முழு சந்திர கிரகணம் 2022: மே 16 வானில் தெரியும் பிளட் மூன்- எத்தனை மணிக்கு, எப்படி நேரில் பார்ப்பது!

|

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு சரியான கோட்டில் சீரமைக்கப்படும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ இருக்கிறது. இதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் இந்தாண்டு நிகழ இருக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சூரிய கிரகணங்கள் நடந்தது. இந்தாண்டின் முதல் சந்திர கிரகணமானது மே 15, 16 தேதிகளில் நடக்கிறது.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள ஒரு நேர்கோட்டில் பூமி வரும் அப்போது சூரிய ஒளி சந்திரனின் மீது படாமல் பூமி மறைப்பதால் சந்திர கிரகணம் நடக்கிறது. இந்த சந்திர கிரகணமானது பிளட் மூன் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டில் வரும் போது சூரியனுக்கு பூமிக்கும் நடுவே சந்திரன் வரும், இதனால் சூரிய ஒளி பூமி மீது விழாமல் சந்திரன் தடுக்கும். சூரிய ஒளி பின்புறத்தில் ஒளிரும் சமயங்களில் சந்திரன் சிவப்பு நிறங்களில் காட்சியளிக்கும். இதன் காரணமாக இதை பிளட் மூன் என அழைக்கப்படுகிறது.

சந்திர கிரகணம் நிகழும் நேரம்

சந்திர கிரகணம் நிகழும் நேரம்

சந்திர கிரகணம் நிகழும் நேரம் குறித்து பார்க்கையில், இது சர்வதேச நேரப்படி மே16 ஆம் தேதி அதிகாலை 1:32 மணிக்கு தொடங்கி விடிய காலை 6:50 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி நிகழும் நேரம் குறித்து பார்க்கையில், இந்த கிரகணமானது இந்திய நேரத்தில் காலை 7:02 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணி வரை நடக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. இந்த கிரகனமானது தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகள், தென் அமெரிக்கா, இந்திய பெருங்கடலின் சில பகுதிகள், தெற்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்க முடியும்.

ஒரே கோட்டில் வரும் சூரியன் பூமி மற்றும் சந்திரன்

ஒரே கோட்டில் வரும் சூரியன் பூமி மற்றும் சந்திரன்

சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகிய ஒரே கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. சூரிய ஒளி பூமியில் விழாதபடி சந்திரன் மறைக்கிறது. இதன் காரணமாக சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுகிறது. இந்த நிகழ்வு அம்ப்ரா என அழைக்கப்படுகிறது.

முழு சந்திர கிரகணம் நிகழும் நேரம்

முழு சந்திர கிரகணம் நிகழும் நேரம்

இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் நிகழும் மிக நீண்ட பிரைம் டைம் முழு சந்திர கிரகணம் ஆகும். இதன் மொத்த கட்டத்தின் காலம் 1 மணி நேரம் 25 நிமிடமும் மற்றும் பகுதி கட்டத்தின் காலம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகவும் நிகழ்கிறது. முழு சந்திர கிரகணம் ஆனது தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இது காணப்பட முடியாது என குறிப்பிடப்படுகிறது. ரோம், பிரஸ்ஸல்ஸ், லண்டன், பாரிஸ், ஹவானா, ஜோகன்னஸ்பர்க், லாகோஸ், மாட்ரிட், சாண்டியாகோ, வாஷிங்டன் டிசி, நியூயார்க், குவாத்தமாலா சிட்டி, ரியோ டி ஜெனிரோ மற்றும் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் இந்த கிரகணம் தெரியும். இந்த நகரங்கள் முழு சந்திர கிரகணத்தைக் காணும் அதே சமயத்தில் அங்காரா, கெய்ரோ, ஹொனலுலு, புடாபெஸ்ட் மற்றும் ஏதென்ஸ் ஆகிய இடங்களில் பகுதி கிரகணம் தெரியும்.

மொத்த சந்திர கிரகணத்தை நீங்கள் எங்கே பார்க்கலாம்?

மொத்த சந்திர கிரகணத்தை நீங்கள் எங்கே பார்க்கலாம்?

நாசா வான நிகழ்வின் நேரடி ஒளிபரப்பில் இதை நீங்கள் காணலாம். முழு சந்திர கிரகண நேரம் மே 16 ஆம் தேதி அதிகாலை 7:02 மணிக்கு தொடங்குகிறது. சந்திரன் பூமிக்கு நடுவில் காலை 7:57 நுழையத் தொடங்குகிறது. மேலும் குறிப்பிட்ட சமயங்களில் சந்திரனின் பகுதி மிகவும் கருமையாகத் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. முழு சந்திரனும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும் நேரத்தில் செம்பு- சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் என்பது குறிப்பிடதக்கது. கிரகணத்தின் முழு கட்டம் 8:59 மணிக்கு நிகழ்கிறது. சந்திர கிரகணம் நிகழும் முழு இரவுகளிலும் நிலவு காணப்படுவதில்லை. இதற்கு காரணம் சூரியன் பூமி சந்திரன் என ஒரே கோட்டில் வருவது தான்.

Source: indiatoday

Best Mobiles in India

English summary
Total Lunar Eclipse 2022: Where and How to Watch Blood Moon Live-stream on 16th May

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X