Home
News

Black Friday Deals: ஐபோன், ரியல்மி, சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!

Black Friday Deals எனும் தலைப்பில் பிளிப்கார்ட் தளத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான் மற்றும் மி.காம் தளங்களிலும் Black Friday Deals என்ற தலைப்பில் ஸ்மார்ட்போன் உட்பட பல சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பில் ஆப்பிள்

குறிப்பாக Black Friday Deals தலைப்பில் ஆப்பிள் ஐபோன், சியோமி, ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள்அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு விற்பனையில் ரெட்மி

Black Friday Deals எனும் சிறப்பு விற்பனையில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.6,999-விலையில் வாங்க முடியும்.அதேபோல் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு ரெட்மி 9 ப்ரைம் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ரெட்மி பவர் பேங்க், ரெட்மி இயர்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ்ஆர்

ஐபோன் எக்ஸ்ஆர்

Black Friday Deals எனும் தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின் மூலம் 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை ரூ.38,999-விலையிலும், 128ஜிபி கொண்ட ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை ரூ.43,999-விலையிலும் வாங்க முடியும்.

 ஐபோன் எஸ்இ 2020

ஐபோன் எஸ்இ 2020

அதேபோல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகையின் மூலம் ஐபோன் எஸ்இ 2020 மாடலை ரூ.32,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்திற்கு சிறப்பு எக்ஸ்சேஞ் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்

Black Friday Deals சிறப்பு சலுகையின் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடலை ரூ.49,999-விலையில் வாங்கமுடியும். மேலும் இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.73,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி3

ரியல்மி சி3

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள Black Friday sale மூலம் 3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி சி3 ஸ்மார்ட்போனை ரூ.7,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி சி3 மாடலை ரூ.8,999-விலையில் வாங்க முடியம்.

ஸ்மார்ட்போன்களுக்கும்

பின்பு 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் வாங்க முடியும். அதேபோன் 8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 6 மாடலின் முந்தைய விலை ரூ.16,999-விலையில்-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு 15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரியல்மி 6 ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையிலும், ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனை ரூ.11,999-விலையிலும் வாங்க முடியம். அதேபோல் Realme Narzo 20 Pro மற்றும் realme X3 SuperZoom, realme X3, SuperZoom ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Top Black Friday Deals: Here the Best Offers on IPhone, Xiaomi, Realme and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X