Home
News

2016-ஆம் ஆண்டின் டாப் 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள், முதல் இடம் எதற்கு.?

இந்த டாப் 5 பட்டியலில் நீங்கள் எதிர்பார்க்கும் வாட்ஸ்ஆப் அம்சம் இடம் பெறாமலும் போகலாம், சற்றும் எதிர்பார்க்காத அம்சம் இடம் பிடிக்கவும் செய்யலாம்.

By Muthuraj

வாட்ஸ்ஆப் - ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் கட்டாயமாக இடம் பெறும் ஒரு மெஸேன்ஞ்சிங் ஆப் ஆகும். அப்படியான வாட்ஸ்ஆப்பின் மிகசிறந்த ஆண்டாக 2016-ஆம் ஆண்டு கருதப்படும் அளவிற்கு வாட்ஸ்ஆப் அதன் பயனர்களுக்கு பல வகையான அம்சங்களையும், அதன் வழியாக பல சுவாரசியமான விடயங்களையும் வழங்கியது.

வாட்ஸ்ஆப் வழங்கிய அம்சங்களை பெரும்பாலான பயனர்கள் பெற்று வரும் நிலையில், 2016-ல் வெளியான வாட்ஸ்ஆப்பின் எந்த அம்சம் இந்தாண்டின் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது என்பது தான் இங்கு கேள்வி.!? நீங்கள் எதிர்பார்க்கும் வாட்ஸ்ஆப் அம்சங்கள், இந்த டாப் 5 பட்டியலில் இடம் பெறாமலும் போகலாம், சற்றும் எதிர்பார்க்காத அம்சம் இடம் பிடிக்கவும் செய்யலாம். அதை நீங்களே ஒரு முறை பார்த்து விடுங்கள்..!

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - ஐந்தாம் இடம்

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - ஐந்தாம் இடம்

க்ரூப் சாட்டில் இடம்பெறும் @ அம்சம் - வாட்ஸ்ஆப் க்ரூப் சாட்டில் ஒரே நேரத்தில் பலர் உரை செய்திகளை அனுப்ப யார் யாருக்கான பதிலை அளிக்கிறார்கள் என்பதை கண்டறியும் பிரதான குழப்பத்திற்கு முடிவு கட்டும் நோக்கத்தில் வெளியானதே @ அம்சம். இதை பயன்படுத்தி யார் யாருக்கான பதிலை அளிக்க விரும்புகிறார்களோ @ குறியீடை பயன்படுத்தி அவரின் பெயரை பதிவு செய்து பதில் அளிக்கலாம். மற்றும் க்ரூப் சாட்டில் குறிப்பிட்ட மேஸேஜிற்கு ரிப்ளை செய்ய, க்ரூப்பின் உள்ளுக்குள்ளேயே பார்வேட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - இரண்டாம் இடம்

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - இரண்டாம் இடம்

கிப் - வாட்ஸ்ஆப் கிப் (GIF) அம்சத்தை அதன் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. அதன் மூலம் பயனர்கள் எளிதாக தங்கள் சொந்த கிப் வீடியோக்களை உருவாக்கி தங்கள் நண்பர்களுக்கு அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - மூன்றாம் இடம்

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - மூன்றாம் இடம்

டூ ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் - முன்பை விட வாட்ஸ்ஆப் இப்போது அதிக பாதுகாப்பானதாக உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக அதன் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆப்ஷனை அறிமுகம் செய்த பின்னரே மிக பாதுகாப்பான ஒன்றாக மாறிவிட்டது. அதாவது பயனர் அவரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரைப்டட்தனை ஒரு இரகசிய கடவுக்குறியீடு கொண்டு செட்டிங் செய்து கொள்ள முடியும். இதை நிகழ்த்துவது எப்படி என்ற டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - இரண்டாம் இடம்

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - இரண்டாம் இடம்

வீடியோ ஸ்ட்ரீமிங் - வீடியோ காலிங் அம்சத்தை அறிமுகப்படுத்திய பின் வாட்ஸ்ஆப் அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் வசதியை வெளியிட்டது. இந்த வசதியை பயன்படுத்தி பயனர்கள் நண்பர்கள் அனுப்பிய விடியோவை டவுன்லோட் செய்யாமலேயே பார்க்க முடியும். பயனர் எந்த விதமான பப்பரிங் சிக்கலும் இல்லாமல் வீடியோ பார்க்க முடியும், மற்றும் அதே நேரத்தில் வீடியோ பதிவிறக்கமும் செய்ய முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் -  முதல் இடம்

#2016 சிறந்த வாட்ஸ்ஆப் அம்சம் - முதல் இடம்

வீடியோ கால் - நீண்ட கால சோதனைக்கு பின்னர் வாட்ஸ்ஆப் இறுதியாக அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் ஆகிய அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்ஆப்பின் வீடியோ அழைப்பு அம்சமானது மற்ற போட்டியாளர்களின் வீடியோ தளங்கள் போலல்லாமல், 2ஜி மற்றும் வரையறுக்கப்பட்ட நெட்ர்க்கில் கூட வேலை செய்யுமே என்றுகூறப்படுகிறது. பயனர் வீடியோ காலில் இருக்கும் போதே ஒரே நேரத்தில் உரை செய்தியையும் அனுப்ப முடியும் என்பது சிறப்பம்சம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறும் மற்றும் எடிட் செய்யும் அம்சம்.!?

Best Mobiles in India

English summary
Top 5 updates of Whatsapp happened in 2016. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X