உலக அழிவின் நுழைவு வாயில்..!!

Posted By:

தொல்லியில் ஆய்வாளர்களின் படி உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாக இருப்பது வில் மற்றும் அம்பு தான். எதிரிகளை எதிர்கொள்ள கண்டறியப்பட்ட ஆயுதங்கள் கால மாற்றங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் அபார வளர்ச்சியை கண்டுள்ளன.

உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!

அந்த வகையில் ஆயுதங்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தொழில்நுட்பம் தான். இன்றைய தேதியில் உலகின் பல்வேறு தரப்பில் இருந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் குரல்கள் ஓங்கினாலும், தீவிரவாதம் இன்றும் உலகை அச்சுறுத்தி வருவது தான் உண்மை.

சர்வ நாசம் : 'காத்திருக்கும்' 10 அதிநவீன ஆயுதங்கள்..!

தீவிரவாதம் மற்றும் மற்ற நாடுகளுடனான பிரச்சனைகளில் சிக்கி தினந்தோரும் எண்ணில் அடங்கா அப்பாவி மக்கள் உயிர் இழந்து வருகின்றனர். தீவிரவாதத்தை முன் வைத்து சூப்பர் பவர் நாடுகள் அரசியல் செய்யும் நோக்கில், இதே நிலை நீடிப்பது உலக அழிவின் ஆரம்பம் என்றே கூற வேண்டும்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆயுதங்கள்

ஆயுதங்கள்

உலக அழிவின் ஆரம்ப காரணமாகவும், துணையாகவும் இருக்கும் அபாயகரமான அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

மேக்புல் எஃப்எம்ஜி-9

மேக்புல் எஃப்எம்ஜி-9

உளவு பிரிவினர் அதிகம் பயன்படுத்தும் இந்த வகை துப்பாக்கியை மடக்கி வைத்தால் பார்க்க லாப்டாப் போன்றே காட்சியளிக்கும். இந்த வகை இயந்திர துப்பாக்கியை அமெரிக்காவின் உளவு பிரிவு தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.

கார்னர் ஷாட் கிரீனேடு லான்ச்சர்

கார்னர் ஷாட் கிரீனேடு லான்ச்சர்

எறிகுண்டு லான்ச்சரில் இலக்கினை துல்லியமாக அடைய வழி செய்வதோடு இதில் டிஜிட்டல் கேமரா இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலக்கினை மிகவும் துல்லியமாக பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

அர்மாடிக்ஸ் டிஜிட்டல் துப்பாக்கி

அர்மாடிக்ஸ் டிஜிட்டல் துப்பாக்கி

ஆயுதங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த வகை துப்பாக்கி. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த துப்பாக்கியில் எலக்ட்ரானிக் சேஃப்டி ஃபன்க்ஷன் இருக்கின்றது.

அர்மாடிக்ஸ் டிஜிட்டல் துப்பாக்கி ஆப்ஷன்

அர்மாடிக்ஸ் டிஜிட்டல் துப்பாக்கி ஆப்ஷன்

எலக்ட்ரானிக் சேஃப்டி ஃபன்க்ஷன் ஆப்ஷன் மூலம் மணிக்கட்டு கை கடிகாரத்தை கொண்டு இந்த துப்பாக்கியை செயல் இழக்க செய்வதோடு இதில் இருக்கும் எல்ஈடு விளக்கினை கொண்டு, துப்பாக்கி பயன்பாட்டில் இருக்கின்றதா இல்லை ஆஃப் செய்யப்பட்டுளளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மெட்டாடெர் ராக்கெட் லான்ச்சர்

மெட்டாடெர் ராக்கெட் லான்ச்சர்

இந்த அதிநவீன தொழில்நுட்ப ஆயுதமானது ஷாட் இன்டர்வெல் மோடு மற்றும் ப்ளாஸ்ட் மோடு என இரு வித பயன்பாடுகளை வழங்குகின்றது.

அழிவு

அழிவு

இந்த இரு மோடுகளும் பேரழிவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டிருப்பதோடு கடினமான போர் நிலைகளுக்கும் ஏற்றது என கூறப்படுகின்றது.

கேஏசி எம்110 ஸ்னைப்பர் ரைஃபிள்

கேஏசி எம்110 ஸ்னைப்பர் ரைஃபிள்

உலகின் முதல் செமி ஆட்டோமேடிக் ஆயுதமாக இருக்கும் இந்த துப்பாக்கியை கொண்டு 3200 அடி தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்க முடியும்.

சிஸ்டம்

சிஸ்டம்

மேலும் இதில் இருக்கும் க்ளியர் மற்றும் அக்யூரேட் டார்கெட்டிங் சிஸ்டம் வீரர்களின் குறி தவறாமல் பார்த்து கொள்ளும்.

எக்ஸ்எம்25 கிரீனேடு லான்ச்சர்

எக்ஸ்எம்25 கிரீனேடு லான்ச்சர்

அதிகபட்சமாக சுமார் 2300 அடி இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த லான்ச்சரில் நான்கு வார் ஹெட்கள் இருக்கின்றது.

லேசர்

லேசர்

இந்த லான்ச்சரில் பொருத்தப்பட்டிருக்கும் அதி நவீன லேசர் மற்றும் சென்சார்கள் இல்கை மிகவும் துல்லியமாக அடைய வழி செய்யும் என்பதோடு, உலகளவில் பயன்பாட்டில் மிக சிறப்பாக இலக்குகளை அடைய இந்த லான்ச்சர் தான் சிறப்பானதாகும்.

பரெட்டா எல்டிஎல்எக்ஸ்7000 ஷாட்கன்

பரெட்டா எல்டிஎல்எக்ஸ்7000 ஷாட்கன்

தோட்டாக்களை மிகவும் வேகமாக செலுத்துவதில் முதன்மையாக விளங்கும் இந்த வகை துப்பாக்கி அதிகபட்சம் 230 அடி வரை இலக்குகளை அடைய முடியும்.

எம்32 மல்ட்டிபிள் கிரீனேடு லான்ச்சர்

எம்32 மல்ட்டிபிள் கிரீனேடு லான்ச்சர்

ஆறு விணாடிகளில் 40எம்எம் கிரீனேடுகளை செலுத்தும் திறன் கொண்ட இந்த வகை லான்ச்சர்கள் தான் தற்சமயம் உலகின் அதிவேக லான்ச்சர் ஆகும். நிமிடத்திற்கு இந்த லான்ச்சர் மூலம் 18 கதிரீனேடுகளை செலுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எச்கே எம்320 கிரீனேடு லான்ச்சர்

எச்கே எம்320 கிரீனேடு லான்ச்சர்

உலகின் தலைசிறந்த லான்ச்சர்களில் ஒன்றான எச்கே எம்320 பல்வேறு செயல்பாடுகளை வழங்குவதோடு இரவு நேரங்களிலும் மிகவும் துல்லியமாக பயன்படுத்த முடியும்.

பேரெட் எம்ஆர்ஏடி

பேரெட் எம்ஆர்ஏடி

அதி நவீன ஆயுதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக கருதப்படும் இவ்வகை துப்பாக்கிகளை கொண்டு இலக்குகளை 100 சதவீதம் துல்லியமாக அடைய முடியும்.

பேரெட் எம்ஆர்ஏடி

பேரெட் எம்ஆர்ஏடி

இலக்குகளை மிகவும் துல்லியமாக அடைவதோடு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் சிரமம் இன்றி பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில்

முகநூலில்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Top Ten High Tech Dangerous Weapons. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot