டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் இவரா?-அமேசான், பேஸ்புக் நிறுவனர்கள் பிடித்த இடம் இதுதான்!

|

ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜனவரி 8 2021 வரை ப்ளூம்பெர்க் அறிவிப்பின்படி உலக பணக்காரர்கள் பட்டியலின் டாப் 10 இடத்தை பிடித்தவர்களை பார்க்கலாம்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்

முதலிடத்தை பிடித்தவர் டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க். அமெரிக்க தொழிலதிபரான இவரின் சொத்து மதிப்பு 195 பில்லியன் டாலராகும். இவர் உலகின் முதல் பணக்காரராவார். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகி ஆவார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலராகும். இவர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்முதல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். இவரை பின்னுக்கு தள்ளி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்

மூன்றாவது இடத்தில் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸை அறியாதவர்கள் மிக சொர்ப்பம். பில் கேட்ஸ் என்று கூறியதும் நினைவுக்கு வருவது உலக பணக்காரர்கள் பட்டியல்தான். அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் உலக செல்வந்தர்களில் பிரதானமானவர். இவரது சொத்து மதிப்பு 134 பில்லியன் டாலராகும். தற்போது பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவி நடத்தி வருகின்றனர்.

பெர்னார்ட் அர்னால்ட் நான்காவது இடம்

பெர்னார்ட் அர்னால்ட் நான்காவது இடம்

நான்காவது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலராகும். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் உலகின் மிக சொகுசு மிக்க பொருட்களின் நிறுவனமான லூயிஸ் விட்டன் எஸ்இ- ன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஆவார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்

ஐந்தாவது இடத்தில் உள்ளவர் மார்க் ஜுக்கர்பெர்க். மார்க்ஜக்கர்பெர்க் யார் என்று கேட்டால் பெரும்பாலோனார் உடனடியாக சொல்வது பேஸ்புக் ஓனர் என்றுதான். ஆனால் இவர் உலக பணக்காரர்கள் நான்காவது நபர் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இவரது சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலராகும். ஃபோர்ப்ஸின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் 40 வயதுக்கு உட்பட்டவர் மார்க் ஜுக்கர்பெர்க் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

யார் இந்த Elon Musk? உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்: வெற்றியின் ரகசியம் இதுதான்!யார் இந்த Elon Musk? உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்: வெற்றியின் ரகசியம் இதுதான்!

ஆறாவது இடத்தில் ஜாங் ஷான்ஷன்

ஆறாவது இடத்தில் ஜாங் ஷான்ஷன்

ஜாங் ஷான்ஷன் ஆறாவது இடத்தில் உள்ளார். இவர் மிக சைலண்டாக குறுகிய காலத்தில் பணக்காரராக உருவெடுத்தவர். சீனாவை சேர்ந்த இவர் தண்ணீர் பாட்டில் விற்கும் நோங்பூ நிறுவனத்தின் தலைவராவார். இவரது சொத்து மதிப்பு 93.1 பில்லியன் டாலராகும். இவர் பொதுவெளியில் அதிகமாக தோன்றுவதில்லை.

பலரின் வழிகாட்டி வாரன் பஃபெட்

பலரின் வழிகாட்டி வாரன் பஃபெட்

ஏழாவது இடத்தில் உள்ளவர் வாரன் பஃபெட். பங்கு சந்தையில் இருக்கும் பலருக்கும் இவர் கதாநாயகனாக உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு 88.2 பில்லியன் டாலராகும். உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர்களில் இவரும் ஒருவர்

எட்டாவது இடத்தில் லாரி பேஜ்

எட்டாவது இடத்தில் லாரி பேஜ்

எட்டாவது இடத்தில் லாரி பேஜ், இவரது சொத்து மதிப்பு 83.6 பில்லியன் டாலராகும். கூகுளின் இரண்டு இணை நிறுவனர்களில் லாரி பேஜ் ஒருவர். பின் 2015 இல் ஆல்பாபெட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். ஆல்பாபெட் கூகுளின் தாய் நிறுவனமாகும்.

ஒன்பதாவது இடத்தில் செர்ஜி பிரின்

ஒன்பதாவது இடத்தில் செர்ஜி பிரின்

ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் செர்ஜி பிரின், கூகுள் இணை நிறுவனராக இருந்த பிரின், டிசம்பர் 2019 வரை ஆல்பாபெட் இன்க் தலைவராக இருந்தார். இவரது சொத்து மதிப்பு 81 பில்லியன் டாலராகும்.

பத்தாவது இடத்தில் லாரி எலிசன்

பத்தாவது இடத்தில் லாரி எலிசன்

பத்தாவது இடத்தில் இருப்பவர் லாரி எலிசன். அமெரிக்காவை சேர்ந்த இவரது சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலராகும். இவர் ஆரக்கிள் இணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமாவார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top Ten Richest Persons in The World 2021 List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X