'இதையெல்லாம்' நம்பி இருந்தால், நீங்கள் தான் பெரிய முட்டாள்..!
உண்மையை நம்புவதற்கு தான் ஒரு நூற்றாண்டு ஆகும், ஆனால் பொய்களையும், புரளிகளையும் நம்புவதற்கு அரை நொடி மட்டும் போதும் - என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பதற்கு நம்மில் பல கோடி பேர் இங்கு சாட்சி..!
"அப்படியெல்லாம் ஒண்ணும் நான் ஏமாந்து போனது இல்லப்பா..!" என்பது உங்கள் 'மைண்ட்-வாய்ஸ்' என்றால், சரி அதையும் பார்த்து விடலாம். இதுவரை இன்டர்நெட்டில் வெளியான மிக மோசமான புரளிகள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டிருக்கின்றன..!
அவைகளை பார்த்து முடித்தப்பின் எதையெல்லாம் நம்பி நீங்கள் மிக மோசமாக ஏமாந்து போய் இருக்கிறீர்கள் என்பது தெரிந்து விடும்..!

ஐ போன் + வெங்காயம்..!
வெங்காயத்தை பயன்படுத்தி, உங்கள் ஐபோனை சார்ஜ் செய்வது எப்படி..? என்று வெளியான வீடியோ புரளி..! அது சாத்தியமே இல்லை..!
வீடியோ..!
வெங்காயத்தை பயன்படுத்தி, உங்கள் ஐபோனை சார்ஜ் செய்வது எப்படி..? என்று வெளியான வீடியோ இதுதான்..!

அசுர விலங்கு :
இறந்து கடலோரத்தில் ஒதுங்கிய விசித்திரமான அசுர விலங்கு என்று 2008-ஆம் ஆண்டு வெளியான மான்டாக் மான்ஸ்டர் (Montauk Monster) புரளி..!

தேவதை..!
இபே (eBay) வலைதளத்தில் 'விற்பனைக்கு..!' என்று வெளியான விசித்திரமான கருப்பு நிற இறக்கைகள் கொண்ட, கை அளவில் உள்ள தேவதை..!
வீடியோ..!
2006-ஆம் ஆண்டு வெளியான தெர்பைஷைர் தேவதை (Derbyshire Fairy) புரளி..!

பில் கேட்ஸ்..!
1997-ஆம் ஆண்டு, உலகின் மிக பெரிய பணக்கார்களில் ஒருவரான பில் கேட்ஸ் தன் பணம் அனைத்தையும் மக்களுக்கு கொடுக்க போவதாக வெளியான புரளி..!

ஒட்டக சிலந்திகள்..!
2004-ஆம் ஆண்டு ஈராக்கில் மிக பெரிய ஒட்டக சிலந்திகள் சிக்கியதாக வெளியான புரளி..!

ஹெர்க்குலஸ் நாய்..!
2007 ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய நாய் ஹெர்க்குலஸ் என்றும், அதன் எடை 282 பவுண்ட் என்றும் கிளம்பிய புரளி..!

பனி மனிதன்..!
2008-ஆம் ஆண்டு மாபெரும் செய்தி ஊடகமான சிஎன்என் தொடங்கி சாதாரண ஊடகம் வரை அனைத்தையும் ஏமாற்றிய 'பனி மனிதன்' புரளி..!

மூன்று :
2002-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மூன்று கடல்சூறாவெளி ஏற்பட்டதாக வெளியான புரளி..!

மறுபடியும் பில்கேட்ஸ்..!
1994-ஆம் ஆண்டு பில்கேட்ஸ் 'கத்தோலிக்க சர்ச்'களை விலைக்கு வாங்கி அதை மைக்ரோசாப்ட் உடன் இணைத்து, மதத்தை பரப்ப போவதாக வெளியான புரளி..!
கூகுள் டிவி..!
'யூட்யூபர்' (YouTuber) ஆன மார்க் எரிக்சன் கூகுள் டிவியை பற்றி வெளிவிட்ட வீடியோ புரளி..!
தி ப்ளேர் விட்ச் ப்ராஜக்ட் (The Blair Witch Project)..!
காட்டுக்குள் செல்பவர்கள் காணாமல் போகும் திகில் படம் ஒன்று 1999-ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தை மையமாக கொண்டு அது உண்மை என்பது போல் வெளியான புரளியான திகில் வீடியோ..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications








