கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ!

By Saravana Rajan
|

கூடைப் பந்தை தொடர்ந்து வலைக்குள் எறியும் முயற்சியில் டொயோட்டா நிறுவனத்தின் புதிய ரோபோ கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

டொயோட்டா நிறுவன பொறியாளர்கள்

டொயோட்டா நிறுவன பொறியாளர்கள்

டொயோட்டா நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் தங்களது அலுவலக ஓய்வு நேரத்தில், கூடைப் பந்தை சரியாக எறியும் ரோபோ ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். கடந்த 2017ம் ஆண்டு துவங்கிய அவர்களின் இந்த விளையாட்டான முயற்சி, கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பந்து எறிவதற்கான நிமிடங்கள்.!

பந்து எறிவதற்கான நிமிடங்கள்.!

டொயோட்டா பணியாளர்கள் உருவாக்கிய முதல் கூடைப் பந்தாட்ட ரோபோ எதிர்பார்த்த அளவு வேகத்தில் பந்தை எறியவில்லை. ஆனால், அவர்களின் விடா முயற்சி காரணமாக, அந்த ரோபோவை மேம்படுத்தினர். இரண்டாவதாக மேம்படுத்தப்பட்ட சியூஇ2 என்ற மாடல், ஒவ்வொரு முறையும் பந்தை எறிவதற்கு 3 நிமிடங்களை எடுத்துக் கொண்டது.

பட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

 மிக துல்லியமாக கூடைப் பந்தை எறியும் திறன்

மிக துல்லியமாக கூடைப் பந்தை எறியும் திறன்

இதனால், அது தொடர்ச்சியான எறியும் முயற்சியாக கின்னஸ் புத்தகம் அங்கீகரிக்கவில்லை. இதனையடுத்து, விரைவாக கூடைப் பந்தை வலைக்குள் சரியாக எறியும் வகையில், அந்த ரோபோவில் பல்வேறு தொழில்நுட்ப மாறுதல்களை செய்து மேம்படுத்தினர். சியூஇ3 என்ற பெயரிலான இந்த மேம்படுத்தப்பட்ட ரோபோ மாடல் மிக துல்லியமாக கூடைப் பந்தை எறியும் திறனை பெற்றது.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

அண்மையில் நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில் தொடர்ச்சியாக 2,020 முறை கூடைப் பந்தை வலைக்குள் சரியாக எறிந்து அசத்தியது. இதனை கின்னஸ் சாதனைப் புத்தகம் புதிய சாதனையாக பதிவு செய்து சான்று வழங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டிடம் தோல்வியடைந்த பில்கேட்ஸ்: அவர் கூறிய சுவாரசிய தகவல்.!ஆண்ட்ராய்டிடம் தோல்வியடைந்த பில்கேட்ஸ்: அவர் கூறிய சுவாரசிய தகவல்.!

பார்ப்போரை பிரிமிக்க வைத்தது

இந்த ரோபோ கூடைப் பந்தை 1,000 முறை வலைக்குள் எறிவதற்கு 3 மணிநேரம் எடுத்துக் கொண்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையின்படி, 2,020 முறை தொடர்ச்சியாக எறிந்து சாதனை படைத்தது. செயற்கை நுண்ணறிவு திறனுடன் மிக துல்லியமாக வலைக்குள் கூடைப் பந்தை எறிந்து பார்ப்போரை பிரிமிக்க வைத்தது. ஒருமுறை கூட பந்து தவறவில்லை.

கேமரா  ஆதரவு

கேமரா ஆதரவு

கேமரா மூலமாக கூடைப் பந்தாட்ட வலை பொருத்தப்பட்டு இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு, அதிலிருந்து தூரத்தை கணக்கிட்டு, அதற்கு தக்க வேகத்தில் பந்தை தனது இரும்பு கரத்தை கொண்டு எறிந்து ஆச்சரியப்படுத்தியது. இந்த ரோபோவை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

Best Mobiles in India

English summary
Japanese tech giant, Toyota has announced that its CUE humanoid robot has set a new record for the greatest number of consecutive basketball free throws performed by a humanoid AI-powered machine : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X