Home
News

டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..

நீங்கள் வாங்க போகும் ஸ்மார்ட்போனில் இனி எது இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இருக்கிறதா என்று செக் செய்த பின்னர் வாங்குங்கள். ஏன் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் போன்களை வாங்க வேண்டும்? இதற்கான காரணம் என்ன?

ஸ்மார்ட்போன்கள் (smartphones) இப்போது மிகவும் பவர்புல் சாதனமாக உருமாறிவருகின்றன. சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்க ஸ்மார்ட்போன்கள் இப்போது முன்பை விட அதிக வேகத்தில் இயங்க துவங்கியுள்ளன. அதிக வேகத்தில் இயங்குவதனாலேயே, ஸ்மார்ட்போன்களில் உள்ள சார்ஜ் வேகமாக தீர்ந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி இன்றைய ஸ்மார்ட்போன்களில் பெரிய சைஸ் பேட்டரிகளும் (bug size battery phones) இடம்பெற துவங்கியுள்ளன. இதை மிதமான வேகத்தில் சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜ்

5000mAh பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் சாதனத்தை நார்மல் சார்ஜ்ஜிங் வேகத்தில் சார்ஜ் செய்ய குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. இவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க யாரும் மனம்வருவதில்லை. ஆகையால் தான், அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 0% முதல் 100% வரையிலான சார்ஜ்ஜை வெறும் 20 நிமிடங்களில் அடைந்திட முடியும்.

பட்ஜெட் விலையில் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் மொபைல் போன்கள் (Ultra fast charging mobile phones) எது? இதில் குறைந்த விலை முதல் மிட்-பட்ஜெட் செக்மென்ட் (mid budget segment fast charging smartphones) விருப்பம் வரை வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன்கள் எது? என்பதை அளசி ஆராய்ந்து, இந்த டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் பட்டியலை (Top 5 ultra fast charging phones list)உங்களுக்காக தொகுத்துளோம்.

டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் பட்டியல்
1. ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3)
2. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4)
3. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus)
4. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro)
5. ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro)

1. ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3):
- 4,500mAh பேட்டரி
- 150W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
- விலை: ரூ. 23,989 முதல்

டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜ்

2. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4):
- 5,500mAh பேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ. 24,999 முதல்

3. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus):
- 5,000mAh பேட்டரி
- 120W பாஸ்ட் சார்ஜிங்
- 0% முதல் 100% வரை 19 நிமிட சார்ஜிங் நேரம்
- விலை: ரூ. 31,999 முதல்

4. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro):
- 4500mAh பேட்டரி
- 125W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ. 31,999 முதல்

5. ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro):
- 5,160mAh பேட்டரி
- 120W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ. 36,999 முதல்

Best Mobiles in India

English summary
Top 5 Ultra Fast Charging Mobiles Smartphones List Under Mid Budget Segment Oneplus iQOO Realme Redmi Motorola
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X