றனர் என்கிறது ஆய்வின் முடிவு.

இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

மலிவான விலையில் அதிக தரவு தான் இதற்கு காரணமா?

மலிவான விலையில் அதிக தரவு தான் இதற்கு காரணமா?

இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் அதிக தரவு கிடைப்பது ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், இந்த அதிக டேட்டா பயன்பாடே இளம் தலைமுறையினருக்கும், மாணவர்களுக்கும் ஆபாச உள்ளடக்கத்தை எளிதாகப் பார்வையிட வழிவகுத்துள்ளது. இலவச டேட்டா சேவை, இதனால் கிடைக்கும் இலவச ஆபாசத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், இந்த பழக்கத்திற்கு அடிமையாகி பலரும் இரையாகி வருகிறார்கள்.

அதிக ஆபாசம் பார்க்கும் உலக பட்டியலில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

அதிக ஆபாசம் பார்க்கும் உலக பட்டியலில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

ஆபாச உள்ளடக்கங்களை அதிகம் பார்வையிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது என்று தெரியுமா? ஆபாச உள்ளடக்கங்களை அதிகம் பார்வையிடும் உலக நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அப்படியினால் முதல் இரண்டு இடத்தில் உள்ள நாடு எது என்பது தானே இப்பொழுது உங்களுடைய கேள்வி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Traffic On Adult Content Sites In India Increases Upto 95 Percentage During Covid-19 Lockdown : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X