ரூ.74,999 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.29,999.. Amazon இல் அதிகம் விற்பனையாகும் மொபைல் பட்டியல்!

|

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய கேட்ஜெட்களை தற்போது மலிவு விலையில் வாங்கலாம். அதற்கான சரியான தருணம் இது.

பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் பண்டிகை தின விற்பனையை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை அதீத தள்ளுபடியில் வாங்கலாம்.

பண்டிகை கால விற்பனை விவரம்..

பண்டிகை கால விற்பனை விவரம்..

இந்த பண்டிகை கால விற்பனையில் அமேசானில் சிறந்த தள்ளுபடியுடன் அதிக வரவேற்புப் பெற்ற ஸ்மார்ட்போன்களை தான் பார்க்கப்போகிறோம்.

இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசானில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம் வாங்க.

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G ஸ்மார்ட்போனானது மிகவும் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் பேனல் இடம்பெற்றுள்ளது. இதில் 60 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

அமோக வரவேற்புக்கு காரணம் இதுதான்..

அமோக வரவேற்புக்கு காரணம் இதுதான்..

தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999 என கிடைக்கிறது. வங்கி சலுகைகள் உட்பட கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 என வாங்கலாம். ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.16,999க்கு கிடைக்கிறது என்றால் வரவேற்பு இல்லாமல் இருக்குமா என்ன?

Samsung Galaxy S20 FE 5G

Samsung Galaxy S20 FE 5G

அதீத தள்ளுபடியில் கிடைக்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் Samsung Galaxy S20 FE 5G ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம்.

இந்த ஸ்மார்ட்போனானது ரூ.74,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 61% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சலுகைகள் பயன்படுத்தும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.26,249 என வாங்கலாம்.

ப்ரீமியம் தர ஸ்மார்ட்போன்..

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயங்குகிறது.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 12MP + 12MP + 8MP டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

Apple iPhone 12 (128 ஜிபி)

Apple iPhone 12 (128 ஜிபி)

ஆப்பிள் ஐபோன் 12 ஆனது ரூ.70900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999 என கிடைக்கிறது. இந்த ஐபோன் மாடலுக்கு 26% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சலுகைகளுடன் இந்த ஐபோன் மாடலை ரூ.46,749 என வாங்கலாம்.

இதன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஏ14 பயோனிக் சிப் மூலம் இந்த ஐபோன் மாடல் இயக்கப்படுகிறது.

Samsung Galaxy M13

Samsung Galaxy M13

Samsung Galaxy M13 ஸ்மார்ட்போன் மிட் ரேன்ஜ் ஆர்வலர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் விற்கப்பட்ட ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் தற்போது கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ரூ.14,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.8199 என கிடைக்கிறது.

6.6 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

Redmi A1

Redmi A1

ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனானது ரூ.8999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.6299 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

HD+ டிஸ்ப்ளே உடன் MediaTek Helio A22 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

OnePlus Nord CE 2 5G

OnePlus Nord CE 2 5G

OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போனானது 65W SUPERVOOC சார்ஜிங் உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே அமைப்பு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கூடுதல் சலுகையுடன் ரூ.22,749 என கிடைக்கிறது.

OnePlus 10R 5G

OnePlus 10R 5G

OnePlus 10R 5G ஸ்மார்ட்போனானது ரூ.38,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 என கிடைக்கிறது.

ஏறத்தாழ ரூ.10,000 தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

50MP டிரிபிள் கேமரா அமைப்பு, 80W SUPERVOOC சார்ஜிங் ஆதரவுடன் 6.7-இன்ச் 120Hz டிஸ்ப்ளே, MediaTek Dimensity 8100-Max சிப்செட் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது.

Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G ஸ்மார்ட்போனானது ரூ.20,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.12749 என கிடைக்கிறது.

பக்கா மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக வாங்க சரியான வாய்ப்பு இது.

இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி+ 90 ஹெர்ட்ஸ் பேனல், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

50 எம்பி பிரதான பின்புற கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Top Selling Smartphones in Amazon Great Indian Festival Sale 2022: Available Upto 61% Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X