அடடே.. "இந்த" மதிப்பில் மட்டும் சுந்தர் பிச்சை பின்னுக்கு தள்ளப்பட்டார்.!

|

ஐஐஎப்எல் வெல்த் ஹூயுரன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பணக்கார சிஇஓ பட்டியலில், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஐஐஎப்எல் வெல்த் ஹூயுரன் அமைப்பு வெளியிட்டது, 10 சிஇஓக்கள் பட்டியல், ஆனால் இவர்களில் ஒன்பது பேர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள். ஒருவர் மட்டுமே இந்தியாவில் சிஇஓவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தாமஸ் குரியன்

தாமஸ் குரியன்

தாமஸ் குரியன் என்பவர் 22-ஆண்டுகளாக ஆரக்கிளில் பணியாற்றினார், பின்பு கடந்த 2008-ம் ஆண்டு கூகுள் க்ளவுடில் சேர்ந்தர். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 10,600கோடி ரூபாய். குறிப்பாக இவர் பிரின்ஸ் பல்கலையில் இளங்கலை முடித்து ஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ முடித்தவர்.

ஜெயஸ்ரீ உல்லால்

ஜெயஸ்ரீ உல்லால்

ஜெயஸ்ரீ உல்லால் என்பவர் அமெரிக்காவில் இருக்கும் அரிஸ்டா நெட்வொர்க்கின் சிஇஓவாக இருப்பவர் ஆவார். இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்குமுன்பு சிஸ்கோ சிஸ்டத்தில் பணியாற்றினார். இவரின் சொத்து மதிப்பு ரூ.9,800 கோடி ஆகும்.

மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!

நிகேஷ் அரோரா

நிகேஷ் அரோரா

நிகேஷ் அரோரா சாப்ட் பாங்கின் நிறுவனராக இருந்தவர் ஆவார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்தாண்டு பாலோ அல்டோ நெட்வொர்க் நிறுவனத்தின்
சேர்ந்தார், அங்கும் அவருக்கு 128மில்லியன் சம்பளம் வழங்கப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு 6,000கோடி எனத் தெரியவந்துள்ளது.

 அஜய் பாங்கா

அஜய் பாங்கா

மாஸ்டர்கார்டு எனும் நிறுவனத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக பணியாற்றிய வருகிறார் அஜய் பாங்கா.டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த இவர் பின்னர் அகமதாபாத்தில் இருக்கும் ஐஐஎம்-மில் இந்திய மேலாண்மை படிப்பை முடித்தார். இவரின் சொத்து மதிப்பு ரூ.5,200 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்யா நாடெல்லா

சத்யா நாடெல்லா

இவருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூன்றாவது சிஇஓவாக இருக்கிறார். 2014-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்குமுன்பு முன்பு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் எம்ஐடியில் படித்தவர். இவரின் சொத்து மதிப்பு ரூ.5,100-கோடியாகும்.

அடி ஆத்தாடி இனி ஸ்மார்ட்போன் இப்படித்தான் வருமா: தனி கெத்து மாடல்.!அடி ஆத்தாடி இனி ஸ்மார்ட்போன் இப்படித்தான் வருமா: தனி கெத்து மாடல்.!

சாந்தனு நாராயண்

சாந்தனு நாராயண்

சாந்தனு நாராயண் ஐதராபாத்தைச் சேர்ந்தவர், இவர் அடோப் நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இவர் எலக்ட்ரானிக்ஸில் இளங்கலை படிப்பை முடித்தவர், கம்ப்யூட்டர் சயின்சில் முதுகலை பட்டம் முடித்தார். இவரின் சொத்து மதிப்பு 4,500 கோடியாகும்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

உலகம் முழுவதும் மிகமிக பிரபலமான நபர் எனக் கூறலாம், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுந்தர் பிச்சை.அன்மையில் கூகுள் சிஇஒவாக பணியில் சேருவதற்கு விண்ணப்பம் கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு வெளியாகி இருந்தது, கடைசியில் அது போலி என்பது தெரிய வந்தது. அதற்கும் லட்சக்கணக்கில் விண்ணப்பித்து
இருந்தார்கள் என்பது தான் நகைச்சுவை. இவரது சொத்து மதிப்பு 3,300 கோடி ஆகும்.

இந்திரா நூயி

இந்திரா நூயி

இந்திரா நூயி அமெரிக்காவின் பெப்சிகோ நிறுவனத்தின் சிஇஒவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். தொடர்ந்து உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்று வந்தவர். இவரது சொத்து மதிப்பு 3200 கோடியாகும்.

 இக்னாசியஸ் நவில் நோரன்ஹா

இக்னாசியஸ் நவில் நோரன்ஹா

இக்னாசியஸ் நவில் நோரன்ஹா என்பவர் தான் இந்தியாவில் பணியாற்றி இந்த பட்டியலில் இடம் பெற்ற சிஇஓ ஆவார். கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தில் சிஇஓவாக இருந்து வருகிறார். இவரின் சொத்து மிப்பு 2,200கோடியாகும்.

ராபின் ரெய்னா

ராபின் ரெய்னா

ராபின் ரெய்னா எபிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஒவாக இருக்கிறார். இவரது பெயரில் ஏழைக் குழந்தைகளின் கல்வி, இருப்பிடம், உணவு, மருத்துவம் ஆகியவற்றுக்கு இலவசமாக சேவை
செய்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 1,700கோடி எனத் தெரியவந்துள்ளது.

Source: economictimes.indiatimes.com

Best Mobiles in India

English summary
Top Richest Indian CEO's in World: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X