தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு அசத்தல் ஐடியா.!

மேலும் தேசிய தொலைத்தொடர்பு கொள்ளை 2012-ன் கீழ் அலைபேசி எண்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை பதிவு செய்ய துவங்கியது தொலைத் தொடர்பு நிறுவனம்.

|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்று தான் கூறவேண்டும், அதே சமயம் ஸ்மார்ட்போன் நிறுவனம் எவ்வளவு தூரம் வளர்கின்றதோ, அதேபோன்று ஸ்மார்ட்போன்களின் திருட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேபோகிறது.

தொலைந்துபோன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க மத்திய அரசு அசத்தல் ஐடியா.!

இதை கட்டுப்படுத்தும் வகையில் அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி செண்டரல் எக்யூப்மெண்ட் ஐடண்ட்டி ரெஜிஸ்டர் என்ற டேட்டாபேஸை ஐ.எம்.இ நம்பர் அடிப்படையில் தொலைத்தொடர்ப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

போன்கள் தொலைத்தவர்கள்

போன்கள் தொலைத்தவர்கள்

இந்த டேட்டாபேஸ் முறையாக முழுவதும் முடிக்கப்பட்ட பின்னர் போன்கள் தொலைத்தவர்கள் தொலைத்தொடர்பு அமைச்சரகத்தின் உதவியால் விரைவில் திரும்பி பெற்றுக்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

 எந்த நெட்வொர்க்கிலும் இயக்க இயலாது

எந்த நெட்வொர்க்கிலும் இயக்க இயலாது

குறிப்பாக தொலைத்தொடர்பு அமைச்சரகம் நீங்கள் தொலைத்த போனின் இ.எம்.இ.ஐ எண்ணை உடனடியாக ப்ளாக் செய்துவிடும், பின்பு அப்படி செய்துவிட்டால் உங்கள் போனை எந்த நெட்வொர்க்கிலும் இயக்க இயலாது என்பது
குறிப்பிடத்தக்கது.

ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

போலியான போன்களை தயாரிப்பது

போலியான போன்களை தயாரிப்பது

கடந்த மார்ச் மாதம் 2019-இறுதியில் இந்தியாவில் சுமார் 1.16மில்லியன் மக்கள் வயர்லெஸ் தொலைத்தொடர்பினை பெற்றுள்ளனர், குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஜீலை மாதம் இதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டது தொலைத்தொடர்பு அமைச்சரகம். "நாளுக்கு நாள் போன்களை திருடிச்செல்வது, போலியான போன்களை தயாரிப்பது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது இந்தியா.

பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கிய பங்கு விகித்தது

பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கிய பங்கு விகித்தது

மேலும் தேசிய தொலைத்தொடர்பு கொள்ளை 2012-ன் கீழ் அலைபேசி எண்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை பதிவு செய்ய துவங்கியது தொலைத் தொடர்பு நிறுவனம். இந்த மிகப்பெரிய பொறுப்பில் பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கிய பங்கு விகித்தது. 2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக 15ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ட்ரூகாலரில் இலவசமாக கால் செய்து கொள்ளும் வசதி அறிமுகம்.!ட்ரூகாலரில் இலவசமாக கால் செய்து கொள்ளும் வசதி அறிமுகம்.!

கிரே நிறத்தின் கீழ் வரும்

கிரே நிறத்தின் கீழ் வரும்

இந்த திட்டத்தில் இந்தியாவில் உள்ள போன்கள் எல்லாம் மூன்று நிறங்களுக்கு கீழ் வரும். வெள்ளை நிறத்தின் கீழ் வரும் அலைபேசிகள் உபயோகிக்க எந்த தடையும் இல்லை. கருப்பு நிறத்தின் கீழ் வரும் போன்கள், தொலைந்தவை அல்லது திருடு போனவை என்று புகார் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள். கிரே நிறத்தின் கீழ் வரும் போன்கள் பயன்படுத்த எந்த தடையும் இல்லை. ஆனால் அதன் உண்மைத் தன்மை மற்றும் பயன்பாடு ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ரூ.12,990-விலையில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ5எஸ்.!ரூ.12,990-விலையில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ5எஸ்.!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

பின்பு மொபைல் ஆப்பரேட்டர்கள் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சாஃப்ட்வேர் மற்றும் இன்டெர்நெட் கம்பெனிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடங்கிய ஜி.எஸ்.எம் அசோசியேசன் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இந்த திட்டம்
முழுவடிவம் பெற்றது. இது போன்ற சிறப்பு திட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
track-your-stolen-mobile-govt-ready-to-roll-out-imei-database : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X