இணைய குற்றவாளிகள் எண்ணிக்கை : டாப் நாடுகளில் இந்தியா.!!

By Meganathan
|

உலகம் எனலாம். உலகளாவிய தகவல்களை இணைய உலகில் மட்டும் உட்கார்ந்த இடத்தில் மிகவும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இவ்வுலகில் பல நன்மைகள் இருக்கும் அதே அளவு தீங்கையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது.

எங்கும் இணையம், எதற்கும் இணையம் என்றாகிவிட்ட உலகத்தில் சிக்கி தவிக்காத நாடுகளே இல்லை எனலாம். அரசு தரவுகள், ரகசியங்கள் மற்றும் வங்கி சார்ந்த தரவுகள் என இணையத்தில் இருக்கும் அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கும் குழு அல்லது தனி மனிதர்கள் என உலகெங்கும் சிதறி கிடக்கின்றனர். உலக நாடுகளை பொருத்த வரை இவர்கள் ஹேக்கர் என அழைக்கப்படுகின்றனர், அதாவது இணைய குற்றவாளிகள் அல்லது கிரிமினல்கள்..!

மக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது மற்றும் அரசாங்கத்திற்கு சேதம் விளைவிப்பது என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்படும் இணைய குற்றவாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

01

01

சைபர் கிரைம் நாடு #10 ஹங்கேரி

02

02

ஐஹோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் பல்வேறு நன்மை விளைவிக்கும் ஹேக்கிங் குழுக்கள் இயங்கி வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் ஹேக்கிங் மிக வேகமாக வளர்ந்து வருகின்றதோடு ஹங்கேரி தென் கொரியாவை பின் தள்ளி இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

03

03

சைபர் கிரைம் நாடு #09 இத்தாலி

04

04

உலக நாடுகளின் பட்டியலில் இத்தாலி 9வது இடத்தில் இருக்கின்றது. 1.6 சதவீத சைபர் குற்ற நடவடிக்கைகளில் இத்தாலி ஈடுப்பட்டு வருகின்றது. இத்தாலியில் லியுகி அவுரெய்மா மற்றும் டோனாட்டோ ஃபரான்டி அவுரெய்மா என இரு ஹேக்கர்கள் பிரபலமாக இருக்கின்றனர்.

05

05

சைபர் கிரைம் நாடு #08 இந்தியா

06

06

உலகளவில் இணைய குற்றவாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியா எட்டாவது இடம் பிடித்திருக்கின்றது. உலகின் தலைசிறந்த தகவல் தொலைதொடர்பு நிபுனர்கள் மற்றும் கணினி ஆய்வாளர்கள் இந்தியாவில் இருக்கின்றனர்.

07

07

சைபர் கிரைம் நாடு #07 ரோமானியா

08

08

ரோமானிய ஹேக்கர்கள் உலகின் 3.3 சதவீத இணைய குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். கிரிமினல் ஹேக்கர்களுக்கென தனி இடம் ரோமானியாவில் இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

09

09

சைபர் கிரைம் நாடு #06 பிரேசில்

10

10

அதிக ஹேக்கர் கிரிமினல்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் பிரேசில் இருக்கின்றது. உலகளவில் நடைபெறும் ஹேக்கிங் சம்பவங்களில் பிரேசில் மொத்தம் 3.3 சதவீதம் ஹேக்கிங் குற்றங்களில் ஈடுப்பட்டு வருகின்றது.

11

11

சைபர் கிரைம் நாடு #05 தாய்வான்

12

12

மொத்தம் 3.7 சதவீதம் ஹேக்கிங் சம்பவங்களில் ஈடுப்படும் தாய்வான் அதிக ஹேக்கர் குற்றவாளிகள் கொண்ட நாடுகளில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது. பட்டியலில் முன்னிலையில் இருந்த போதும் பல்வேறு நாட்டு ஹேக்கர்களும் தாய்வானின் முக்கிய தளங்கள் மற்றும் சைபர் நிறுவங்களை ஹேக் செய்வதில் அதிக கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

13

13

சைபர் கிரைம் நாடு #04 ரஷ்யா

14

14

உலகில் அதிக ஹேக்கர் கிரிமினல்களை கொண்ட நாடுகளில் நான்காம் இடத்தை பிடித்திருக்கும் ரஷ்யா உலகளவில் நடைபெறும் ஹேக்கிங் சம்பவங்களில் மொத்தம் 4.3 சதவீதம் ஆகும்.

15

15

சைபர் கிரைம் நாடு #03 துருக்கி

16

16

உலகளவில் அதிக ஹேக்கர் குற்றவாளிகளை கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கும் துருக்கி, உலகளவில் நடைபெறும் ஹேக்கிங் சம்பவங்களில் 5.6 சதவீதம் வகிக்கின்றது.

17

17

சைபர் கிரைம் நாடு #02 அமெரிக்கா

18

18

உலகளவில் நடத்தப்படும் ஹேக்கிங் குற்ற சம்பவங்களில் 10 சதவீதம் அமெரிக்காவில் இருந்து நடத்தப்படுகின்றது. உலகின் அதிக ஹேக்கிங் கிரிமினல்கள் கொண்ட நாடுகளில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

19

19

சைபர் கிரைம் நாடு #01 சீனா

20

20

உலகளவில் நடத்தப்படும் ஹேக்கிங் சம்பவங்களில் அதிகபட்சமாக 41 சதவீதம் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக உலகளவில் சீனா, ஹேக்கர்களின் கோட்டையாக பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Top Countries with Most Cyber Criminals Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X