ரூ.12,000முதல் தோஷிபா ஸ்மார்ட் டிவிகள்: கூடுதல் சலுகையோடு இன்றுமுதல் விற்பனை!

|

தோஷிபா ஸ்மார்ட்டிவிகள் ரூ.12,000 என்ற விலை முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்டிவிகளானது அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட தளங்களில் இன்றுமுதல் விற்பனைக்கு வருகிறது.

புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்டிவிகள்

புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்டிவிகள்

இந்தியாவில் போட்டுப்போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்டிவிகள் அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. இந்த பட்டியல் தொடர்ந்து வளர்ந்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது ஜப்பனை சேர்ந்த தோஷிபா நிறுவனமும் இணைந்து வருகிறது. 32 இன்ச் அளவில் தொடங்கிக 65 இன்ச் வரையிலான டிவிகள் அறிமுகம் செய்தது.

இன்றுமுதல் விற்பனை

இன்றுமுதல் விற்பனை

இந்த ஸ்மார்ட்டிவிகள் இன்று முதல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றன. தோஷிபா அறிமுகப்படுத்தும் டிவிகள் ஜப்பானில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூ. 12,990 முதல் தொடங்குகிறது

ரூ. 12,990 முதல் தொடங்குகிறது

இன்று விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்மார்ட்டிவிகள் விலை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்டிவிகளின் விலை ரூ. 12,990 முதல் தொடங்குகிறது. இவை அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டாடா கிளிக் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்.

புதிய தோஷிபா ஸ்மார்ட்டிவியானது விடா ஓஸ் மூலம் இயக்கப்படுகின்றன. தோஷிபா இந்திய சந்தையில் ஏழு டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும் செப்டம்பர் 18 முதல் 21 வரை வாங்கினால் 4 கே டிவிகளின் பேனல்களுக்கு நான்கு ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்குகிறது.

எச்டி முதல் அல்ட்ரா-எச்டி வரை

எச்டி முதல் அல்ட்ரா-எச்டி வரை

தோஷிபா அறிமுகம் செய்த ஏழு டிவிகளும் செப்டம்பர் 18 ஆம் தேதிமுதல் கிடைக்கும். இதில் எச்டி முதல் அல்ட்ரா-எச்டி வரையிலான தீர்மானங்கள் உள்ளன, இதில் டால்பை விஷன் எச்டிஆர் மற்றும் டால்பை அட்மோஸ் ஒலியுடன் வருகிறது.

செல்போனை திருடி செல்பி எடுத்த குரங்கு:செல்போன் எப்படி திரும்பக் கிடைத்தது தெரியுமா?- வீடியோ!

தோஷிபா எல்5050 விலை மற்றும் விவரக்குறிப்புகள்

தோஷிபா எல்5050 விலை மற்றும் விவரக்குறிப்புகள்

புதிய தோஷிபா வரம்பில் மிகவும் மலிவான ஸ்மார்ட்டிவிகள் 32எல்5050 எச்டி டிவி விலை ரூ.12,990 மற்றும் 43எல்5050 முழு எச்டி டிவி ரூ.22,490 ஆக விற்பனைக்கு வருகிறது. ஏடிஎஸ் பேனல்கள் மற்றும் ஸ்மார்ட் இணைப்பிற்கான விடா ஓஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் பல முக்கிய பயன்பாடுகளின் சேவைகளை இது ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

தோஷிபா U5050 விலை மற்றும் விவரக்குறிப்புகள்

தோஷிபா U5050 விலை மற்றும் விவரக்குறிப்புகள்

தோஷிபா யூ5050 சீரிஸ்-ல் மூன்று மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. இவை 4கே பட்டியலாகும். 43யூ5050 (ரூ.27,990), 50யூ5050 (ரூ.32,990), 55யூ5050 (ரூ.36,900) என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது 3840*2160 பிக்சல் எஎல்இடி பேனல், டோல்பை விஷன் ஹெச்டிஆர் மற்றும் டோல்பை ஆட்மாஸ் சவுண்ட் வசதி இதில் உள்ளது.

தோஷிபா யூ7980 விலை மற்றும் சிறப்பம்சங்கள்

தோஷிபா யூ7980 விலை மற்றும் சிறப்பம்சங்கள்

தோஷிபா யூ7980 4கே ஹெச்டிஆர் அம்சத்தோடு வருகிறது. இது 55யூ7980 ரூ.46,990, 65யூ7980 ரூ.66,990 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது விடா ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது, டால்பை விஷன் ஹெச்டிஆர் போனஅற பல்வேறு அம்சங்களோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Toshiba L5050, U5050 Series Smarttv's Sale Start on Today in India: Here the Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X