Jio பயனர்கள் ஏன் 'இந்த திட்டங்களை' அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்கள் தெரியுமா? காரணம் இது தான்!

|

ரிலையன்ஸ் ஜியோ (JIo) சமீபத்தில் அதன் சலுகைகளில் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்த்துள்ளது. அந்த திட்டங்களில் உள்ள சில குறிப்பிட்ட திட்டங்கள் 30 நாள் செல்லுபடியாகும் முழு ஒரு மாத வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்களுக்குப் பல விதமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த புதிய Jio ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையோடு வருகிறது என்பதால் உங்களுக்கு ஒரு முழுமையான நன்மை கிடைக்கிறது.

ஏன் இந்த திட்டங்களை அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்கள்?

ஏன் இந்த திட்டங்களை அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்கள்?

ஆம், நீங்கள் படித்தது சரி தான், வழக்கமாகக் கிடைக்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வரும் திட்டம் போன்று இந்த திட்டங்கள் செயல்படுவதில்லை. இந்த திட்டங்கள் முழுமையாக ஒரு மாதம் முழுக்க செல்லுபடியாகும் விதத்தில் ஜியோ நிறுவனம் இவற்றை அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய 30 நாள் கணக்கை நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio ரூ.181 ரீசார்ஜ் திட்டம்

Jio ரூ.181 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ நிறுவனம் இப்போது 30 நாள் வேலிடிட்டி உடன் வழங்கும் முதல் திட்டம் ரூ.181 என்ற விலையில் இருந்து துவங்குகிறது. இந்த திட்டம் ஆனது 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் முழுமையாக செயல்படும் 30 நாள் நன்மையோடு வருகிறது. ஆனால், இந்த திட்டம் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா ஆகியவற்றை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது உங்களுக்கான டேட்டா நன்மையை மட்டும் 30 நாட்களுக்கு வழங்கும்.

ஜியோவின் ரூ.241 திட்ட நன்மைகள்

ஜியோவின் ரூ.241 திட்ட நன்மைகள்

அடுத்தபடியாக நாம் பார்க்கவிருக்கும் ஜியோ நிறுவனத்தின் திட்டமானது ரூ.241விலையில் வருகிறது. இந்த திட்டம், அதன் பயனர்களுக்கு 40ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுடன் வருகிறது. முன்பு பார்த்த திட்டத்தை போலவே இந்த திட்டமும் செயல்படுகிறது. இந்த திட்டம் குறிப்பாக அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா போன்றவற்றை வழங்காது என்பது கவனிக்கத்தக்கது.

Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!

ஜியோவின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது உங்களுக்கு 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றிக்கான அணுகலையம் இந்த திட்டம் வழங்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோவின் ரூ.301 விலை திட்டத்தில் என்ன நண்மைகள் கிடைக்கிறது?

ஜியோவின் ரூ.301 விலை திட்டத்தில் என்ன நண்மைகள் கிடைக்கிறது?

அடுத்தபடியாக நாம் பார்க்கவிருக்கும் ஜியோ நிறுவனத்தின் திட்டமானது ரூ.301 விலையில் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஆனால், இந்த திட்டம் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா ஆகியவற்றை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

ஜியோவின் பெஸ்டான ரூ.259 ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் பெஸ்டான ரூ.259 ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த ரூ.259 திட்டமானது, உங்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் தினசரி தரவு நன்மை முடிந்த பின் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

இந்த திட்டத்தில் கிடைக்கும் எக்ஸ்டரா நன்மைகள் என்ன?

இந்த திட்டத்தில் கிடைக்கும் எக்ஸ்டரா நன்மைகள் என்ன?

மேலும், இந்த திட்டத்துடன் உங்களுக்கு JioCinema, JioTV, JioCloud மற்றும் JioSecurity உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் நிறுவனம் ஒரு தொகுப்பாக வழங்குகின்றது. இந்த திட்டத்துடன் 30 நாட்களுக்கு முழுமையான செல்லுபடியாகும் சேவையை பயனர்கள் பெறுகிறார்கள். இது ஒரு நல்ல ப்ரீபெய்ட் திட்டமாகும். பலர் 28 நாட்கள் திட்டத்தைப் பெறுவது குறித்தும், 30 நாட்கள் சேவையுடன் வந்த சலுகையைப் பெறுவது குறித்தும் புகார் அளித்துள்ளனர்.

ஜியோவின் ரூ. 239 விலை திட்டம் இன்னும் கிடைக்கிறதா?

ஜியோவின் ரூ. 239 விலை திட்டம் இன்னும் கிடைக்கிறதா?

இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம் இதே திட்டத்தை இன்னும் 28 நாட்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நன்மைகளுடன் கிடைக்கும் 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும் திட்டமானது உங்களுக்கு ரூ. 239 விலையில் கிடைக்கிறது. மேலும், ரூ. 20 செலுத்தினால், பயனர்களுக்கு ஒரு முழு மாதத்திற்கான (30 நாட்களுக்கு) நன்மைகளை இந்த புதிய திட்டத்தின் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?

ஜியோவின் 5ஜி சேவை எப்போது அறிமுகம் தெரியுமா?

ஜியோவின் 5ஜி சேவை எப்போது அறிமுகம் தெரியுமா?

ஜியோ இப்போது மும்முரமாக 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய முழு வேகத்தில் வேலை செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜியோ நிறுவனம் சுமார் 88,000 கோடிக்கு மேல் 5ஜி அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, ஜியோ தனது 5ஜி சேவையை இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் துவங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீங்களும் 5ஜிக்கு மாற ரெடியாக்கிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Top Most Recharged Jio Prepaid Recharge Plans With 30 Days Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X