Home
News

டிராபிக் அபராதம்.. இனி UPI ஸ்பாட் பேமெண்ட்.. 1000 ரூபாயோ.. 2000 ரூபாயோ.. Google Pay, PhonePe, Paytm போதும்!

ஹெல்மெட் இல்லயா? லைசென்ஸ் எங்க? ஆர்ஜி புக் எங்க? இன்சூரன்ஸ் இருக்கா? இப்படி கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லையென்றால், அபராதம் போட்டு கையில் டிராபிக் சலான் (Traffic Challan) கொடுக்கப்பட்டுவிடும். இதை ஆன்லைனில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்திவிட வேண்டும். இதைத்தான் வாகனவோட்டிகள் செய்து வருகின்றனர். ஆனால், இனி ஸ்பாட் பேமெண்ட் நடக்கப் போகிறது.

போக்குவரத்து அபாரதத்தை உடனடியாக செலுத்த வேண்டிய கட்டாயம் கிடையாது. இருப்பினும், பணம் இருந்தால் செலுத்தி கொள்ளலாம். சலான் நம்பரை வைத்து ஆன்லைன் வழியாக அபராத தொகையை செலுத்த முடியும். உங்களது வாகனத்தின் மீது எவ்வளவு அபராத தொகை இருக்கிறது என்பதையும் வாகன எண் மற்றும் சேசிஸ் நம்பர் அல்லது என்ஜின் நம்பர் வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

டிராபிக் அபராதம்.. இனி UPI ஸ்பாட் பேமெண்ட்.. 1000 ரூபாயோ, 2000 ரூபாயோ!

இதற்காக பரிவாகன் போர்ட்டல் (Parivahan Portal) இருக்கிறது. இது கையில் காசு இல்லாத நேரத்தில், கைகொடுக்கும். அதேபோல காசு இருந்தாலும் பிறகு செலுத்தி கொள்ள அவகாசம் கிடைக்கும். ஆனால், இனிமேல் ஸ்பாட் பேமெண்ட்களை செய்து கொள்ளும்படி போக்குவரத்து போலீஸ் யுபிஐ பேமெண்ட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆகவே, யுபிஐ ஆப்கள் வழியாக ஸ்பாட் பேமெண்ட் செய்யலாம்.

இது உடனடியாக அபராதம் செலுத்துவதை உறுதி செய்யும், அதே நேரத்தில் பரிவாகன் போர்ட்டலுக்கு செல்ல வேண்டிய அவசியத்தையும் குறைக்கும். ஆனால், இதை டெல்லி போக்குவரத்து காவல்துறை (Delhi Traffic Police) முதலில் அமல் செய்ய இருக்கிறது. பிபிபிஎஸ் (BBPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (Bharat Bill Payment System) வழியாக இந்த பேமெண்ட்கள் செய்யப்பட இருக்கின்றன.

ஆகவே, அபாராத தொகைகள் நேரடியாக அரசாங்கத்துக்கு சென்றுவிடும். கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற எந்த யுபிஐ ஆப்களை (UPI Apps) வைத்திருந்தாலும், போக்குவரத்து சலான் அபாரதத்தை செலுத்து கொள்ளலாம். இதை ஸ்பாட்டில் செய்து கொள்ளலாம். ஆனால், கட்டாயமாக அப்போதே செலுத்த வேண்டி இருக்காது. டெல்லிக்கு பிறகு மற்ற நகரங்களில் கொண்டுவரப்படலாம்.

ஆன்லைனில் டிராபிக் சலான் செலுத்துவது எப்படி?
இ-சலான் பேமெண்ட் (E-Challan Payment) போர்டலுக்கு சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜின் வலது புறத்தில் இருக்கும் சலான் விவரங்கள் (Challan Details) பக்கத்தில் கேட்கப்படும் விவரங்களை கொடுங்கள். இதில் சலான் நம்பர் (Challan Number), வாகன எண் (Vehicle Number) மற்றும் டிஎல் நம்பர் (DL Number) ஆகியவை இருக்கும். டிஎல் நம்பர் என்பது டிரைவிங் லைசென்ஸ் நம்பராகும்.

இதில் ஏதாவது ஒரு நம்பரை கொடுத்து, பிறகு கீழே இருக்கும் கேப்ச்சா கோட் கொடுத்தால் போதும் ஓப்பனாகிவிடும். இப்போது, சலான் நம்பருக்கு உரிய வாகனத்துக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை குறித்த விவரங்கள் இருக்கும். இந்த தொகையையும் உங்களது சலானில் இருக்கும் தொகையையும் சரிபார்த்துவிட்டு பேமெண்ட் செய்து கொள்ளலாம். கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் ஆப்ஷன்கள் இருக்கும்.

ஒருவேளை உங்களது வாகனத்தின் மீது இருக்கும் பெண்டிங் சலான்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதே இ-சலான் பேமெண்ட் போர்டலுக்கு சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜின் இடது புறத்தில் ஹைலைட் செய்யப்பட்டு இருக்கும் நிலுவையில் உள்ள பரிவர்த்தனையைச் சரிபார்க்கவும் (Check Pending Transaction) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இதில் சலான் நம்பர் அல்லது வாகன எண் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும். இதை கொடுத்த பிறகு கேப்ச்சா கோட் கொடுத்தால் போதும், உங்களது வாகனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய பெண்டிங் சலான்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது போக்குவரத்துறையின் பிரத்யேக கேமரா வழியாகவும் விதிக்கப்படும் அபராதத்துக்கு பெருந்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Traffic Challan Payments Google Pay PhonePe Paytm UPI Apps How To Pay E-Challan Payment Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X