மிகவும் ரகசியமான அமெரிக்கத் தொழில் நுட்பம் வெளிப்பட்டு விட்டதா? வினோதமான முக்கோண வடிவ விமானத்தால் பரபரப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ (El Paso) நகரைச் சேர்ந்தவர்கள் வானத்தில் வினோதமான முக்கோன வடிவப் பொருள் பறப்பதைக் கண்டுள்ளனர்.

|

அமெரிக்காவின் இரகசிய இராணுவத் தளத்திற்கு அருகே முக்கோண வடிவ மர்மமான பறக்கும் பொருள் (triangular UFO) கண்டறியப்பட்டு உள்ளது. அது அமெரிக்க ராணுவம் சோதித்துப் பார்த்த TR-3B விமானமாகக் கூட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மிகவும் ரகசியமான அமெரிக்கத் தொழில் நுட்பம் வெளிப்பட்டு விட்டதா?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ (El Paso) நகரைச் சேர்ந்தவர்கள் வானத்தில் வினோதமான முக்கோன வடிவப் பொருள் பறப்பதைக் கண்டுள்ளனர். செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில் இது நிகழ்ந்துள்ளது. அதனைக் கண்டவர்கள் அதனைப் படம் பிடித்துள்ளனர். இந்நகருக்கு அருகே அமெரிக்க ராணுவ ஆய்வு மையம் உள்ளது. இம் மையத்திலிருந்து சோதனைக்காகப் பறக்கவிடப்பட்ட விமானமாக அது இருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு.

இந்த முக்கோண வடிவ மர்ம விமானம் தொடர்பாகப் பல குழப்பமான செய்திகளும் உலா வருகின்றன. கருப்பு அரசாங்கத் திட்டத்தின் (black government project) ஒரு பகுதியாக இருக்கும் TR-3B விமானமாகக் கூட அது இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.

அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள நகரங்களுக்கு அருகே இது போன்ற மர்மமான விமானங்களை இதற்கு முன்னர் பலர் கண்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள எட்வர்டு விமானப் படைத் தளம், அமெரிக்க ஐக்கிய விமானப் படைப் பிளான்ட் 42 ஆகிய விமானத் தளங்கள் அமைந்துள்ள இடங்களில் இது போல நிகழ்ந்துள்ளது.

காரில் சென்ற ஒருவர் வானத்தில் கண்ட வினோதமான பொருளைக் கண்டு படம் பிடித்தபோதுதான் இந்தப் பறக்கும் பொருள் குறித்துத் தெரிய வந்துள்ளது.

மிகவும் ரகசியமான அமெரிக்கத் தொழில் நுட்பம் வெளிப்பட்டு விட்டதா?

சூப்பர்சோனிக் விமானம் போலக் காணப்படும் இந்த பறக்கும் பொருளை இணையத்தில் பதிவேற்றம் செய்தபிறகு அதனை ஆயிரக் கணக்கானோர் கண்டுள்ளனர்.

“வானத்தில் ஏதோ வித்தியாசமான பொருள் போலத் தோன்றியதால் அதனைப் படம்பிடித்தேன்” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்நகருக்கு அருகில் வொய்ட் சான்ட் ஏவுகனை ஏவுதளம் (White Sands Missile Range) அமைந்துள்ளதால் இது போன்ற வினோத விமானங்கள் வானில் அடிக்கடி பறக்கின்றன. இங்குள்ள இராணுவ மையம் மிகப் பெரியதும், மிகவும் இரகசியம் வாய்ந்த இராணுவத் தளவாடங்கள் வைக்கப்பட்டுள்ள இடமாகவும் கருதப்படுகிறது.

வொய்ட் சான்ட் ஏவுதளத்தில்தான் புதியதாக உருவாக்கப்படும் ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படும். உலகின் முதல் அணுக் குண்டு சோதனையும் இங்குதான் மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

இங்கு சோதித்துப் பார்க்கப்படும் அனைத்துத் தளவாடங்களும் மிக உயர் ரகத்தைச் சேர்ந்தவையாகும்.

மிகவும் ரகசியமான அமெரிக்கத் தொழில் நுட்பம் வெளிப்பட்டு விட்டதா?

“ இது போன்ற மர்மமான விமானங்கள் பறப்பது இந்தப் பகுதியில் அடிக்கடி நிகழும்” என எல் பசோ (El Paso) நகரப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

அந்த வினோதமான விமானம் TR 3B விமானம் என ஒரு சிலர் தெரிவித்தாலும்,

வானத்திலிருந்து உளவு பார்ப்பதற்கான இராணுவத்தின் இரகசியமான தொழில் நுட்பமாகவும் அது இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.

சமீப நாட்களாக இது போன்ற இரகசிய உளவு விமானங்கள் ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கண்டதாகச் சிலர் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Top secret US technology SPOTTED Mysterious triangle UFO linked to military experiments: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X