Home
News

கிங் மாதிரி ரூ.15,000 விலையில் போர் செய்யும் புது போன்கள்.. கெத்து காட்டும் அம்சம். தரலோக்கள் விலை..

இந்த போன்களில் துடிப்பான டிஸ்பிளே, பிராசஸர், நல்ல கேமராக்கள், நீண்ட பேட்டரி ஆயுள் போன்ற சிறப்பான அம்சங்கள் உள்ளன. சியோமி (Xiaomi), டெக்னோ (TECNO), விவோ (Vivo) மற்றும் போக்கோ (POCO) போன்ற சீன பிராண்டுகள் இந்த மாற்றத்தின் பெரும் பகுதியாகும்.

இந்த பிராண்டுகள் தொடர்ந்து ரூ.15,000 விலை வரம்பிற்கு கீழ் புதிய போன்களை வழங்குகின்றன. இந்த போன்கள் என்னென்ன சலுகைகளை வழங்குகின்றன என்பதைப் பார்ப்போம். இந்த பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களின் விபரங்களை பற்றி பார்க்கலாம்.

கிங் மாதிரி ரூ.15,000 விலையில் போர் செய்யும் புது போன்கள்..

ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G)
Redmi 12 5G ஆனது பட்ஜெட்டில் அதிகம் விரும்பப்பட்ட 5G ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கிறது. ஏனெனில், இந்த போன் அமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது 6.79' இன்ச் FHD+ டிஸ்பிளேவை பெற்றுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட் உடன் வருகிறது. 50MP டூயல் கேமராவுடன் இது 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் உடன் வரும். இதன் விலை ரூ.14,499 ஆகும்.

டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro)
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TECNO Pova 5 Pro மொபைல் 6.78' இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. இது நத்திங் ஃபோன் (2) போலவே உள்ளது. நீங்கள் கேம்களை விளையாடும்போது, நோட்டிபிகேஷன் மற்றும் அழைப்புகளைப் பெறும்போது, ​பேட்டரி குறைவாக இருக்கும்போது இதன் பேக்லைட் LED-கள் ஒளிரும். இதன் விலை ரூ.14,999 முதல் துவங்குகிறது.

விவோ Y27 (Vivo Y27)
Vivo Y27 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.15,000 விலை கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாகும். இது 6.64' இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளே, 50MP உடன் டூயல் கேமராக்கள் உடன் வருகிறது. இது 6ஜிபி வழக்கமான ரேம் மற்றும் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் வருகிறது. இது 44W ஃப்ளாஷ்சார்ஜ் உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 14,999 ஆகும்.

கிங் மாதிரி ரூ.15,000 விலையில் போர் செய்யும் புது போன்கள்..

போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G)
POCO M6 Pro 5G இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரூ.15,000 விலைக்கு கீழ், 6.79' இன்ச் FHD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் வருகிறது. இது 50MP பிரைமரி கேமரா, IP53 ரேட்டிங், 5,000mAh பேட்டரி மற்றும் பல அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.இதன் விலை ரூ. 10,999 முதல் துவங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் இப்போது விற்பனையில் வாங்க கிடைக்கின்றன. உங்களுக்கு பிடித்தமான பிராண்ட் எது என்று பார்த்துவிட்டு, உங்கள் தேர்வை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால், இந்த பட்டியலில் உள்ள எல்லா ஸ்மார்ட்போன் மாடல்களும் தரமான அம்சத்துடன் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. கூடுதல் சலுகை பெற விரும்புவோர், உங்கள் வங்கி கார்டை பயன்படுத்தி 10% முதல் கூடுதல் சலுகையை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Mobiles Under Rs 15000 From Redmi POCO Tecno Vivo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X