இந்தியாவில் வாங்கசிறந்த 7 வைஃபை ரவுட்டர்கள் : (வீடு, அலுவலகம்)

நெட்கியர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வைஃபை ரவுட்டர்கள் விற்பனையில் அதிக லாபாம் பெற்று வருகிறது.!

By Prakash
|

இந்தியாவில அதிகப்படியான வைஃபை ரவுட்டர்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன குறிப்பாக வீடு மற்றும் அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலும் பயன்படுகிறது இந்த வைஃபை ரவுட்டர்கள்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ள புதிய டேட்டா ஆபர் என்ன?

ஆப்பிள் ஏர்போர்ட் எக்ஸ்ட்ரீம் வயர்லெஸ்ரவுட்டர் மிக உயர்ந்த விலையில் விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் விலைக்கு தகுந்த தரம் இதனுள் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நல்ல வடிவமைப்புடன் கூடிய உயர்- அம்சங்களை வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம்.

இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா மாடல் போன்கள்

சிஸ்கோ லின்க்ஸிஸ்:

சிஸ்கோ லின்க்ஸிஸ்:

சிஸ்கோ லின்க்ஸிஸ் சிறந்த வயர்லெஸ் ரூட்டர்ஸ் எனக் கூறப்படுகிறது, இது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபார துறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. லின்க்ஸிஸ் உலகெங்கிலும் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். இது சிறந்த பட்ஜெட் ரூட்டர்ஸ் எனத் தொவிக்கப்பட்ள்ளது, மேலும் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் இதனுள் அடக்கம். 300எம்பிபிஎஸ் வேகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவியை இணையதளம் மூலம் எளிதாக வாங்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப குறிப்புகள்:
பிராண்ட்: சிஸ்கோ
நிறம்: கருப்பு
உயரம்: 19.1 செ.மீ.
அகலம்: 24.1 செ.மீ.
எடை: 567 கிராம்
கணினி நினைவகம் :டிரேம்
வயர்லெஸ் வகை: 802.11என்
இயங்குதளம்: விண்டோஸ், மேக்

நெட்கியர் டபல்யூஎன்ஆர்614 என்300

நெட்கியர் டபல்யூஎன்ஆர்614 என்300

நெட்கியர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வைஃபை ரவுட்டர்கள் விற்பனையில் அதிக லாபாம் பெற்று வருகிறது. இதை உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்துகின்றனர். நெட்கியர் வீட்டிற்கும், வணிகத்திற்கும் சேவை வழங்குனர்களுக்கும் குறைந்த செலவில் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் வருகிறது. மேலும் 300எம்பிபிஎஸ் வேகத்தில் இந்த ரவுட்டர்ஸ் செயல்படும், இது சிறந்த குணாதிசயங்களுடன் முதலிடம் வாய்ந்த வயர்லெஸ் எனக் கூறப்படுகிறது, தற்போது இவை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் கிடைக்கிறது.

தொழில்நுட்ப குறிப்புகள்:
பிராண்ட்: நெட்கியர்
நிறம்: வெள்ளை
எடை: 200 கிராம்
மாடல்: வயர்லெஸ் என்300ரவுட்டர்ஸ்
இயங்குதளம் : 2000, விண்டோஸ்: எக்ஸ்பி, யூனிக்ஸ் அல்லது லினக்ஸ், மேக் ஓஎஸ், விஸ்டா 7, 8
ஆண்டெனாக்கள் எண்ணிக்கை: 2
லேன் போர்ட்: 4

டிபி - லிங்க் :

டிபி - லிங்க் :

டிபி - லிங்க் என்பது உலகளாவிய பிரபலமான சிறந்த நிறுவனம் ஆகும். மேலும் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் இதை உபயோகம் செய்கின்றனர், 150எம்பிபிஎஸ் வேகத்தில் இந்த வயர்லெஸ் ரவுட்டர் செயல்படுகிறது, அதன்பின் இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் ரவுட்டர்களில் இதுவும் ஒன்றாகும். டிபி - லிங்க் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப குறிப்புகள்:
பிராண்ட்: லிங்க்
மாடல்:150எம்பிபிஎஸ் வயர்லெஸ்என்
வயர்லெஸ் வேகம்: 150எம்பிபிஎஸ்
பவர் சப்ளை:9வி டிசி- 0.6ஏஎம்பி
உயரம்: 33 மிமீ
அகலம்: 174 மிமீ
இயங்குதளம்:விண்டோஸ் 98எஸ்இ,எக்ஸ்பி, யூனிக்ஸ் அல்லது லினக்ஸ், மேக் ஓஎஸ், விஸ்டா 7, 8

 நெட்கியர்டபல்யூஜிஆர்614 வயர்லெஸ்-என் 150 ரவுட்டர்  :

நெட்கியர்டபல்யூஜிஆர்614 வயர்லெஸ்-என் 150 ரவுட்டர் :

நெட்கியர்டபல்யூஜிஆர்614 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வைஃபை ரவுட்டர்கள் விற்பனையில் அதிக லாபாம் பெற்று வருகிறது. வணிகத்திற்கும் சேவை வழங்குனர்களுக்கும் அதிகம் பயன்படுகிறது. மேலும் இவை அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது.

தொழில்நுட்ப குறிப்புகள்:
பிராண்ட்: நெட்கியர்
மாடல் :வயர்லெஸ்-என் 150 ரவுட்டர்
வயர்லெஸ் வேகம்: 150 எம்பிபிஎஸ்
எடை: 399 கிராம்
உயரம்: 28 மிமீ
அகலம்: 175 மிமீ
அதிர்வெண்: 2.4 ஜிகாஹெர்ட்ஸ்

டி-லிங்க்:

டி-லிங்க்:

டி-லிங்க் ரவுட்டர்கள் பெரும்பாலும் அலுவலக மற்றும் வீட்டு பயன்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. யுஎஸ்பி 2.0 போர்ட் உடன் இவை வெளிவருகிறது, மேலும் இவை சிறந்த வேகத்தை தருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவை குறைந்தவிலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்தியாவில் அதிக மக்கள் இந்த ரவுட்டரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

தொழில்நுட்ப குறிப்புகள்:
பிராண்ட்: டி-லிங்க்
மாடல் :டிஎஸ்எல்-2750யு வயர்லெஸ் என் 300 ஏடிஎஸ்எல்2 வைஃபை
வயர்லெஸ் வேகம் : 300எம்பிபிஎஸ்
உயரம்: 33 மிமீ
அகலம்: 116.8 மிமீ
அதிர்வெண்: 2.484 ஜிகாஹெர்ட்ஸ்
வெளிப்புற ஆண்டென்னா: 2
யுஎஸ்பி :யுஎஸ்பி 2.0
லேன் போர்ட் :4

ஆசஸ் என்600:

ஆசஸ் என்600:

ஆசஸ் சிக்னல் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும்ஆசஸ் என்600 கம்பியில்லா கிகாபிட் ரவுட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ரவுட்டர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் இதனுள் அடக்கம்.

தொழில்நுட்ப குறிப்புகள்:
பிராண்ட்: ஆசஸ்
நிறம்: கருப்பு
உயரம்: 6 சென்டிமீட்டர்
அகலம்: 14.5 சென்டிமீட்டர்
ரேம் அளவு: 128 எம்பி
மாடல் : ஆர்-என்56யு

ஆப்பிள் ஏர்போர்ட் எக்ஸ்ட்ரீம் வயர்லெஸ்ரவுட்டர்:

ஆப்பிள் ஏர்போர்ட் எக்ஸ்ட்ரீம் வயர்லெஸ்ரவுட்டர்:

ஆப்பிள் ஏர்போர்ட் எக்ஸ்ட்ரீம் வயர்லெஸ்ரவுட்டர் மிக உயர்ந்த விலையில் விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் விலைக்கு தகுந்த தரம் இதனுள் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நல்ல வடிவமைப்புடன் கூடிய உயர்- அம்சங்களை வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் ஏர்போர்ட் எக்ஸ்ட்ரீம் வயர்லெஸ் ரவுட்டர்அழகான உயர் விலை கொண்ட சிறந்த ரவுட்டர்களில் ஒன்றாகும். மேலும் வீட்டிலும் பணியிடத்திலும் மிக அருமையாக பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Top 7 Best Wi-Fi Routers in India – For Home Office Purpose 2017 Updated : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X