டோரண்ட்ஹவுண்ட் : "ப்ஹினிட்டோ" அதாவது "முடிந்தது"..!

Written By:

ஆன்லைன் பைரஸி இறுதியாக அதன் மகிமையை தொலைத்து விட்டது என்றே கூறலாம். அப்படியாக கிக்காஸ் டோரண்ட்ஸ் மற்றும் டோரண்ட்ஸ்.இயூ வலைத்தளங்களை தொடர்நது டோரண்ட்ஹவுண்ட் வலைத்தளம் தனது வலைதளத்தையும் ஆன்லைன் பைரஸி சகாப்தத்தையும் ஷட் டவுன் செய்து கொண்டது.

டோரண்ட்ஹவுண்ட் :

கிக்காஸ் டோரண்ட்ஸ் மற்றும் டோரண்ட்ஸ்.இயூ வலைத்தளங்களுக்கு அடுத்ததாக டோரண்ட்ஹவுண்ட் வலைத்தளம் தான் மூன்றாவது பெரிய ஆன்லைன் பைரஸி வலைத்தளமான திகழ்ந்தது என்பதும் இப்போது தானாக முன்வந்து வலைதளத்தை ஷட் டவுன் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாலிய மொழியில் 'ப்ஹினிட்டோ' அதாவது "முடிந்தது" என்ற ஓற்றை வார்த்தை செய்தியில் இந்த வலைதளத்தின் நிறுவனர் வலைத்தளத்தின் பணிநிறுத்தத்தை குறிப்பிட்டிருந்தார்.

டோரண்ட்ஹவுண்ட் :

இந்த வலைத்தளம் 2007-ல் மீண்டும் நிறுவப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் வரை இயங்கி இப்போது அதன் நிறுவனரால் மூடப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, கிக்காஸ் டோரண்ட் நிறுவனரான ஆர்டோ வாலின் போலந்தில் செய்யப்பட அது மூடப்பட்டது, அதனை தொடர்ந்து பிரபல தேடல் பொறியான டோரண்ட்ஸ்.இயூ வலைத்தளமும் பிரியாவிடை அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

பைத்தியக்காரத்தனமான வேகத்தில் ஜியோ ஜிகாபைபர் : 'லீக்' தகவல்கள்..!
ஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் எடுக்கப்பட்டதற்கான உண்மை காரணம் இது தான்.!Read more about:
English summary
TorrentHound Shuts Down Voluntarily, Joins Kickass Torrents and Torrentz.eu. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot