"எரிமலை"க்குள் விழுந்த நபர்- தடை மீறிய செல்பி மோகம்: நடந்தது என்ன?

|

சமூகவலைதளங்களில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். நினைவுகளை சேகரித்து வைக்க புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் காலம் மாறி லைக், கமெண்ட், ஷேர்களுக்காக புகைப்படங்கள் எடுக்கும் காலம் வந்து விட்டது. சமூகவலைதளங்களில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட வேண்டும் என ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சி பெரும் ஆபத்துகளை சந்திக்க வழிவகுக்கிறது. அப்படியான ஒரு நிகழ்வை தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற நபர்

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற நபர்

அமெரிக்கவை சேர்ந்த நபர் ஒருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு வெசுவியஸ் மலை பகுதியை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். செல்பி மோகத்தால் அங்கு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அபாயகரமான பகுதியை நோக்கி சென்றிருக்கிறார். அங்கு அந்த நபர் சந்தித்த அதிர்ச்சிகரமான நிகழ்வை தான் விரிவாக பார்க்கப்போகிறோம்.

வெசுவியஸ் எனும் எரிமலை பகுதி

வெசுவியஸ் எனும் எரிமலை பகுதி

போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்த அளித்த தகவலை விரிவாக பார்க்கலாம், 23 வயதான சுற்றுலாப் பயணி தனது குடும்பத்துடன் இத்தாலிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கு நேபிள்ஸ் நகரின் வெசுவியஸ் எரிமலையை சுற்றிப் பார்க்க வந்தார். இந்த மலைப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முறையான வழிப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தினசரி குறிப்பிட்ட அளவிலான சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் விற்பனை முறையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த இந்த 23 வயது நபர் தனது குடும்பத்தாருடன் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்துள்ளார்.

எரிமலையில் நடந்து சென்றவர்களை பார்த்த வழிகாட்டிகள்

எரிமலையில் நடந்து சென்றவர்களை பார்த்த வழிகாட்டிகள்

பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத பள்ளத்தாக்கின் எதிர் பக்கத்துக்கு சென்று யாருக்கும் தெரியாமல் தடைகளை மீறி அவர்கள் உள்ளே சென்றுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் எரிமலை மீது யாரோ சிலர் நடந்து செல்வதை அங்குள்ள வழிகாட்டிகள் சிலர் பார்த்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

4203 அடி உயர எரிமலையில் செல்பி எடுக்க முயற்சி

4203 அடி உயர எரிமலையில் செல்பி எடுக்க முயற்சி

நேபிள்ஸ் நகரின் தடை செய்யப்பட்ட எரிமலை பகுதிக்குள் நுழைந்த 23 வயது நபர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செல்பி எடுப்பதற்கு எரிமலையின் உச்சியை நோக்கி பயணம் செய்துள்ளனர். 4203 அடி உயர எரிமலையில் ஏறி அங்கிருந்து செல்பி எடுக்க இவர்கள் முயன்றுள்ளனர். இவர்கள் சென்ற பாதையில் ஆபத்து மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகள் என பல எச்சரிக்கை அறிகுறிகள் இருந்துள்ளது.

எரிமலைக்குள் விழுந்த நபர்

எரிமலைக்குள் விழுந்த நபர்

எரிமலையில் ஏறி செல்பி எடுக்க முயற்சி செய்த போது 23 வயதான அமெரிக்க நபரின் மொபைல் பள்ளத்தில் விழுந்துள்ளது. அதை அவர் எடுக்க முயன்றுள்ளார். அப்போது சமநிலை இழந்த அவர் பள்ளத்துக்குள் தவறி விழுந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக சுமார் 300 மீட்டர் ஆழத்திலேயே நின்றபடி தப்பிப் பிழைத்துவிட்டார்.

தவறி விழுந்த நபர் பாதுகாப்பாக மீட்பு

தவறி விழுந்த நபர் பாதுகாப்பாக மீட்பு

மேலும் சுற்றுலாப் பயணிகள் மலை மீது ஏறுவதை பார்த்த வழிகாட்டிகள் அந்த பகுதியை நோக்கி விரைந்து சென்றனர். தொடர்ந்து மொபைலை மீட்டெடுக்க முயற்சித்த போது தவறி விழுந்த நபரை வழிகாட்டிகள் பாதுகாப்பாக காப்பாற்றினர் எனவும் கூறப்படுகிறது.

சிறு காயங்களுடன் மீட்கப்பட்டது எப்படி?

சிறு காயங்களுடன் மீட்கப்பட்டது எப்படி?

அந்த சுற்றுலா பயணியை காப்பாற்ற முயற்சி செய்த போது வழிகாட்டிகள் சிலருக்கும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வை அறிந்த போலீஸார்களும் ஹெலிகாப்டர் மூலம் சென்றிருக்கின்றனர். இதையடுத்து பள்ளத்துக்குள் விழுந்த 23 வயதான நபர் கால், கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

தடையை மீறி சென்ற நபருக்கு என்ன நடவடிக்கை?

தடையை மீறி சென்ற நபருக்கு என்ன நடவடிக்கை?

23 வயதான சுற்றுலாப் பயணி மற்றும் அவருடன் சென்ற அவரது குடும்பத்தினர் மூன்று பேர் மீதும் தடையை மீறி எரிமலை மீது ஏறியதாகவும், ஆபத்தான பகுதிக்குள் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அபராதம் தவிர அந்த நபர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என சுற்றுலாத் தள நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஆபத்தான எரிமலையில் இதுவும் ஒன்று

உலகின் ஆபத்தான எரிமலையில் இதுவும் ஒன்று

மவுண்ட் வெசுவியஸ் ஒரு பிரபலமான எரிமலை ஆகும். AD79 இல் நடந்த இந்த எரிமலை வெடிப்பின் மூலம் பாம்பீ எனும் நகரம் அழிந்து 16,000 குடியிருப்பாளர்கள் பலியாகினர். நேபிள்ஸ் நகரில் இருந்து 6 மைல் தொலைவில் இந்த எரிமலை இருக்கிறது. 1944 இல் இந்த எரிமலை கடைசியாக வெடித்தது. உலகின் ஆபத்தான எரிமலையில் ஒன்றாக இதுவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மவுண்ட் வெசுவியஸ் எரிமலையின் தன்மை குறித்து பார்க்கையில், மலையின் உயரம் 1,277 மீட்டர் அதாவது 4190 அடி ஆகும். அதே நேரத்தில் இந்த எரிமலையின் பள்ளம் 450 மீட்டர் (1,476 அடி) ஆகும். இந்த பள்ளத்தின் விட்டம் 300 மீட்டர் (984 அடி) ஆகும்.

எரிமலையில் விழுந்து முன்று பேர் உயிரிழந்த சம்பவம்

எரிமலையில் விழுந்து முன்று பேர் உயிரிழந்த சம்பவம்

எரிமலையில் மனிதர்கள் விழுந்தது இது முதன்முறையல்ல. 2017 இல் இதேபோல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேற்கு நேபிள்ஸில் உள்ள கேம்பி ஃப்ளெக்ரே எனும் பகுதியில்சோல்பதாரா டி போசூலி எனும் எரிமலை இருக்கிறது. இந்த எரிமலையில் விழுந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயரிழந்தனர். மலை உச்சிக்கு சென்ற போது எரிமலை புகையால் நிலையிழந்த சிறுவன் மயங்கி உள்ளே விழுந்துள்ளான். சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் அவரது குடும்பத்தினரும் உள்ளே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பிரபலமான 40 எரிமலைகள் இப்பகுதியில் இருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Tourist Fell into Volcano after dropped his phone while taking selfie

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X