ஐபோன் 12 மினி, ஐபோன் 11 ப்ரோ மீது அபார தள்ளுபடி.. உடனே முந்துங்கள்..
ஆப்பிள் ஐபோன்களை சலுகை விலையில் வழங்குவதற்காக அமேசான் நிறுவனம் ஒரு பிரத்தியேக விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானில் ஆப்பிள் தின விற்பனை ஏற்கனவே நேரலைக்கு வந்து மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இந்த முறை, ஆப்பிள் ஐபோன் 11 தொடரின் சிறந்த போன்களுடன் சமீபத்திய ஐபோன் 12 தொடர்களில் உள்ள போன்களையும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.

ரூ. 6000 வரை தள்ளுபடி
இப்போது வழக்கமான தள்ளுபடியுடன் அமேசான் எச்.டி.எஃப்.சி கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஒப்பந்தத்தை மேலும் இனிமையாக்க வங்கி உங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் ரூ. 6000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். ஐபாட் வாங்க விரும்பும் பயனர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் ரூ. 3000 தள்ளுபடியைப் பெறலாம்.

ஆப்பிள் டே சேல்ஸ் விற்பனை
எச்.டி.எஃப்.சி கார்டுகளில் விலை இல்லாத ஈ.எம்.ஐ விருப்பங்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்த ஆப்பிள் டே சேல்ஸ் விற்பனையில் ஐபோன்கள் மீது கிடைக்கும் சில ஒப்பந்தங்கள் இங்கே கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே என்பதனால் வேகமாக உங்களுக்கான ஆப்பிள் ஐபோனை கைப்பற்றிக்கொள்ளுங்கள்.

ஐபோன் 12 மினி மீதான சலுகை
ஐபோன் 12 தொடரின் மிகச்சிறிய ஐபோன் மாடலான ஐபோன் 12 மினி இப்போது அமேசான் ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ .67,100 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.6000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. வெறும் ரூ.67,100 விலையில் ஐபோன் 12 மினி வாங்க இதுவே சரியான தருணம்.

ஐபோன் 12 மினி சிறப்பம்சம்
இந்த ஐபோன் சாதனம் மிக விரைவான சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இதில் A14 பயோனிக் சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோனில் 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. ஐபோன் 12 மினி ஒரு கிளாஸ் கவர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது எந்த ஸ்மார்ட்போன் கண்ணாடியையும் விடக் கடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 11 ப்ரோ மீதும் தள்ளுபடி
கேமராவை பொறுத்தவரையில், ஐபோன் 12 மினி 12MP அல்ட்ரா வைட் மற்றும் வைட் கேமராக்களுடன் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. நைட் பயன்முறை, டீப் ஃப்யூஷன், ஸ்மார்ட் எச்டிஆர் 3, 4K டால்பி விஷன் எச்டிஆர் பதிவு. முன்பக்கத்தில், நைட் மோட், 4K டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங் கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் முன் கேமரா உள்ளது. இதேபோல், இந்த விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மீதும் தள்ளுபடி கிடைக்கிறது.

ஐபோன் 11 ப்ரோ சிறப்பம்சம்
அமேசான் ஆப்பிள் டேஸ் விற்பனையில் ஐபோன் 11 ப்ரோ மீது மிகப்பெரிய தள்ளுபடி கிடைத்துள்ளது. இந்த ஐபோனின் 64 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ .79,900 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தள்ளுபடியுடன், அமேசான் பயனர்கள் தங்கள் பழைய சாதனங்களை எக்ஸ்செஞ் செய்துகொள்ள ரூ.12, 550 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இது 5.8 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ரூ.9,000 வரை சேமிக்க வாய்ப்பு
இது 12 எம்.பி அல்ட்ரா-வைட், ஆங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்களைக் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. நைட் மோடு, போட்ரைட் மோடு மற்றும் 4K வீடியோ 60fps வரை. முன்பக்கத்தில், போர்ட்ரெய்ட் மோடு, 4K வீடியோ மற்றும் ஸ்லோ-மோ ஆகியவற்றுடன் 12MP ட்ரூடெப்த் கேமரா உள்ளது எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 3,000 உடனடி தள்ளுபடி உட்பட ஐபாட்களில் ரூ.9,000 வரை சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications