லெனோவோ கே4 நோட் : வாங்க தூண்டும் சிறப்பம்சங்கள்.!!

By Meganathan
|

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லெனோவோ நிறுவனத்தின் வைப் கே4 நோட் கருவியானது நேற்று வெளியானது. கடந்த ஆண்டு வெளியான லெனோவோ கே3 நோட் கருவியின் வெற்றியை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் கே4 நோட் கருவி சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

பட்ஜெட் விலையில் முடிந்தவரை அதிகப்படியான சிறப்பம்சங்களை அந்நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இந்த கருவியின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க இதுவே முக்கிய காரணம் என்றும் கூறலாம்.

தியேட்டர் மேக்ஸ்

தியேட்டர் மேக்ஸ்

லெனோவோ வைப் கே4 நோட் கருவியில் வழங்கப்பட்டிருக்கும் தியேட்டர்மேக்ஸ் அம்சமானது சாதாரண தகவலினை விர்ச்சுவல் ரியால்டி தரத்திற்கு மாற்றும் என கூறுப்பட்டுள்ளது. லெனோவோ விர்ச்சுவல் ரியால்டி தொழில்நுட்பம் மூலம் சக்தியூட்டப்படும் இந்த அம்சமானது பயனர்களுக்கு அதிக தரமுள்ள சினிமா அனுபவத்தை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

லெனோவோ கே4 நோட் கருவியில் டால்பி அட்மோஸ் தரத்தில் இரு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக தரமான ஆடியோ அனுபவம் பெற முடியும். இது போன்ற ஸ்பீக்கர் வகைகள் அதிக விலையுள்ள கூகுள் நெக்சஸ் 6 மற்றும் எச்டிசி கருவிகளில் மட்டுமே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

3ஜிபி ரேம்

3ஜிபி ரேம்

கே3 நோட் கருவியுடன் ஒப்பிடும் போது லெனோவோ வைப் கே4 நோட் கருவியில் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 64-பிட் மீடியாடெக் எம்டி6753 எஸ்ஓசி பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

லெனோவோ கே4 நோட் கருவியின் மற்றொரு சிறப்பம்சம் தான் கைரேகை ஸ்கேனர். கேமராவின் பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் இந்த சென்சார் கருவியை அன்லாக் செய்வதோடு வித்தியாச ஸ்வைப்களுக்கு வெவ்வேறு செயலிகளை திறக்கும் அம்சத்தினையும் வழங்குகின்றது குற்பபிடத்தக்கது.

என்எஃப்சி

என்எஃப்சி

லெனோவோ கே4 நோட் கருவியில் என்எஃப்சி சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை கொண்டு மற்ற மின்னணு கருவிகளுடன் 10 செ.மீ இடைவெளி வரை தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்.

பேட்டரி

பேட்டரி

இத்தனை அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும் இந்த கருவியில் சரியான பேக்கப் வழங்கும் நோக்கில் 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கே3 நோட் கருவியில் 2900 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read Here in Tamil some Top Features to buy Lenovo Vibe K4 note.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X