Home
News

இந்தியா முழுக்க Jio கஸ்டமர்கள் ஹேப்பி.. புது ஆபர்.. 20GB இலவசம்.. 90 நாட்களுக்கு அள்ளி கொடுக்கும் அம்பானி!

சிங்கிள் சிம் வைத்து இருந்தாலும் சரி, டூயல் சிம் வைத்து இருந்தாலும் சரி.. பலருடைய மெயின் மொபைல் நம்பர் ஜியோவாகத்தான் இருக்கிறது; மெயின் ரீசார்ஜும் ஜியோவாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன!

"வழக்கமான" டெய்லி டேட்டா, டெய்லி எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகளுடன் சேர்த்து சில-பல கூடுதல் நன்மைகளை வழங்குவதில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அப்படியான கூடுதல் நன்மைகள் தான் பல ஜியோ கஸ்டமர்களை "வெளியேறாமல்" கட்டிப்போட்டு வைத்துள்ளன!

Jio: 20GB இலவச உட்பட.. 90 நாட்களுக்கு அள்ளி கொடுக்கும் அம்பானி!

இப்போதைக்கு "அப்படிப்பட்ட" ஒரு ஜியோ திட்டம் என்றால், அது 90 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் ரூ.899 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான். இது டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன் சேர்த்து.. 6 வகையான கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.899 திட்டத்தின் நன்மைகள்: வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 2 ஜிபி மொபைல் டேட்டா என மொத்தம் 180ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மைகள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குவதால் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி ஆபருக்கு தகுதி பெறுகிறது. அதாவது நீங்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தால் மற்றும் உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால், ரூ.899 திட்டத்துடன் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும்.

மேலும் டெய்லி 2ஜிபி டேட்டாவுடன் சேர்த்து, இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 20 ஜிபி இலவச டேட்டாவும் (20 GB Free Data) கிடைக்கும். இதோடு சேர்த்து ரூ.899 திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டா நன்மை - 200ஜிபி ஆக உயர்கிறது.

மேலும் ஜியோவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ரூ.899 திட்டத்தின் கீழ் மேலும் பல கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ஜியோ ஹோம் சேவையின் 2 மாத இலவச சோதனை கிடைக்கும். மேலும் ஜியோஹாட்ஸ்டாரின் மொபைல் மற்றும் டிவி சந்தாவும் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களை வாங்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் ₹399 தள்ளுபடியையும் பெறலாம். ஜியோசாவ்ன், ஜொமாட்டோ மற்றும் நெட்மெட்ஸ் மெம்பர்ஷிப்களும் இலவசமாக கிடைக்கும். கடைசியாக 50 ஜிபி இலவச ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் "இதே போன்ற நன்மைகளை வழங்கும்" இன்னும் மலிவான திட்டத்தை தேடினால், ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இதிலும் ஜியோவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்ட சலுகைகள் சேர்க்க்கப்பட்டுள்ளன. வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும்

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.349 திட்டத்துடன் வரம்பற்ற 5ஜி டேட்டா, ஜியோ டிவி மற்றும் ஜியோக்ளவுட் அணுகல், ஜியோஃபைனான்ஸ் உடன் கூடுதலாக 2% தங்கம், ஜியோஹோம் 2 மாத இலவச இணைப்பு, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா, ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.399 தள்ளுபடி, மூன்று மாத ஜொமாட்டோ கோல்ட், ஒரு மாத ஜியோசாவ்ன், ஆறு மாத நெட்மெட்ஸ் சந்தா, ஈஸ்மைட்ரிப் உள்நாட்டு விமானங்களில் ரூ.2,220 தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி, மற்றும் ஜியோஏஐகிளவுட் இலவச 50ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Total of 200GB Data 90 Days Validity Jio Rs 899 Plan is Dream Recharge For Many Indian Telecom Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X