கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய டெலிகிராம் செயலியின் தரமான 8 வசதிகள்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த நிலையில் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதிலும் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.

டெலிகிராம் பயன்படுத்தும் மக்கள்

அப்படி டெலிகிராம் பயன்படுத்தும் மக்கள் தெரிந்தகொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. அதன்படி இப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய டெலிகிராம் செயலியின் தரமான 10 வசதிகளைப் பற்றிய சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. தனித்துவமான வீடியோ எடிட்டிங்

1. தனித்துவமான வீடியோ எடிட்டிங்

டெலிகிராம் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் முன் அதனை திருத்துவதற்கான விருப்பங்கள் உள்ளது. இது வெறும் எடிட்டர் அடிப்படை மற்றும் திருப்பு கருவி மட்டுமல்ல, முழு அளவிலான எடிட்டிங் பயன்பாடும்கூட. அதாவது இந்த வீடியோ எடிட்டிங் அம்சமானது RGB (சிவப்பு, பச்சை, நீலம்) வளைவு போன்ற விருப்பங்களுடன் வருகிறது. பின்பு உங்களது வீடியோக்களின் உண்மையான வண்ணத்தில் சரிசெய்ய உதவுகிறது. குறிப்பாக சாச்சுரேஷன், மாறுபாடு, வெளிப்பாடு முதலிய

பலவற்றைச் சரிசெய்யலாம்.

2.சைலன்ட் மெசேஜஸ் மற்றும் ஷெட்யூல்ட்டு வசதி

2.சைலன்ட் மெசேஜஸ் மற்றும் ஷெட்யூல்ட்டு வசதி

டெலிகிராம் செயலி ஆனது நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டிய மெசேஜ்களை ஷெட்யூல் செய்ய அனுமதிக்கிறது. அதேபோல் நீங்கள் பெறுநரை தொந்தரவு செய்ய விரும்பாதபோது ஒலி இல்லாமல் சைலன்ட் மெசேஜ்களையும் அனுப்பலாம். உங்கள் மேனேஜருக்கு நீங்கள் ஒரு மெசேஜை அனுப்ப விரும்பும் போது, அவர் ஒரு முக்கியமான வேலையில் இருந்தால் அல்லது ஒரு நண்பர் தங்கள் குடும்பத்தினருடன் வெளியே இருக்கும்போது அவர்களுக்கு முக்கியமான தகவலை அனுப்ப விரும்பினால் இது நிச்சயமாக உதவும்.

குறிப்பாக நீங்கள் ஷெட்யூல்ட்டு மற்றும் சைலன்ட் மெசேஜை அனுப்ப விரும்பினால் மெஸ்ஜை டைப் செய்த பின்னர், சென்ட் பட்டனை லாங் பிரஸ் செய்ய வேண்டும். இது ஷெட்யூல்ட்டு மற்றும் சைலன்ட் மெசேஜ் விருப்பங்களை காண்பிக்கும்.

3.ஸ்லோ மோட் வசதி

3.ஸ்லோ மோட் வசதி

அதாவது குழு ஸ்பேமில் சில உறுப்பினர்களை தொடர்ச்சியான செய்திகளுடன் வைத்திருப்பது எந்தவொரு குழு நிர்வாகியும் சமாளிக்க விரும்பாத ஒன்று. குறிப்பாக டெலிகிராமில் இது தொந்தரவாக இருக்கிறது. உங்களது குழுக்கள் 2,000 உறுப்பினர்களை கொண்டிருக்கலாம்.

ஆனாலும் டெலிகிராம் இதற்கு ஒரு தனித்துவமான தீர்வை வழங்குகிறது.

உங்களது குழுக்களில் ஸ்லோ மோட் பயன்முறையை நீங்கள் அமைக்கலாம் அங்குப் பயனர்கள் முன்னமைக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு செய்தியை மட்டுமே அனுப்ப முடியும். ஒரு உதாரணமாக, நீங்கள் இதை 30 வினாடிகளுக்கு அமைத்தால், எல்லா பயனர்களும் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரே ஒரு செய்தியை மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அமைக்க குழுவின் பெயரைத் தட்டி, திருத்து ஐகானைத் தேர்வுசெய்யவும் (பென்சில் வடிவத்தில்). அனுமதிகளுக்குச் சென்று அந்தப் பக்கத்தின் அடிப்பகுதியில் ஸ்லோ மோட் பயன்முறை அமைப்பைக் கண்டறிந்து மாற்றியமைக்கமுடியும்.

Android ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி?Android ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி?

4.அருகில் உள்ளவர்களை எளிமையாக கண்டறியலாம்

4.அருகில் உள்ளவர்களை எளிமையாக கண்டறியலாம்

டெலிகிராம் செயலி ஆனது அருகில் உள்ள தொடர்புகளை கண்டுபிடிக்க அனுமதிக்கிறது. இது உங்களுக்கு அருகில் உள்ள ஒருவரை அவரின் மொபைல் எண்ணைக் குறிப்பிடாமலேயே அவர்களின் காண்டாக்ட்-ஐ கைமுறையாகச் சேமிக்காமலேயே ஆட் செய்ய அனுமதிக்கிறது.

இந்த அம்சத்தை பயன்படுத்த டெலிகிராம் செயலியில் வலதுபுறமான ஸ்வைப் செய்வதன் மூலம் ஹாம்பர்கர் மெனுவுக்குச் சென்று காண்டாக்ஸ்-ஐ தேர்வுசெய்க. பின்பு Find People Nearby என்பதை கிளிக் செய்யவும். இப்போது சில தொடர்புகளின் பட்டியலை காண்பீர்கள்.

5.தனித்துவமான ஈமோஜிஸ்

5.தனித்துவமான ஈமோஜிஸ்

டெலிகிராம் செயலியில் வழக்கமான ஈமோஜிகள் அவற்றின் உணர்ச்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக்க மேம்படுத்த அனமேஷன் செய்யப்பட்ட அவதாரத்தில் அணுக கிடைக்கிறது. ஆனாலும் இது GIF களில் இருந்து வேறுபட்டது. இந்த ஈமோஜிகளை இயக்க Settings-Chat Settings- Large Emojis-க்கு செல்லவும் அவ்வளவுதான்.

6.போல்ஸ் வசதி

6.போல்ஸ் வசதி

இந்த டெலிகிராம் செயலியின் குழுக்களுடன் வினாடி வினாக்களையும் வாக்கெடுப்புகளையும் அமைக்கலாம். இது ட்விட்டர் கருத்துக்கணிப்புகளைப் போலவே செயல்படுகின்றன. அதாவது ஒரே ஒரு பதில் சரியாக இருக்கும் வினாடி வினா வாக்கெடுப்புகளை அமைக்க டெலிகிராம் உங்களை அனுமதிக்கிறது.

இதை செயல்படுத்த டெலிகிராம் குழுவில் ஒரு வாக்கெடுப்பை அமைக்க குழுவிற்குச் சென்று இணைப்பு ஐகானை அழுத்தவும் காகிதக் கிளிப்பின் வடிவத்தில் இருக்கும்). இது உங்களது சமீபத்திய புகைப்படங்களின் கீழே உள்ள ஐகான்களை இங்கே ஸ்க்ரோல் செய்து, வாக்கெடுப்பு ஐகானைத் தேர்வுசெய்யவும் அவ்வளவுதான்.

7.கஸ்டம் தீம்ஸ் அம்சம்

7.கஸ்டம் தீம்ஸ் அம்சம்

இந்த டெலிகிராம் செயலி, அதன் இன்டர்பேஸை பயனரின் விருப்பப்படி தனிப்பயனாக்க அனுமதிக்கிறது. மேலும் இதை செய்ய பயனர்கள் பயன்பாட்டில் உள்ள பல வகையான தீம்ஸ் மற்றும் கலர் காம்பினேஷன்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம்.மேலும் இது சாட் பேக்கிரவுண்ட் மற்றும் மெசேஜ்களின் நிறங்களை மாற்றும்.

இவற்றை செயல்படுத்த ஆப்பின் இடதுபுறத்தில் இருக்கு ஹாம்பர்கர் மெனுவை ஸ்லைட் செய்யவும், பின்பு Settings > Chat Settings-ஐ கிளிக் செய்யவும். இங்கே தேர்வுசெய்ய பல தீம்ஸ் மற்றும் கலர் விருப்பங்களைக் காண்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

8.கிளவுட் ஸ்டோரேஜ்

8.கிளவுட் ஸ்டோரேஜ்

டெலிகிராம் செயலியானது ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பட்ட சேவ்டு மெசேஜஸ் இடத்தை கொண்டுள்ளது. அதாவது

இடது பக்கம் உள்ள ஹாம்பர்கர் மெனுவிலிருந்து இதை அணுகலாம். இதன் மூலம் உங்கள் சாட்களைப் போலவே, முக்கியமான மெசேஜ்களையும் டெலிகிராமின் பாதுகாப்பான கிளவுட்டில் பேக்கப் செய்து வைக்கலாம்.

நீங்கள் அனைத்து வகையான கோப்புகளையும் இதற்குள் அனுப்பலாம். இருப்பினும், நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு கோப்பும் 1.5 ஜிபிக்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 7 Telegram features you might not have known: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X