கொரோனாவுக்கு அதான் காரணம்: தீயாக பரவிய வதந்தி 5G நெட்வொர்க் டவர்களை தீவைத்து எரித்த மக்கள்- வீடியோ!

|

கொரோனா பரவியதற்கு காரணம் 5ஜி நெட்வொர்க் தான் என பொதுமக்களிடம் வதந்திகள் தீயாக பரவியது. இதையடுத்து 5ஜி நெட்வொர்க் டவர்களை அந்த நாட்டு மக்கள் தீவைத்து எரித்தனர்.

209 நாடுகளில் மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது

209 நாடுகளில் மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவத் தொடங்கி 209 நாடுகளில் மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

வீரியம் படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரிப்பு

வீரியம் படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரிப்பு

அதேபோல் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பதே கணிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.

உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 691 பேருக்கு வைரஸ்

உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 691 பேருக்கு வைரஸ்

இதையடுத்து சமீபத்திய தகவலின்படி உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 691 பேருக்கு வைரஸ் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஒரே நாளில் சுமார் 7000 பேர் உயிரிழதுள்ளனர் என்பது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை!கொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை!

3 லட்சத்து 2150 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

3 லட்சத்து 2150 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

மொத்தமாக பரவிய நாளில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 78 ஆக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 3 லட்சத்து 2150 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10 லட்சத்து 47 ஆயிரத்து 463 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

10 லட்சத்து 47 ஆயிரத்து 463 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

மேலும் கொரோனா தொற்று பரவியவர்களில் 10 லட்சத்து 47 ஆயிரத்து 463 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில்தான் அதிக அளவாக உயிரிழப்பு

இத்தாலியில்தான் அதிக அளவாக உயிரிழப்பு

அதேபோல் குறிப்பாக உலக அளவில் இத்தாலியில்தான் அதிக அளவாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய தகவலின்படி 17,127 பேர் இத்தாலியில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இரண்டாவது இடமாக இருப்பது ஸ்பெயின் தான், அங்கு 14 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

அதேபோல் அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேபோல் அமெரிக்காவில் நோய் பரவல் அதிகமாக பரவி வருகிறது. பிரான்ஸ், பிரிட்டன், ஈரான் என அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றுக்கு பலி அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வைரஸ் பரவியதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் தான்

வைரஸ் பரவியதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் தான்

அதேபோல் இங்கிலாந்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலிகாயுள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் தான் என வதந்தி பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் என்ற வதந்தியை மக்கள் நம்பவும் தொடங்கியுள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரித்தனர்

இதையடுத்து இங்கிலாந்து மக்கள் லிவர்பூர், வெஸ்ட் மிட்லேண்ட் ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப பொறியாளர்கள், ஊழியர்களை பொதுமக்கள் தாக்கத் தொடங்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!

அறிவியலுக்கு புறம்பான தகவல்

இதையடுத்து கொரோனா பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க் காரணம் என எந்த ஆதாரமும் இல்லை எனவும் இது அறிவியலுக்கு புறம்பான தகவல் என்றும் அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களை அதிகாரிகள் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.

source: theverge.com

Best Mobiles in India

English summary
Tower set fire by that rumours the reason of corona virus is 5G networks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X