ஏசி விலையில பாதிக்கூட இல்ல.. ரூ.5000 பட்ஜெட்ல வீடே குளிரும்.. 12 லிட்டர் கேபாசிட்டி.. டவர் ஏர் கூலர்கள்!
கோடையில் ஏசி வாங்க முடியாமல், அதற்கு மாற்றாக வேறென்ன வாங்கலாமென்று திட்டம்போடும் நபர்களுக்கு கூலிங் சேம்பருடன் கிடைக்கும் டவர் ஏர் கூலர்கள் கச்சிதமான தேர்வாக இருக்கும். ரூ.5000 பட்ஜெட்டில் 12 லிட்டர் வாட்டர் கேபாசிட்டியுடன் கம்பெனி ஏர் கூலர்களே டிஸ்கவுண்ட்டில் கிடைக்கின்றன.
இப்படி அமேசான் டிஸ்கவுண்ட்டில் (Amazon Discount) கூலிங் சேம்பருடன் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் 4 கம்பெனி டவர் ஏர் கூலர்களை பற்றி இங்கு விரிவாக பார்க்கப் போகிறோம். இந்த ஏர் கூலர்களில் குரோம்ப்டன், வி கார்டு, பஜாஜ், சிம்பொனி போன்ற கம்பெனியின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சிம்பொனி டயர் 12டி பர்சனல் டவர் ஏர் கூலர் (Symphony Diet 12T Personal Tower Air Cooler): இந்த சிம்பொனி மாடலானது, ஹனிகோம்ப் பேட் (Honeycomb Pad) மற்றும் ஐ-பியூர் டெக்னாலஜியுடன் (i-Pure Technology) வருகிறது. 129 சதுர அடி வரையில் கூலிங் கவரேஜ் கிடைக்கும்.
ஆகவே, பெரிய ரூம்களிலும் தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ஏர் கூலரில் வரும் ஐ-பியூர் டெக்னாலஜியானது, மல்டிஸ்டேஜ் ஃபில்டர்கள் மூலம் காற்று மாசு, துர்நாற்றத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான தண்ணீரை தக்க வைக்கும் ஹனிகோம்ப் பேட்கள் ஒரே மாதிரியான குளிர்ந்த காற்றை தொடர்ந்து கொடுக்கும்.
இந்த மாடலில் வாட்டர் லெவல் இன்டிகேட்டருடன் 12 லிட்டர் டேங்க் கேபாசிட்டி வருகிறது. ஆகவே, தண்ணீர் குறைவதை எளிதாக அறிந்து நிரப்பிக் கொள்ளலாம். இந்த ஏர் கூலரை எளிதாக நகர்த்த கேஸ்டர் வீல்கள் (Castor Wheel) வருகின்றன. 2.77 அடி உயரம் மற்றும் 1.41 அடி அகலம் கொண்டிருக்கிறது.
இந்த சிம்பொனி டயர் 12டி பர்சனல் டவர் ஏர் கூலரானது, இப்போது அமேசான் தளத்தில் 21 சதவீதம் டிஸ்கவுண்ட் உடன் ரூ.5,791 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. கம்மியான பட்ஜெட்டில், பக்கா பில்டர்கள், வாட்டர் இன்டிகேட்டர், பக்கா கூலிங் கொண்ட டவர் ஏர் கூலர் வேண்டுமானால், இதை வாங்கலாம்.

வி கார்டு வீமேஜிக் நியோ டவர் பேன் (V Guard Veemagik Neo Tower Fan): இந்த மாடலில் 1300 ஆர்பிஎம் மோட்டார் மற்றும் ஏபிஎஸ் பிளேடுகள் வருகிறது. ஆகவே, ஏர் ப்ளோ பக்காவாக இருக்கும். சில நிமிடங்களில் ரூம்களை கூலிங் செய்துவிடும். இன்-பில்ட் ஓவர்-ஹீட் பாதுகாப்பு வருகிறது. லைட் வெயிட் டிசைனில் 2.59 அடி உயரம் மற்றும் 1 அடி அகலம் கொண்டிருக்கிறது.
மூன்று டைப் விண்ட் அட்ஜஸ்ட்மென்ட் வருகிறது. இந்த வி கார்டு வீமேஜிக் நியோ டவர் பேனானது, 31 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.3,599 பட்ஜெட்டில் அமேசான் விற்பனையில் கிடைக்கிறது. மிகவும் கம்மியான விலையில் பேசிக் டவர் ஏர் கூலர் வேண்டுமானால், இந்த மாடலை கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
குரோம்ப்டன் ஆப்டிமஸ் நியோ டவர் ஏர் கூலர் (Crompton Optimus Neo Tower Air Cooler): இந்த ஏர் கூலர் கூடுதல் பட்ஜெட் கொண்டிருக்கிறது. ஆனால், விலைக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் பீச்சர்களும் வருகின்றன. ஆகவே, 27 லிட்டர் வாட்டர் கேபாசிட்டி, 4-வே ஏர் டீஃபிளெக்சன் (Air Deflection) மற்றும் ஹை-டென்சிட்டி ஹனிகோம்ப் பேட்கள் வருகின்றன.

160 சதுர அடி வரையில் கூலிங் கொடுக்கும். ஹை-டென்சிட்டி ஹனிகோம்ப் பேட்கள் வருவதால், நீண்ட நேர கூலிங்கை தக்க வைத்து கொடுக்கும். ஆட்டோ வாட்டர் பில் சப்போர்ட் உள்ளது. வாட்டர் இன்டிகேட்டர், கேஸ்டர் வீல்கள் கொண்டிருக்கிறது. இந்த மாடலானது, 21 சதவீதம் டிஸ்கவுண்ட் உடன் ரூ.7,900 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
பஜாஜ் டிஎம்எச்50 டவர் ஏர் கூலர் (Bajaj TMH50 Tower Air Cooler): இதுவொரு பிரீமியம் ஏர் கூலர் மாடலாகும். ஆன்டி-பாக்டீரியல் ஹெக்சாகூல் மாஸ்டர் (Anti-Bacterial Hexacool Master), டைபூன் ப்ளோயர் டெக்னாலஜி (Typhoon Blower Technology) போன்ற போர்ட்டபிள் ஏசிக்கு நிகரான பீச்சர்களை கொண்டிருக்கிறது. 30 அடி வரையில் கூலிங் கொடுக்கும்.

50 லிட்டர் வாட்டர் கேபாசிட்டி சேம்பர் வருகிறது. ஆகவே, நீண்ட நேரத்துக்கு வாட்டர் பில்லிங் இல்லாமல் பயன்படுத்தலாம். டியூராமெரின் பம்ப் (DuraMarine Pump) வருகிறது. ஆகவே, சில நிமிடங்களில் ரூம்களில் கூலிங் கிடைக்கும். இந்த பஜாஜ் டிஎம்எச்50 டவர் ஏர் கூலர் மாடலானது, டிஸ்கவுண்ட் உடன் ரூ.8,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








