iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

|

கடந்த மாதம், இந்திய டெலிகாம் ஆபரேட்டர்கள் - ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகியவை நாட்டில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தின. இந்த ஆபரேட்டர்கள் நாட்டின் சில பகுதிகளில் 5G சேவைகளை வழங்க துவங்கியுள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.!

இருப்பினும், 5G இணைப்பை இயக்க, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தகுதியான சாதனங்களுக்கான 5G ஃபார்ம்வேர் அப்டேட்களை (5G Firmware update) வெளியிட வேண்டியதுள்ளது.

ஐபோன்களுக்கு தேவையான 5ஜி அப்டேட் ரெடி ஆகிறதா?

ஐபோன்களுக்கு தேவையான 5ஜி அப்டேட் ரெடி ஆகிறதா?

குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களை வைத்துள்ள இந்தியப் பயனர்களுக்கு இந்த அப்டேட் மிகவும் முக்கியமானது.

சில வாரங்களுக்கு முன்பு, 5ஜி-க்கு தகுதியான ஐபோன்கள் டிசம்பர் மாதத்தில் ஃபார்ம்வேர் அப்டேட்டைப் பெறும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்த அப்டேட் கிடைத்தால் மட்டுமே ஐபோன் பயனர்களால் 5G இணைப்பைச் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 13 ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு 5G அப்டேட்.!

மொத்தம் 13 ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு 5G அப்டேட்.!

தெரியாதவர்களுக்கு, இப்போது இந்தியாவில் கிடைக்கும் மொத்தம் 13 ஆப்பிள் ஐபோன் மாடல்கள் 5G இணைப்பை ஆதரிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இருப்பினும், இந்த 13 மாடல்களும் உரிய 5G Firmware update -ஐ பெற்ற பிறகு மட்டுமே 5ஜி இணைப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்பதனால், ஐபோன் பயனர்கள் காத்திருந்தனர்.

சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இப்போது 5ஜி சேவை பயன்படுத்தக் கிடைக்கிறது.

சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?

டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியதில்லை.. ஆனா?

டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியதில்லை.. ஆனா?

ஆனால், ஐபோன் பயனர்கள் டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியதுள்ளதால் கடுப்பில் இருந்து வந்தனர்.

சமீபத்தில் வெளியான புதிய தகவல், ஆப்பிள் இந்தியாவில் விரைவில் ஐபோன்களில் 5ஜியை சோதிக்க உள்ளது என்பதைப் பரிந்துரைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் ஒரு ஃபார்ம்வேர் அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது தகுதியான மாடல்களில் 5G இணைப்பை செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா ஃபார்ம்வேர் அப்டேட் அடுத்த வாரம் வெளிவருகிறதா?

பீட்டா ஃபார்ம்வேர் அப்டேட் அடுத்த வாரம் வெளிவருகிறதா?

iOS 16 பீட்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் வெளியிடப்படும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இது அவர்களின் ஐபோன்களில் iOS 16.1 பீட்டாவை இயக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

iOS 16 பொது பீட்டா ஃபார்ம்வேர் வெளியீடு குறித்து ஆப்பிள் நிர்வாகிகள் விரைவில் தொலைத்தொடர்புத் துறை உறுப்பினர்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உடன் பகிரும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

iPhon இல் ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி

iPhon இல் ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி

ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி ஆகிய இரண்டிற்கும் ஆப்பிள் வரவிருக்கும் iOS 16 பொது பீட்டா அப்டேட் மூலம் ஆதரவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தெரியாதவர்களுக்கு, டெல்லி, குருகிராம், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகள் ஆரம்பகால அணுகலின் ஒரு பகுதியாக இப்போது கிடைக்கின்றன.

கம்மி காசுக்கு கம்மி காசுக்கு "இந்த" போனை வாங்கி எல்லாரும் 5G-க்கு மாறப்போறாங்க.! நீங்க வாங்கலயா?

உங்கள் ஐபோன் இந்த 13 மாடல்களில் ஒன்றா?

உங்கள் ஐபோன் இந்த 13 மாடல்களில் ஒன்றா?

ஏர்டெல்லின் மிகப் பெரிய போட்டியாளரான ஜியோ தனது ட்ரூ 5ஜி சேவையை நான்கு நகரங்களில் கிடைக்கச் செய்துள்ளது.

இந்த பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகியவை அடங்கும்.சரி, இப்போது எந்தெந்த ஐபோன் மாடல்களில் இந்த புதிய 5Gஅப்டேட் கிடைக்கப்பெறும் என்ற முழு விபரத்தைப் பார்க்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள iPhone மாடல்களின் பட்டியலில் உங்கள் டிவைஸ் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.

5G அப்டேட் பெற போகும் 13 ஐபோன் மாடல்கள்

5G அப்டேட் பெற போகும் 13 ஐபோன் மாடல்கள்

நாங்கள் முன்பே குறிப்பிட்டுள்ளபடி, ஆப்பிள் நிறுவனத்தின் 13 ஐபோன் மாடல்கள், இப்போது 5G இணைப்பை ஆதரிக்கிறது.

பின்வரும் சாதனங்களுக்கான 5G ஃபார்ம்வேர் வெளியீட்டை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இதன் படி,

  • ஐபோன் 12 மினி (iPhone 12 Mini)
  • ஐபோன் 12 (iPhone 12)
  • ஐபோன் 12 ப்ரோ (iPhone 12 Pro)
  • ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் (iPhone 12 Pro Max)
  • ஐபோன் 13 மினி (iPhone 13 Mini)
  • ஐபோன் 13 (iPhone 13)
  • ஐபோன் 13 ப்ரோ (iPhone 13 Pro)
  • இந்த Oppo அல்லது OnePlus போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே 5G யூஸ் பண்ணலாம்.!இந்த Oppo அல்லது OnePlus போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே 5G யூஸ் பண்ணலாம்.!

    உங்கள் ஐபோன் இந்த லிஸ்டில் இருந்தால் நீங்கள் லக்கி.!

    உங்கள் ஐபோன் இந்த லிஸ்டில் இருந்தால் நீங்கள் லக்கி.!

    • ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max)
    • ஐபோன் 14 (iPhone 14)
    • ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus)
    • ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro)
    • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max)
    • ஐபோன் எஸ்இ 3வது ஜென் (iPhone SE 3rd Generation)
    • ஆகிய மாடல்கள் இந்த புதிய 5ஜி ஃபார்ம்வேர் அப்டேட்டை பெறுகின்றன.

      iOS 16 பீட்டா அப்டேட்டை ட்ரை செய்ய போறீங்களா? கவனம்.!

      iOS 16 பீட்டா அப்டேட்டை ட்ரை செய்ய போறீங்களா? கவனம்.!

      மேலே குறிப்பிட்டுள்ள ஐபோன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சொந்தமாக வைத்திருந்தால் மற்றும் அனைவருக்கும் முன்பாக உங்கள் ஐபோனில் 5G சோதனை செய்ய விரும்பினால், அதை iOS 16 பீட்டாவிற்கு மாற்றுவது பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம்.

      இருப்பினும், பீட்டா ஃபார்ம்வேர் பதிப்புகள் வழக்கமான உருவாக்கங்களைப் போல சிறப்பாக இல்லை என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

      1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

      பீட்டா அப்டேட்டை பெற இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்க.!

      பீட்டா அப்டேட்டை பெற இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்க.!

      சாதனத்தின் தினசரி செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையையும் இந்த அப்டேட் பாதிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

      நீங்கள் iOS 16 பீட்டாவிற்கு மாற விரும்பினால், இந்த BetaProgram என்ற இணைப்பிற்குச் சென்று பீட்டா திட்டத்தில் பதிவுபெறலாம்.

      உங்கள் முதன்மை சாதனத்தில் iOS 16 பொது பீட்டாவிற்கு மாறுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்த மாட்டோம் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

      இன்னும் 1 மாதம் பொறுத்திருந்து 5ஜியை பாதுகாப்பாகப் பயன்படுத்த அறிவுரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Total Of 13 iPhone Models In India Will Support Beta 5G Connectivity Software Update Next Week

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X