Home
News

போட்டோகிராபர்களே பொறாமைப்படும் டாப் பெஸ்ட் கேமரா போன்கள்! இதைவிட்டா வேற எதுவுமே பெஸ்ட் இல்லை!

போட்டோகிராபர்களே பொறாமைப்படும் அளவிற்கு சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை (Top Best Camera Phones) பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில் உள்ள அணைத்து போன்களும் இந்த 2023 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2023 ஆம் வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில், சிறந்த கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை உங்களுக்காக தொகுத்துள்ளோம். பிரீமியம் தரத்தில், மிக சிறப்பான கேமராக்களுடன் வெளிவந்த போன்களில் எது சிறந்த போன் என்று பார்க்கலாம் வாங்க.

போட்டோகிராபர்களே பொறாமைப்படும் டாப் பெஸ்ட் கேமரா போன்கள்!

நமது பட்டியலில் இருக்கும் முதல் சாதனம் Vivo X90 Pro ஸ்மார்ட்போன் மாடலாகும். இது மிக சிறந்த கேமரா அம்சம் கொண்ட சூப்பர் ஸ்மார்ட்போன் மாடலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது Zeiss கேமரா டியூனிங் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50MP + 50MP + 12MP கொண்ட ட்ரிபிள் கேமராவுடன் 32MP செல்பி கேமராவுடன் வருகிறது. இதன் விலை ரூ.84,999 ஆகும்.

Apple iPhone 14 Pro and Pro Max ஸ்மார்ட்போன் சாதனம் தான் ஆப்பிள் வரிசையில் முதல் சாதனமாக 48MP பிரைமரி கேமராவை பெரும் ஐபோன் சாதனமாக உள்ளது. இதன் கேமரா அம்சம் மற்ற எல்லா போன்களை விடவும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் விலை ரூ.1,29,900 ஆகும்.

Samsung Galaxy S23 Ultra இந்த ஸ்மார்ட்போனை பார்த்தால் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். கேமரா அம்சம் மட்டுமின்றி, டிஸ்பிளே, பிராசஸர் என்று எல்லாமே இதில் அல்டிமேட். நிலவு வரை ஜூம் செய்து புகைப்படம் எடுத்த ஸ்மார்ட்போன் மாடலாக இது 200MP பிரைமரி கேமராவுடன் 10X ஜூம் உடன் வருகிறது. இதன் விலை ரூ.1,24,999 ஆகும்.

போட்டோகிராபர்களே பொறாமைப்படும் டாப் பெஸ்ட் கேமரா போன்கள்!

Xiaomi 13 Pro ஸ்மார்ட்போன் சாதனம் Leica உடன் கூட்டு சேர்ந்து மிகவும் அருமையான கேமரா அம்சத்தை வழங்கியுள்ளது. இந்த சாதனம் மூன்று 50MP லென்ஸ்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் ஏறக்குறைய DSLR கேமராவுக்கு நெருக்கமான வட்டத்திற்குள் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் தற்போதைய விலை ரூ.79,999 மட்டுமே.

OPPO Find N2 Flip என்பது ஒரு பிலிப் ஸ்மார்ட்போன் மாடலாகும். பொதுவாக பிலிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் கேமரா அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால், இந்த சாதனம் அதை எல்லாம் முறியடித்துவிட்டது. இந்த பிலிப் ஸ்மார்ட்போன் Hasselblad உடன் இணைந்து சிறந்த கேமரா அம்சத்தை உருவாக்கியுள்ளது. இது 50MP + 8MP ரியர் கேமராவுடன் 32MP முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.89,999 ஆகும்.

போட்டோகிராபர்களே பொறாமைப்படும் டாப் பெஸ்ட் கேமரா போன்கள்!

OnePlus 11 இந்த ஆண்டு அதிக மக்களின் கவனத்தை ஈர்த்த பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கிறது. இதில் அல்டிமேட் கேமரா அம்சம் இருப்பது மட்டுமின்றி, இதன் பெர்பார்மென்ஸ் அலறவிடுகிறது. ஒன்பிளஸ் சாதனங்கள் வழக்கம் போல Hasselblad இன் பிரத்தியேகமான கேமரா டியூனிங் உடன் இந்த சாதனம் வருகிறது. இது 50MP + 48MP + 32MP கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் விலை ரூ.56,999 மட்டுமே.

இறுதியாக நமது பட்டியலில் இருப்பது Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சாதனம் வெறும் சிறந்த கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட, நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை ப்ரொபெஷனல் ஸ்டைலில் எடிட் செய்யவும் அனுமதிக்கிறது. மாஜிக் இரேசர் (Magic Eraser) மற்றும் போட்டோ அன்பிலர் (Photo Unblur) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இதன் விலை ரூ.84,999 ஆகும்.

போட்டோகிராபர்களே பொறாமைப்படும் டாப் பெஸ்ட் கேமரா போன்கள்!

இந்த 7 ஸ்மார்ட்போன் மாடல்களும் மிரட்டலான கேமரா அம்சத்துடன் வருகின்றன. உண்மையிலேயே, உங்களுக்கு ஒரு சிறந்த கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் சாதனம் தான் வேண்டும் என்றால், கட்டாயம் உங்களுடிய செலெக்ஷன் இந்த பட்டியலில் இருந்து தான் வர வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top Best Camera Phones That Photographers Are Jealous Of Nothing Is Better Than These Phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X