'பனிபுகை'யை பயன்படுத்தி 'நகை'..! செம்ம ஐடியா..!

Written By:

காற்றும் சுத்தமாகும் - 'வித்தியாசமான' நகையும் கிடைக்கும். 'இது' போன்ற விசித்திரமான, அதிக பயனளிக்க கூடிய மாற்று சிந்தனைகள் தோற்றுப் போனதாய் சரித்திரமே இல்லை, அதற்கு மற்றும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டுதான் இந்த 'ஸ்மோக் ஃப்ரீ டவர்' (SMOG FREE TOWER)..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐடியா :
  

பனிபுகை காற்றை சுத்தப்படுத்தி அதன் மூலம் சேர்ந்த அழுக்குகளையும், அசுத்தங்களையும் பயன்படுத்தி 'வித்தியாசமான' நகைகளை செய்யும் ஒரு அற்புதமான ஐடியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

நெதர்லாந்து :
  

இந்த சூப்பர் ஐடியாவிற்கு சொந்தக்காரர்கள் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டிசைனர்கள்..!

ரூஸ்கார்டி டிசைனர்கள் :
  

நெதர்லாந்தின் ரோட்டார்டேம் நகரத்தை, சேர்ந்த ஸ்டுடியோ ரூஸ்கார்டி டிசைனர்கள், இதை சாத்தியப்படுத்தி உள்ளனர்..!

உயரமான கோபுரம் :
  

காற்றை தூய்மைபடுத்தும் கோபுரங்களிலேயே இந்த 'ஸ்மோக் ஃப்ரீ டவர்' (SMOG FREE TOWER) தான் மிகவும் உயரமான கோபுரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

க்யூப் ஆஃப் ஸ்மோக் :
  

இது ஒவ்வொரு 1000 க்யூபிக் மீட்டர் காற்றையும் சுத்தப்படுத்தி கொண்டே இருக்குமாம், இதனை 'க்யூப் ஆஃப் ஸ்மோக்' (CUBE OF SMOG) என்கின்றனர் வல்லுநர்கள்.

சுத்தமான காற்று :
  

இது பனிபுகை காற்றை தூய்மை செய்து காற்றில் கலந்துள்ள மாசுகளை விலக்கி சுத்தமான காற்றை வெளியிடும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

சுவாரசியம் :
  

காற்று நாளுக்கு நாள் மாசுபட்டுக்கொண்டே போகிறது என்பதை மனதில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இதில் 'இன்னொரு' சுவாரசியமான விடயமும் உள்ளது.

நகை :
  

அதாவது காற்றை சுத்தப்படுத்தி சேமிக்கபட்ட தூசிகளையும், அழுக்குகளையும் 'க்யூப்' வடிவில் உருவாக்கி, பின் மிகவும் தனிசிறப்பு வாய்ந்த நகைகளாக அவைகள் வடிவமைக்கப்படுகின்றன..!

விலை :
  

இதன் மூலம் உருவாக்கப்பட்ட மோதிரம் 276 டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

உயரம் :
  

இந்த ஸ்மோக் ஃப்ரீ டவர் சுமார் 23 அடி உயரம் கொண்டதாம்..!

பயணம் :
  

இந்த டவர் உலகம் முழுக்க பிஜீங் - லண்டன் - லாஸ் ஏஞ்சல்ஸ் - மெக்ஸிகோ என ஒவ்வொரு நகரமாக பயணித்து நிதி திரட்ட இருக்கிறதாம்..!

 நம்பிக்கை :
  

மிகவும் மோசமாக பனிப்புகையால் பாதிக்க்பட்டு கொண்டிருக்கும் நகரங்களில், இது நிச்சயம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Using this process, the smog particles can be converted into jewellery.
Please Wait while comments are loading...

Social Counting