சக்கரம் கட்டி நடக்குதய்யா இங்கிலாந்து ஆமை..!

|

இது முயலை முந்திய ஆமை கதையில் வரும் ஆமையின் பரம்பரையயை சேர்ந்தது அல்ல, சாதாரண ஆமைதான். ஆனால் எல்லோரையும் சற்று திரும்பி பார்க்க வைக்கும் ஆமை, இதன் பெயர் - டச்சீ, அதாவது வெற்றியை ஒப்புக்கொள்ளுதல் என்று அர்த்தம்.

சக்கரம் கட்டி நடக்குதய்யா இங்கிலாந்து ஆமை..!

இங்கிலாந்து நாட்டில் உள்ள ப்ரிஸ்டோலில் கடந்த வாரம் நடந்த விபத்தொன்றில் இந்த ஆமை தன் இடது பின்னங்கால்தனை இழந்தது. பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த ஆமைக்கு மாற்று காலாக, ஒரு பொம்மை காரின் சக்கரம் பொருத்தப்பட்டது.

ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

டச்சீ நடந்து செல்லும் போது எளிமையாக உதவும் வகையில் அந்த சக்கரமானது அதன் மேல் ஒடுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. டச்சீக்கு தன் புதுமையான கால் மிகவும் பிடித்து இருக்கிறது என்றும், அது பூங்காக்களில், ஒன்றுமே நடக்காதது போல ஹாயாக உலவி வருகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

உடன், இந்த சக்கரமானது டச்சீயின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் எடையை தாங்கும் வண்ணம் வரும் நாட்களில் மாற்றப்படும் என்றும், டச்சீக்கு தன் வாழ்நாள் முழுவதும் சக்கரம் கட்டி நடப்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
A tortoise that lost his one leg after an accident is back on its feet after having a toy car wheel fitted.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X