Home
News

25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 Mobile-கள்! 9 நிமிடத்தில் 50% சார்ஜ்-ஆ? மின்னல் வேகம்னா இதனா?

மொபைல் (Mobile) மற்றும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பே சிறந்த கேமரா அம்சம் வேண்டும்.. அதற்கு பிறகு நீடித்து நிலைக்கும் பேட்டரி வேண்டும்.. குறிப்பாக சூப்பர் வேகத்தில் சார்ஜ் ஆகும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்குவது பற்றி பேசும்போது, ​​பேட்டரி திறனை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். பிங்க் வாட்ச், இசைக் கேட்பது, கேம்களை விளையாடுவது, மின்னஞ்சல்களை அணுகுவது போன்ற பல காரணங்களால் இப்போது ஸ்மார்ட்போன்கள் முன்பை விட முக்கியமானதாகிவிட்டது.

25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 Mobile-கள்! மின்னல் வேகம்டா!

25 நிமிடங்களில் 100% முழுமையாக சார்ஜ் ஆகும் டாப் 5 மொபைல்கள்!

இதனால், அதிகமான பேட்டரி கொண்ட போன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும், குறிப்பாக விரைவாக சார்ஜ் ஆகும், சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் 1% முதல் 100% வரை வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் டாப் 5 ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 Mobile-கள்! மின்னல் வேகம்டா!

1. IQOO 11

IQOO 11 என்பது 5G சாதனமாகும், இது 5000 mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 120W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இது 6.78' இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்திற்கான ஆதரவுடன் வருகிறது.

2. OnePlus 11R

ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இது சாதனத்தை 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இந்த சாதனம் 50 எம்பி பிரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 Mobile-கள்! மின்னல் வேகம்டா!

3. Redmi Note 12 Pro Plus

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 4,980 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த சாதனம் 19 நிமிடங்களில் சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்கிறது. 5ஜி உடன் இந்த ஸ்மார்ட்போன் 6.16' இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டருடன் வருகிறது.

4. Xiaomi 12 Pro

Xiaomi 12 pro ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 4,600 mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜரைப் வழங்குகிறது. இது பூஸ்ட் மோடில் 18 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனை சாதாரண பயன்முறையில் சார்ஜ் செய்தால், 100 சதவீதம் சார்ஜ் செய்ய சுமார் 24 நிமிடங்கள் ஆகும். மேலும், சாதனம் 50W வயர்லெஸ் சார்ஜிங்குடன் வருகிறது.

25 நிமிடத்தில் 100% சார்ஜ் ஆகும் டாப் 5 Mobile-கள்! மின்னல் வேகம்டா!

5. Xiaomi 13 Pro

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 13 Pro சாதனம் 2K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,820 mAh பேட்டரி உள்ளது. இது 4 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யக் கூடியது. மேலும் ஸ்மார்ட்போன் 9.2 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது Qualcomm Snapdragon 8th Generation 2 சிப்செட்டில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனங்கள் அனைத்தும் வெறும் 25 நிமிடங்களுக்குள் 1% முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் செய்கிறது. பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புபவர்கள் இந்த போன்களை மிஸ் செய்யவே கூடாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Mobile that Charge 100% in 25 Minutes 50% charge in 9 minutes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X