அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல்: இந்த 5 ஸ்மார்ட் வாட்ச்களை இதை விட கம்மி விலையில் வாங்கவே முடியாது.!

|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கான சந்தை முழுமையாக வலுவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கான சந்தையும் மிக வேகமாக முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாகக் கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மட-மடவென உயர்ந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சுதந்திர தின சிறப்பு விற்பனையான அமேசான் க்ரேட் பிரீடம் டே சேல்ஸ் விற்பனை தற்பொழுது நேரடியில் உள்ளது. இது இன்று முதல் துவங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சிறப்பு விற்பனையில் ஏராளமான சிறந்த ஒப்பந்தங்கள்

சிறப்பு விற்பனையில் ஏராளமான சிறந்த ஒப்பந்தங்கள்

இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான சிறந்த ஒப்பந்தங்கள் டன் கணக்கில் கிடைக்கின்றது. அமேசான் நிறுவனத்தின் தனித்துவமான பிரிவுகள் மூலம் அட்டகாசமான சலுகை மற்றும் தள்ளுபடிகளை நிறுவனம் இம்முறை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த விற்பனையில் தற்பொழுது லேப்டாப்கள் மீது ரூ. 30,000-க்கும் மேல் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. லேப்டாப் மீதான சலுகை பற்றித் தெரிந்துகொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.

பட்ஜெட்டில் கிடைக்கும் 5 ஸ்மார்ட் வாட்ச்

பட்ஜெட்டில் கிடைக்கும் 5 ஸ்மார்ட் வாட்ச்

இப்போது இந்த சிறந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது அபாரமான சலுகை கிடைக்கிறது. தற்பொழுது நாம் பார்க்க போவது இந்த விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகை கொண்ட ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம். இது மாணவர்களுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும், பெண்களுக்கும் அவர்களின் பட்ஜெட்டில் ஒரு சிறந்த ஸ்மார்ட் வாட்சை வாங்குவதற்கு அனுமதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சிறந்த சலுகையுடன் கிடைக்கும் 5 ஸ்மார்ட் வாட்ச் தகவலைப் பார்க்கலாம்.

Amazon Great Freedom Festival 2021: பெஸ்டான லேப்டாப் ரூ. 34000 சலுகையுடன்.. கேமிங் லேப்டாப் கூட இருக்கு..Amazon Great Freedom Festival 2021: பெஸ்டான லேப்டாப் ரூ. 34000 சலுகையுடன்.. கேமிங் லேப்டாப் கூட இருக்கு..

1. மேக்சிமா மேக்ஸ் ப்ரோ எக்ஸ் 4 ஸ்மார்ட் வாட்ச் (Maxima Max Pro X4 Smartwatch)

1. மேக்சிமா மேக்ஸ் ப்ரோ எக்ஸ் 4 ஸ்மார்ட் வாட்ச் (Maxima Max Pro X4 Smartwatch)

பார்ப்பதற்கே மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இந்த புதிய மேக்சிமா மேக்ஸ் ப்ரோ எக்ஸ் 4 ஸ்மார்ட் வாட்ச் வாங்க இதுவே சரியான நேரம். இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.3' கொண்ட வட்ட டச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இத்துடன் இதில் 10+ ஸ்போர்ட்ஸ் மோடு, ஹார்ட் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் மற்றும் கஸ்டமைஸ் செய்யும் வாட்ஸப் பேஸ் உடன் வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் இதை நீங்கள் வெறும் ரூ.3,999 விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 5,999 ஆகும். இந்த விற்பனையில் உங்களுக்கு ரூ. 2,000 சலுகை கிடைக்கிறது.

2. பாஸ்ட்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் 3.0 டிஜிட்டல் பிளாக் டயல் யுனிசெக்ஸ் அடல்ட் வாட்ச் (Fastrack Reflex 3.0 Digital Black Dial Unisex-Adult Watch-SWD90067PP02A)

2. பாஸ்ட்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் 3.0 டிஜிட்டல் பிளாக் டயல் யுனிசெக்ஸ் அடல்ட் வாட்ச் (Fastrack Reflex 3.0 Digital Black Dial Unisex-Adult Watch-SWD90067PP02A)

இந்த பாஸ்ட்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் 3.0 ஸ்மார்ட் வாட்ச் சாதனம் யுனிசெக்ஸ் அடல்ட் வாட்ச் மாடலாக வந்துள்ளது. இந்த சாதனம் புள் டச் டிஸ்பிளேவுடன் மிரட்டலான நான்கு வண்ணங்களில் வருகிறது. இந்த சாதனம் 10 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுள் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,995 என்று அமேசான் பட்டியல் காட்டுகிறது. இந்த பிரீடம் டே சிறப்பு விற்பனையில் இதன் விலை ரூ. 750 குறைக்கப்பட்டு தற்பொழுது வெறும் ரூ. 2,245 விலையில் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது.

3. பிஃபிட் ஜென் 1 சிங்கிள் டச் யுனிசெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் (Bfit Gen 1 Single touch Unisex smartwatch)

3. பிஃபிட் ஜென் 1 சிங்கிள் டச் யுனிசெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் (Bfit Gen 1 Single touch Unisex smartwatch)

இந்த பிஃபிட் ஜென் 1 சிங்கிள் டச் யுனிசெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல, இது சிங்கிள் டச் அம்சம் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 15 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுள் உடன் ஹார்ட் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 4,950 என்று அமேசான் பட்டியல் காட்டுகிறது. இந்த பிரீடம் டே சிறப்பு விற்பனையில் இதன் விலை ரூ. 2,955 குறைக்கப்பட்டு தற்பொழுது வெறும் ரூ. 1,995 விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

4. மேக்சிமா மேக்ஸ் ப்ரோ எக்ஸ் 2 ஸ்மார்ட் வாட்ச் (Maxima Max Pro X2 Smartwatch)

4. மேக்சிமா மேக்ஸ் ப்ரோ எக்ஸ் 2 ஸ்மார்ட் வாட்ச் (Maxima Max Pro X2 Smartwatch)

நாம் இந்த பதிவில் முதலில் பார்த்த ஸ்மார்ட் வாட்ச் மாடல் Maxima Max Pro X4 ஆகும். இது அதன் எக்ஸ் சீரிஸ் இல் இருக்கும் மேக்சிமா மேக்ஸ் ப்ரோ எக்ஸ் 2 ஸ்மார்ட் வாட்ச் மற்றொரு மாடலாகும். இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.4' இன்ச் முழு டச் கலர் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 9H டெம்ப்பர் கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. இதில் 11 ஸ்போர்ட்ஸ் மோடு, ஹார்ட் மானிட்டர், 10 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று அனைத்து அம்சங்களும் உள்ளது. இதன் அசல் விலை 4,999 ஆகும். சிறப்புச் சலுகையாக ரூ. 1,472 விலை குறைக்கப்பட்டு, தற்பொழுது வெறும் ரூ. 3,527 விலையில் கிடைக்கிறது.

5. பிரெஞ்சு கனெக்ஷன் ஆர் 4 ஸ்மார்ட் வாட்ச் (French Connection R4 series smartwatch)

5. பிரெஞ்சு கனெக்ஷன் ஆர் 4 ஸ்மார்ட் வாட்ச் (French Connection R4 series smartwatch)

இந்த புதிய பிரெஞ்சு கனெக்ஷன் ஆர் 4 சீரிஸ் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் முழு டச் டிஸ்பிளே உடன் வருகிறது. இதில் SPO2, ஹார்ட் மானிட்டர், பிளட் பிரஷர் மானிட்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் அமேசான் பட்டியலில் ரூ. ₹8,995 என்ற அசல் விலையைக் காண்பிக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட் வாட்ச் ரூ. 4,196 சலுகையுடன் வெறும் ரூ. 4,799 விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 5 Smart Watches on Sale at Amazon Great Freedom Festival 2021 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X