கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் பயனுள்ள இலவச தமிழ் அப்ளிகேஷன்கள்
கூகுள் ப்ளே ஸ்டோரில் பல அப்ளிகேஷன்கள் இலவசமாக கிடைக்கின்றது. பொழுதுபோக்கு, விளையாட்டு, செய்தி, என ஆன்டிராய்டு இயங்குதளத்தில் பல அம்சங்களுக்கும் செயலிகள் கிடைக்கின்றது. இங்கும் சில ஆன்டிராய்டு செயலிகளின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் செயலிகள் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்பதோடு இவை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கீழ் வரும் ஸ்லைடர்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் பயனுள்ள செயலிகளின் பட்டியலை பாருங்கள்..

தமிழ் காலன்டர்
தமிழ் மாதங்களின் தினசரி நாள்காட்டியாக இந்த செயலி இருக்கும்.

தமிழ் எஸ்எம்எஸ்
தமிழில் குறுந்தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த செயலி வழங்குகின்றது.

தமிழ் யோசி
இந்த செயலி விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள் மற்றும் பாடல்களை வழங்குகின்றது.

டிஎன்பிஎஸ்டி தமிழ்
இந்த செயலி தமிழ் நாடு பொது பணித்துறை மற்றும் பல அரசு துறை சார்ந்த பரீட்சை குறித்த தகவல்கள் மற்றும் பாடங்களை வழங்குகின்றது.

தமிழ் டிக்ஷனரி
இந்த செயலி ஆங்கில வார்த்தைகளை தமிழிலும், தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்க்க உதவுகின்றது.

தமிழ் கீபோர்டு
இந்த செயலி ஆன்டிராய்டு கருவிகளில் தமிழில் டைப் செய்ய அனுமதிக்கின்றது.

ஆல் தமிழ்
இந்த செயலி தமிழ் தொலைகாட்சி நிகழ்சிகளை ஆன்டிராய்டு கருவியில் பார்க்க வழி வகுக்கின்றது.

தமிழ் போட்டோ கமென்ட்
இந்த செயலி நகைச்சுவை தமிழ் புகைப்படங்களை வழங்குகின்றது.

சித்தா மெடிசின் இன் தமிழ்
இந்த செயலி எளிய சித்த மருத்துவ முறைகளை உங்களது ஆன்டிராய்டு கருவியில் வழங்குகின்றது.

தமிழ் குறிப்புகள்
இந்த செயலி எளிய வீட்டு உபயோகம், சமையல், மருத்தும் என பல உபயோகமான குறிப்புகளை வழங்குகின்றது.

தமிழில் மொழிபெயர்க்கும் உதவும் தரமான ஆப்ஸ்கள்
கூகுள் டிரான்ஸ்லட் (Google Translate)
கூகுள் நிறுவனத்தின் அல்டிமேட் ஆப்ஸ் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த கூகுள் டிரான்ஸ்லட் ஆப். இணைய வசதியில் 103 மொழிகளுக்கு இந்த ஆப் மொழியாக்கம் செய்வதுடன் ஆஃப்லைனில் 59 மொழிகளை மொழிபெயர்க்கவும் முடிகிறது. உங்கள் கேமரா மூலம் மொழிபெயர்க்கும் வசதி 37 மொழிகளில் உள்ளது. ஆடியோ மொழிபெயர்ப்பு வசதியும் இதில் உள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமே இதில் விளம்பரங்கள் கிடையாது முற்றிலும் இலவசம்.

தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர் (Tamil-English Translator) இந்த இலவச மொழிபெயர்ப்பாளர் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் வார்த்தைகள் மற்றும் முழுமையான வாக்கியங்களை விரைவாக மொழிபெயர்க்க முடியும். உடனடி மொழிபெயர்ப்பு பயன்பாடு பயணிகளுக்கு, மாணவர்களுக்கு மற்ற அணைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் குரல் உள்ளீடு முறையும் உள்ளது
இந்த இலவச மொழிபெயர்ப்பாளர் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் வார்த்தைகள் மற்றும் முழுமையான வாக்கியங்களை விரைவாக மொழிபெயர்க்க முடியும். உடனடி மொழிபெயர்ப்பு பயன்பாடு பயணிகளுக்கு, மாணவர்களுக்கு மற்ற அணைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் குரல் உள்ளீடு முறையும் உள்ளது.

குரல் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாளர் (Translate voice - Translator)
அற்புதமான குரல் மொழிபெயர்ப்பாளர், உலகின் எல்லா மொழிகளையும் குரல் உள்ளீடு முறையில் மொழிபெயர்க்கலாம். இந்த மொழிபெயர்ப்பாளர் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.இதில் பிரெஞ்சு,ஜேர்மன், அரபிக் போன்று 80 மொழிகளைக் குரல் உள்ளீடு முறையில் மொழிபெயர்க்கலாம்.இனி உங்கள் குரல் அணைத்து உலக மொழிகளிலும் ஒலிக்கும்.

யூ-அகராதி (U-Dictionary)
யூ அகராதி 38 சர்வதேச மொழிகளுக்கு ஆஃப்லைன் மொழியாக்கம் செய்வதுடன், வாட்ஸாப் மற்றும் வலைத்தளங்களில் உங்களுக்குப் புரியாத வார்த்தைகளைக் காப்பி செய்தல் போதும் நொடியில் மொழியாக்கம் செய்துவிடுகிறது. இதுமட்டுமில்லாமல் உங்கள் கேமரா மூலம் மொழிபெயர்க்கும் வசதியும் இதில் இருக்கிறது, உங்கள் முன்னாள் இருக்கும் ஆங்கில வார்த்தைகளை கேமரா வழி பார்த்தால் போதும் உடனே அதை மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்லிவிடும்.


Click it and Unblock the Notifications








