லீக் தகவல்கள் : ட்ரீம் என்ற ரகசிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் சாம்சங்..!

அடுத்த வெளியாகும் கேலக்ஸி எஸ்8 கருவிதான் சாம்சங் நிறுவனத்தின் எதிர்காலம் என்றே கூறலாம். அது வெற்றி பெறுமா..? மீண்டும் சந்தையில் கோட்டையை பிடிக்குமா.?

|

கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடிப்புகளுக்கு உள்ளான சமாச்சாரத்தில் சாம்சங் நிறுவனம் தனது கருவிகளையெல்லாம் திரும்ப பெறும் கடைசி நிலையில் உள்ளதென்பது ஒருபக்கமிருக்க அதன் பெயர் மற்றும் பிரபலத்தன்மை முற்றிலும் பாழாய் போவதில் இருந்து இந்த கொரிய நிறுவனத்தை காப்பாற்ற எதுவும் முன்வரவில்லை. எதிர்பாராத வெடிப்புகள் - சாம்சங் பெயரை நிலைகுலைய வைத்துவிட்டன.

இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 கருவியின் மீது தான் உள்ளது. அந்த கருவியின் வெற்றி தோல்வியை பொருத்ததே சாம்சங் நிறுவனத்தின் எதிர்காலம் என்பது வெளிப்படை. அக்கருவி சார்ந்த பல லீக் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதில் மிக சுவாரசியமான சுடச்சுட வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் லீக் தகவல்கள் இங்கே.!

பிளாட் பேனல்

பிளாட் பேனல்

செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியானது சாதாரண பிளாட் பேனல் கேலக்ஸி எஸ்7 கருவியை விட அதிகம் விற்பனையாகியுள்ளது என்பது தெரியவந்தது. எனவே, சாம்சங் ஸ்மார்ட்போன் பிளாட் பேனல் மாறுபாடுகளை தள்ளிவிட்டு எட்ஜ் டிஸ்ப்ளே கொண்ட இரண்டு கேலக்ஸி எஸ்8 கருவிகளை வெளியிடலாம்.

இரண்டு எட்ஜ் டிஸ்ப்ளே கருவி

இரண்டு எட்ஜ் டிஸ்ப்ளே கருவி

முன்பு கூறியது போல, சாம்சங் ஸ்மார்ட்போன் தட்டையான டிஸ்ப்ளே மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டால், நாம் இந்த தென் கொரிய நிறுவனத்திடம் இரண்டு எட்ஜ் டிஸ்ப்ளே கருவிகளை மட்டுமே இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.

வடிவமைப்பு மாற்றங்கள்

வடிவமைப்பு மாற்றங்கள்

2017-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் ஆண்டு விழா நடைபெறும். எனவே, ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் தங்கள் ஸ்மார்ட்போனை சீர்திருத்துவதற்கு முயலும். எனவே, சாம்சங் அடுத்த தலைமுறை ஐபோன்கள் போட்டியிடும் வண்ணம் பாரிய வடிவமைப்பு மாற்றங்களை நிகழ்த்தி கேலக்ஸி எஸ்8 கருவியை வெளியிட திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹெட்போன் ஜாக்

ஹெட்போன் ஜாக்

சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவியை போலவே அதன் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்கை நீக்கி விடலாம் என்று திட்டமிட்டுள்ளதாம்.

ட்ரீம் மற்றும் ட்ரீம் 2

ட்ரீம் மற்றும் ட்ரீம் 2

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியான ஒரு வதந்தியின் கீழ் சாம்சங் அதன் இரண்டு தயாரிப்புகளை ட்ரீம் மற்றும் ட்ரீம் 2 ஸ்மார்ட்ஃபோன்கள் என்று அழைத்துக்கொள்வதாக கூறியது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 830

குவால்காம் ஸ்னாப்டிராகன் 830

எதிர்பார்த்தபடி, சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியானது அட்ரெனோ 630 ஜிபியூ உடன் அதன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 830 செயலி மூலம் இயக்கப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4கே டிஸ்ப்ளே

4கே டிஸ்ப்ளே

சாம்சங் நிறுவனம் ட்ரீம் என்று பெயர் வைத்து ரகசியமாக காட்சி தொழில்நுட்பம் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது என்றும் ஆக கேலக்ஸி எஸ்8 கருவி மாறுபாடுகளில் ஒன்று ஒரு 4கே டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

ஸ்மார்ட்போன் துறையில் இது தாமதம் தான். அதாவது கேலக்ஸி எஸ்8 தொடறில் 6ஜிபி ரேம் ஒருங்கிணைக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நெட்'இல் லீக் ஆனது நோக்கியா டேப்ளெட் இல்லை, ஸ்மார்ட்போன் தான்.!

Best Mobiles in India

English summary
Top 8 Hot Rumors About Samsung Galaxy S8. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X