Home
News

ஜியோ பயனர்களை கவரும் ரூ.299 திட்டம்.. அப்படி என்ன இருக்கு இந்த Jio ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில்..

ஜியோ (Jio) பயனர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகமாக விரும்பி மீண்டும் - மீண்டும் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் திட்டங்களின் (Jio prepaid plans) விபரங்களை ஜியோ வெளியிட்டுள்ளது.

இதில் ரூ.299, ரூ. 749, ரூ. 1,198 மற்றும் ரூ.2,999 ஆகிய திட்டங்களை ஜியோ நிறுவனம் சுட்டி காண்பித்துள்ளது. ஜியோ வலைபக்கத்தின் தகவல் படி, இந்த 4 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் அதிக முறை, ஜியோ பயனர்களால் மீண்டும் - மீண்டும் ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ பயனர்களை கவரும் ரூ.299 திட்டம்.. அப்படி என்ன இருக்கு?

டாப் செல்லிங் ஜியோ ப்ரீபெய்ட் பிளான்ஸ் (Top selling Jio prepaid plans): என்ற பிரிவின் கீழ் இந்த 4 ரீசார்ஜ் திட்டங்களையும் ஜியோ அதன் பயனர்களுக்கு சுட்டிக்காண்பித்துள்ளது. இதில் அதிக முறை மக்கள் விரும்பி ரீசார்ஜ் செய்யப்பட்ட ஜியோ ப்ரீபெய்ட் திட்டமாக ரூ. 299 திட்டம் திகழ்கிறது. இந்த திட்டம் அதிக முறை மக்களால் ரீசார்ஜ் செய்யப்பட்டதற்கு இதன் மலிவு ஒரு முக்கிய காரணமாகும்.

குறைந்த விலையில் சிறந்த நன்மைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை இந்த ரூ.299 திட்டம் அதிக செலவின்றி நிறைவேற்றுவதனால், இது மக்களிடையே மிகவும் பிரபலமான திட்டமாக திகழ்கிறது. உண்மையை சொல்ல போனால், இளைஞர்கள் முதல் பெரியார்கள் வரை எல்லோரிடமும் மிகவும் பிரபலமான பெஸ்ட் ட்ரெண்டிங் ஜியோ திட்டமாக இந்த ரூ.299 திட்டம் செயல்படுகிறது.

சரி, இப்படி மக்களால் அதிகம் விரும்பப்படும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாமா? ஜியோ நிறுவனம் ரூ. 299 விலை கொண்ட இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்கி வருகிறது. இந்த திட்டம் அதன் விலைக்கு ஏற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஜியோ பயனர்களை கவரும் ரூ.299 திட்டம்.. அப்படி என்ன இருக்கு?

தினசரி டேட்டா: இது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை அதன் பயனர்களுக்கு தடையில்லாமல் 28 நாட்களுக்கு வழங்குகிறது. இதன் முதல், இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 56ஜிபி டைட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த திட்டத்துடன் ஜியோ வழங்கும் இலவச நன்மைகளும் கிடைக்கிறது. இந்த ரூ. 299 திட்டத்துடன் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற ஜியோவின் பிரத்தியேகமான சேவைக்கான அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது. அதேபோல், ஜியோ 5ஜி கிடைக்கும் வட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யப்பட்ட நபர்களுக்கு இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது.

ஜியோ நிறுவனம் அதன் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G) திட்டத்தின் கீழ் இந்த இலவச டேட்டா நன்மையை 5ஜி வட்டங்களில் வழங்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி இணக்கம் இருந்தால், இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Top selling Jio prepaid plans with unlimited true 5g data benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X