இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?

|

ஸ்மார்ட்போன் (Smartphone) தயாரிப்பு நிறுவனங்கள், அவ்வப்போது தங்களது புதிய மொபைல் (Mobile) மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், இந்த மாதம் அறிமுகத்திற்கு வரிசையில் நிற்கும் முன்னணி நிறுவனங்களின் மொபைல் போன்களை (Mobile Phones) பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய சந்தைக்குள் லேட்டஸ்ட்டாக களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்களை (Latest New Smartphones) உடனே பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால், இந்த பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கும் மொபைல்களை (February Month Mobile Release Date and Models) பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். முதலில் எத்தனை ஸ்மார்ட்போன் சாதனங்கள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். அதற்குப் பின், இவை எந்த தேதியில் அறிமுகமாகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல ஒன்னு February 14 ரிலீஸ்.!

இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதோ.!

1. சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் (Samsung Galaxy S23,Galaxy S23+, Galaxy S23 Ultra)
2. ஒன்பிளஸ் 11 (OnePlus 11)
3. ஒன்பிளஸ் 11R (OnePlus 11R)
4. ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5)
5. போக்கோ எக்ஸ்5 ப்ரோ (POCO X5 Pro)
6. விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90, X90 Pro)
7. சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ (Xiaomi 13, Xiaomi 13 Pro)
8. சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி (Samsung Galaxy M54 5G)
9. iQOO நியோ 7 (iQOO Neo 7)
10. மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ (Moto Edge 40 Pro)
11. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி (Infinix Zero 5G)

இப்போது வரை நமக்கு தெரிந்த தகவலின் படி, மொத்தம் 11 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த பிப்ரவரி மாதம் வெளிவர இருக்கிறது. ஒவ்வொரு சீரிஸிலும் இருந்து தனி-தனியாக பார்க்கும் போது மொத்தம் 15 சாதனங்களை நாம் இந்த மாதத்தில் பெறவிருக்கிறோம் என்பதே உண்மை. சரி, இந்த மாதம் அறிமுகமாகும் டாப் புதிய சாதனங்கள் எந்த தேதியில் (Top Phones Lanching in February Dates) அறிமுகம் செய்யப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம்.

இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல ஒன்னு February 14 ரிலீஸ்.!

எந்த தேதியில் எந்த மொபைல் போன் மாடல் அறிமுகமாகிறது?

1. சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் கீழ் Samsung Galaxy S23,Samsung Galaxy S23+ மற்றும் samsung Galaxy S23 Ultra ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. இவை ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆகும்.

2. ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) ஆகிய ஸ்மார்ட்போன்களை நிறுவனம் வரும் பிப்ரவரி 7ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன.

3. ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் பிப்ரவரி 9ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

4. போக்கோ எக்ஸ்5 ப்ரோ (POCO X5 Pro) சாதனம் வரும் பிப்ரவரி 6ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.

5. விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90, Vivo X90 Pro) ஆகிய இரண்டு சாதனங்களும் பிப்ரவரி 3ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

6. சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ (Xiaomi 13, Xiaomi 13 Pro) சாதனங்கள் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சரியான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல ஒன்னு February 14 ரிலீஸ்.!

லவ்வர்ஸ் டே-க்கு (February 14th) எந்த நிறுவனம் புது போனை அறிமுகம் செய்கிறது?

7. சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி (Samsung Galaxy M54 5G) பட்ஜெட் விலையில் இந்தியாவில் இந்த மாதம் அறிமுகமாகிறது. ஆனால், இதன் அறிமுக தேதியை நிறுவனம் சஸ்பென்சாக வைத்துள்ளது.

8. iQOO நியோ 7 (iQOO Neo 7) ஸ்மார்ட்போன் சாதனம் வரும் பிப்ரவரி 16ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

9. மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ (Moto Edge 40 Pro) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மட்டும் நமக்கு தெரியவில்லை. ஆனால், இது இந்த மாதம் அறிமுகமாவது உறுதி.

10. இறுதியாக இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று வெளியாகப்போகும் புது ஸ்மார்ட்போன் என்றால், அது Infinix Zero 5G சாதனம் தான். Infinix நிறுவனம் இதன் அறிமுகத்தைப் பிப்ரவரி 14ம் தேதி (February 14) செட் செய்துள்ளது.

இந்த 11 மாடல்களில் எந்த புது ஸ்மார்ட்போன் உங்களை அதிகமாகக் கவர்ந்திருக்கிறது அல்லது எந்த பிராண்டின் போனை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Top Mobile Phones Launching In This February Month 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X