ரூ.10,000-திற்குள் பெஸ்டான டாப் 5 போன்கள்.! கண்ணை மூடிட்டு வாங்க பல காரணம் இருக்கா?
அதிக செலவு இல்லாமல், வெறும் ரூ.10,000 விலைக்குள் நீங்கள் எதிர்பார்க்கும் அணைத்து அம்சங்களையும் வழங்கும் ஒரு பெஸ்டான மொபைல் போன் வேண்டுமா? இதோ உங்களுக்காக ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் போன்களை பட்டியலிட்டுள்ளோம். வாங்க லிஸ்டை பார்க்கலாம்.
இந்தியாவில் 10000 ரூபாய்க்கு குறைவான விலையில் பல மொபைல் போன்கள் (Mobile Phone Under Rs 10,000) வாங்க கிடைக்கின்றன. இருப்பினும், அவை மலிவு விலையில் நம்பகமான டிவைசா என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது. 10000 ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த போன்களை பிரித்தெடுக்க, அதன் டிஸ்பிளே, பெர்ஃபார்மென்ஸ், கேமரா மற்றும் பேட்டரி போன்ற அம்சங்களை ஆராய்ந்து, இப்போது வாங்க கிடைக்கும் ஆகச்சிறந்த மொபைல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1. ரெட்மி 10 (Redmi 10)
இந்த ரெட்மி 10 (Redmi 10) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ.9,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது 6.7' இன்ச் கொண்ட HD+ LCD டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது Gorilla Glass 3 உடன் வருகிறது. இது Snapdragon 680 சிப்செட் உடன் இயங்குகிறது. இதில் 50MP+2MP பின்புற கேமரா மற்றும் 5MP முன்பக்க செல்பி கேமராவுடன் வருகிறது. இது 18W சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரி உடன் வருகிறது.
2. போக்கோ சி55 (Poco C55)
இந்த Poco C55 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ.9,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது 6.7' இன்ச் கொண்ட HD+ டிஸ்பிளே உடன் இது MediaTek Helio G85 சிப்செட்டை கொண்டுள்ளது. இதில் 50MP+VGA பின்புற கேமரா மற்றும் 5MP முன்பக்க செல்பி கேமராவுடன் வருகிறது. இது 10W சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி உடன் வருகிறது.

3. ரெட்மி ஏ+ (Redmi A1+)
ரெட்மி இடமிருந்து கிடைக்கும் மற்றொரு பெஸ்ட் மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும். இது வெறும் ரூ.7,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த டிவைஸ் 6.52' இன்ச் உடைய HD+ LCD டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. MediaTek Helio A22 மூலம் இது இயங்குகிறது. கேமரா பற்றி பேசுகையில், இது 8MP+VGA பின்பக்க கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவை ஆதரிக்கிறது. இது 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
4. மோட்டோ இ32 (Moto E32)
இது ரூ.9,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம் 6.5' இன்ச் கொண்ட HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. MediaTek Helio G37 சிப்செட் உடன் இயங்குகிறது. கேமரா அம்சத்தை பொறுத்தமட்டில், இது 50MP+2MP மற்றும் 8MP கேமராவை கொண்டுள்ளது. முந்தைய ஸ்மார்ட்போன் மாடல் போலவே இதுவும் 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

5. லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G)
நமது பட்டியலில் இருக்கும் இறுதி மாடல் இதுவாகும். இந்த போனை ஆல்ரவுண்டர் என்றும் சொல்லலாம்.. அல்லது ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். காரணம், இது உங்களுக்கு மலிவு விலையில் 5ஜி உடன் பல மிரட்டலான அம்சங்களை வழங்குகிறது. இதன் விலை வெறும் ரூ.10,999 மட்டுமே. இது 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.5' இன்ச் கொண்ட HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது MediaTek Dimensity 700 சிப்செட்டில் இயங்குகிறது. இதில் 50MP+2MP+VGA கேமரா பின்புறத்திலும், 8MP முன்புறத்தில் உள்ளது. இது 10W சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. ரூ.10,000 விலைக்குள் இந்த 2023 ஆம் ஆண்டில் புது மொபைல் சாதனம் வாங்க விரும்புவோர்கள் கட்டாயமாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை கருத்தில் கொள்வது சிறப்பானது.


Click it and Unblock the Notifications








